இந்திய விவசாயிகளும், கடனும்
இந்தியாவில் உள்ள 24.39 கோடி குடும்பங்களில், 17.91 கோடி குடும்பங்கள் கிராமங்களில் வசிக்கின்றனர். மேலும் அவர்கள் விவசாயத்தை சார்ந்தே வாழ்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
இவர்களில்:
67.10 சதவீதத்தினர் குறு விவசாயிகள் . அவர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கும் குறைவான நிலம்தான் இருக்கும்.
17.91% சதவீதத்தினர் சிறு விவசாயிகள். அவர்களுக்கு ஒன்றிலிருந்து இரண்டு ஹெக்டேர்கள் வரை நிலம் இருக்கும்.
10.04% சதவீதத்தினர் அரைவாசி குறு விவசாயிகள் - அவர்களுக்கு இரண்டிலிருந்து நான்கு ஹெக்டேர்கள் நிலம் வரை சொந்தமாக இருக்கும்.
மத்திய தர விவசாயிகள் 4.25 சதவீதம். அவர்களுக்கு நான்கிலிருந்து 10 ஹெக்டேர் நிலம் இருக்கும்.
கடைசியாக, 0.70 சதவீத விவசாயிகளே 10 ஹெக்டேருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் பெரு நிலக்கிழார்கள்.
தகவல்: விவசாயக் கணக்கெடுப்பு 2010-11

இந்தியப் பொருளாதாரத்துக்கு விவசாயிகளின் பங்களிப்பு என்ன ?
இந்தியாவின் 2 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தில் 15 சதவீதம் விவசாய உற்பத்தியிலிருந்து வருகிறது.
நாட்டின் தொழிலாளர்களில் 48.9 சதவீதம் விவசாயத்துறையில் இருக்கின்றனர்.

விவசாய நெருக்கடி
ஆனால், இந்தியாவின் விவசாயக் குடும்பங்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கடனில் இருக்கின்றனர்.
அதுதான் விவசாயிகள் தற்கொலைக்கு முக்கிய காரணம்.
1995-2014 காலகட்டத்தில் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

அரசுகளின் விவசாயக் கடன் தள்ளுபடிகள்
உத்தரப்பிரதேசம்
1.5 கோடி உ.பி விவசாயிகளின் சுமார் 36,000 கோடி ரூபாய் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
மஹாராஷ்டிரா
40 லட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகளின் 30,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்
தமிழ்நாடு
20 லட்சம் சிறு மற்றும் குறு விவசாயிகளின் 7,760 கோடி ரூபாய் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஏன் கடன் தள்ளுபடிகள் பொருளாதாரத்தை பாதிக்கின்றன?
விவசாயக் கடன் தள்ளுபடிகள் 2019-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன், ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம், அதாவது 40 பிலியன் அமெரிக்க டாலர்களுக்கு சமமாகும் என்று அமெரிக்க வங்கியான, மெரில் லிஞ்ச் கூறுகிறது.

இது இந்தியாவில் ஏற்கனவே வராக் கடன்களாகக் கணக்கிடப்படும் சுமார் 150 பில்லியன் டாலர்கள் கடன் சுமையால் திணறிக்கொண்டிருக்கும் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளின் மீது அழுத்தத்தை மேலும் கூட்டும்.
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்













