'டிசம்பர் 4-ஆம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டார்': திவாகரன்
முதலமைச்சர் ஜெயலலிதா டிசம்பர் 4-ஆம் தேதியே இறந்துவிட்டார் என ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்திருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
உடல்நலக் குறைவின் காரணமாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவின் காரணமாக 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் உடல் நலம் தேறிவந்த நிலையில், டிசம்பர் 4ஆம் தேதியன்று அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு, டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் கூறிவந்த நிலையில், அவரது மரணம் குறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த ஆணையம் தற்போது பலரது வாக்குமூலங்களைப் பதிவுசெய்துவருகிறது.
இந்த நிலையில், மன்னார்குடியில் நடந்த விழாவில் பேசிய திவாகரன், தான் நான்காம் தேதி இரவு மருத்துவமனைக்குச் சென்றதாகவும் அன்று மாலை 5.15 மணிக்கே முதல்வர் மாரடைப்பில் இறந்துவிட்டதாகத் தெரியவந்ததாகவும், அதன் பிறகு இயந்திரங்களில்தான் அவர் வைக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவமனையின் இயக்குனர் பிரதாப் ரெட்டியிடம் அது குறித்து கேட்டபோது, தமிழகம் முழுவதும் உள்ள தங்களது மருத்துவமனையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியுமா என்று கேட்டதாகவும் திவாகரன் கூறினார்.
மத்திய அரசைச் சேர்ந்த ஒருவர் அப்போது மருத்துவமனையில் இருந்ததாகவும் அவருக்கு இது குறித்துத் தெரியும் என்றும் திவாகரன் கூறியிருக்கிறார்.
பிற செய்திகள்
- கிரிக்கெட்: வெளிநாட்டு மண்ணில் மீண்டும் தொடரை இழந்தது இந்தியா
- ஏர் இந்தியா: உடைந்த கழிவறை, ஓடும் எலிகள் மற்றும் கனிவான கவனிப்பின் கதைகள்
- ஹைதராபாத்தின் கடைசி நிஜாம்: வரலாறு சொல்லும் சுவாரஸ்ய தகவல்கள்
- ஆறு மாதத்தில் தேர்தல் வந்தால் சந்தீப்பீர்களா ? ரஜினிகாந்த் பதில்
- ஜல்லிக்கட்டை பார்க்க வந்த அப்பாவிகள் பலியானதற்கு யார் பொறுப்பு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








