'உத்தவ் தாக்ரே தலைமையில் அரசு' - மகாராஷ்டிரா அரசியல் இழுபறி முடிவுக்கு வருகிறதா?

மகாராஷ்டிரா

மகாராஷ்டிர மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக உத்தவ் தாக்ரே பதவியேற்பதற்கு கட்சிகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எனவே, மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்பார் என்று தெரிகிறது,

"உத்தவ் தாக்ரே தலைமையில் ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகத்துக்கு இடமில்லை. எனினும் இன்னும் சிலவற்றை விவாதிக்க வேண்டியுள்ளது. நாளை செய்தியாளர் சந்திப்பில் விவரங்கள் தெரிவிக்கப்படும்," என சரத் பவார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் பாஜக கூட்டணி 163 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 98 தொகுதிகளிலும் வென்றன.

மகாராஷ்டிராவின் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் (இடது) மற்றும் உத்தவ் தாக்கரே

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும் பாஜக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என்று கணித்த நிலையில், பாஜகவால் 105 தொகுதிகளில்தான் வெற்றிபெற முடிந்தது.

இதனால், 2014ல் வென்றதைவிட பாஜகவின் வெற்றி எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 15 தொகுதிகளுக்கு மேல் குறைந்துள்ளது,

பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா, 56 தொகுதிகளில் வென்றது.

எதிர்க்கட்சியான காங்கிரஸ் 44 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் பெற்றன.

பாஜக - சிவசேனை கூட்டணி பெரும்பான்மை பெற்றும், முதலமைச்சர் பதவியை இரு கட்சிகளும் தலா 2.5 ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டதால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் எழுந்தது.

சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் (இடது) மற்றும் சிவசேன கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே.

இது தேர்தலுக்கு முன்னரே ஒப்புக்கொள்ளப்பட்டது என சிவசேனை கூறியது. ஆனால், முதல்வர் பதவியை ஆட்சிக்காலத்தின் சரிபாதி காலத்துக்கு பகிர்ந்து கொள்வது குறித்து முன்னரே பேசவில்லை என பாஜக தெரிவித்தது.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 20 நாட்கள் ஆகியும் மகாராஷ்டிரா மாநிலத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் நிலவுவதால் அந்த மாநிலத்தின் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த இந்தியக் குடியரசுத் தலைவருக்கு நவம்பர் 12ஆம் தேதி பரிந்துரை செய்தார்.

அதை குடியரசுத் தலைவரும் ஏற்றுக்கொண்டார். இதன் காரணமாக, ஆளுநர் ஆட்சி மகாராஷ்டிரத்தில் நடைபெற்று வருகிறது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :