ராகுல் காந்தியின் குடியுரிமை விவகாரம் - மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிரிட்டன் குடிமகன் என்பதால், அவர் தேர்தலில் போட்டியிடவும், மக்களவைக்குத் தேர்வு செய்யப்படவும் தடை விதிக்க இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தள்ளுபடி செய்துள்ளது.
ஏதோ ஒரு பிரிட்டன் நிறுவனத்தின் ஆவணங்களில் அவர் பிரிட்டன் குடிமகன் என்று குறிப்பிடப்பட்டிருந்தால் அவர் பிரிட்டன் குடிமகன் ஆகிவிடுவாரா என்று கூறி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஜெய் பகவான் கோயல் என்பவர் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது என்று பார் அண்ட் பெஞ்ச் இணையதளம் தெரிவிக்கிறது.
நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் இந்த அமர்வில் அங்கம் வகித்தனர். இந்த வழக்கைத் தொடர்ந்த ஜெய் பகவான் கோயல் இந்து மகாசபை உறுப்பினராவார்.

பட மூலாதாரம், Getty Images
ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இந்திய உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கடந்த வாரம் தாக்கல் செய்யபட்ட வேறொரு மனுவில் ராகுல் காந்தியின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








