சீன எல்லையில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி

பட மூலாதாரம், Getty Images
இந்திய விமானப்படைக்கு சொந்தமான Mi-17 V5 ரக ஹெலிகாப்டர் பராமரிப்பு பணி சோதனையின் ஒரு பகுதியாக, வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் பறந்துகொண்டிருந்தபோது, இன்று காலை 6 மணிக்கு விபத்துக்குள்ளானது.
இதில், இந்திய விமானப் படையின் ஐந்து வீரர்களும், ராணுவத்தின் இரண்டு வீரர்களும் உயிரிழந்தனர்.
ஒரு வீரர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படையின் மூத்த அதிகாரி தெரிவித்ததாக பி டி ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
விபத்து நடந்த இந்திய-சீனா எல்லைப்பகுதி அருகே மீட்புக்குழுவினர் மீட்புப்பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும், இந்த விபத்து குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Mi-17 V5 ரக ஹெலிகாப்டர் அதிநவீன ராணுவ போக்குவரத்து ஹெலிகாப்டராக இருக்கும் நிலையில், நாட்டில் ஏற்படும் அதிக எண்ணிக்கையிலான விமான விபத்துகளுக்காக இந்தியாவின் முதிர்ந்து வரும் விமானப்படை மீது அடிக்கடி குற்றஞ்சாட்டப்பட்டுவருகிறது.
கடந்த முப்பதாண்டுகளில், 170க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர் மற்றும் விமானங்களின் விமானிகள் உயிரிழந்துள்ளதாக ஏ எஃப் பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பழைய விமானங்களை மாற்றுவதற்காக விமானப்படை பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்து வருகிறது. எனினும் புதிய விமானங்களை கொள்முதல் செய்யும் நடைமுறை தாமதமாகி வருகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












