''அறப்போராட்டங்களுக்கு செவி சாய்ந்திருந்தால் இந்நிலை உருவாகியிருக்குமா?''

சென்னையில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியைக் காணவந்த ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஐபிஎல் போட்டிகளை உற்சாகமாகக் காண விரும்பும் ரசிகர்கள் மீது இத்தனை கெடுபிடிகள் அவசியமா? இது முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற காவல்துறையின் வாதம் சரியா? என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

போராட்டக்களமாக மாறிய அண்ணாசாலை
படக்குறிப்பு, போராட்டக்களமாக மாறிய அண்ணாசாலை

இதற்கு வாசகர்கள் தெரிவித்த கருத்துகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.

''அறப் போராட்டங்களின் வாயிலாக மக்கள் கேட்கும் வாழ்வாதார உரிமைகளை பெற்றுக் கொடுத்திருந்தால் விளையாட்டை காண வருவோரிடம் கட்டுப்பாடுகள் விதிக்கும் சூழல் உருவாகியிருக்காது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றால் முன்னமே விளையாட்டை வேறு மாநிலத்திற்கு மாற்றிருக்க வேண்டும். இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு உரிமைப் போராட்டங்களுக்கிடையே விளையாட்டை ரசிக்கச் செல்வது என்பது நம்மைக் கண்டு நாமே சிரிப்பதற்கு சமமாகும்'' என பேஸ்புக்கில் எழுதியுள்ளார் சக்தி சரவணன்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

வாதம் விவாதம் பகுதியில் பின்னூட்டம் இட்டுள்ள துரை முத்துச்செல்வம், ''முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று கட்டுப்பாடுகள் விதிப்பது சரியல்ல. கிரிக்கெட்டிற்கும் காவேரி பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்? மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றால் மத்திய அரசு தொடர்புடைய நடவடிக்கைகளை நிறுத்தலாம். அதை விட்டுவிட்டு மாநில அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தினால் எப்படி மத்திய அரசுக்கு வலிக்கும் என தெரியவில்லை'' என்கிறார்.

வாதம் விவாதம்
X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

''பார்ப்பவர்களுக்கு கெடுபிடி, அரசுக்கு அது முன்னெச்சரிக்கை நடவடிக்கை. இந்த கெடுபிடியில் ரசிகர்கள் போய் விளையாட்டை ரசிக்க வேண்டுமா? விவசாயமா விளையாட்டா யோசிக்க வேண்டும்'' என எழுதியுள்ளார் சரோஜா பாலசுப்பிரமணியம்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: