பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு: சமூக ஊடகங்களில் தீயாக கருத்துகள்

சென்னை மெரினாவில் அமைந்துள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் 40 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினார்.

முதல்வர் ஓ பி எஸ்சுக்கு பேஸ்புக்கில் பெருகும் ஆதரவு

அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது தான் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டதாக எழுப்பிய குற்றச்சாட்டுகளை அடுத்து சமூக வலைத்தளங்களில் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

#paneer என்ற தலைப்பில் ட்விட்டர் தளத்திலும், பேஸ்புக்கிலும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பிபிசி தமிழின் நேயர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அவற்றில் சில:

பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு: சமூக ஊடகங்கள் தீயாக கருத்துகள்

பட மூலாதாரம், TWITTER

இலங்கை நேயர் பெர்னாண்டோ வினிதர்ஷினி: ஜெயலலிதா சம்பாதித்த ஒரே செல்வம். பன்னீர்செல்வம் 👏 👏 👏 ❤

சென்னை நேயர் செல்வம் ஜெகநாதன் : .பன்னீரு , ப ன்னீரு, - சூப்பரா சொன்னீரு-

டெல்லி நேயர் ராஜேஷ் : இது பி ஜே பியின் அரங்கேற்றம் போல் தெரிகிறது.. பார்ப்போம்.

வடலூர் நேயர் சி ஆர் திவாகர் : நான் மாற்று கட்சியாக இருந்தாலும், என் ஆதரவு கண்டிப்பாக ஓபிஎஸ் க்கு உண்டு..!

தஞ்சாவூர் நேயர் ரமேஷ் நாராயணன் : என்ன நடந்தது? கவர்னர் தாமதம் இப்போழுது விளங்கியது...ஸ்டாலின் டெல்லி பயணம் யோசிக்க வைக்கிறது!!

இலங்கை நேயர் சுபாஷ் கரண் :ஓ.பி.எஸ் :) அய்யா . . இதைத்தான் எதிர் பார்த்தோம். நீங்க துணிச்சலா செயல்படுங்க

சென்னை நேயர்:ரவி பாலா தாரணி : ரூம்ல கட்டாய படுத்தினார்கள் சரி, எம் எல் ஏ கூட்டத்தில் தைரியமாக இதை சொல்ல வேண்டியது தானே!

உடையார்பாளையம் நேயர் : ஆசையும் பதவியும் யாரை விட்டு வைத்தது.அதற்கு சில நாட்களாக நடக்கும் நாடகங்கள்.கடைசியில் தமிழ்நாட்டின் மக்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சி பின்னோக்கி உள்ளது.

சென்னை நேயர் இலங்கேஸ்வரன் ஷண்முகசுந்தரம் : முதலமைச்சரையே நிர்ப்பந்தம் செய்து கையொப்பம் வாங்கும் மாபியா,"பயந்து" ராஜினாமா செய்த முதல்வர், வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு, இவர்களை நம்பி தமிழக மக்கள்.

கொழும்பு நேயர் தேவி முரளி: நிச்சயமாக வாபஸ் பெற்று தமிழ்நாட்டை திறம்பட ஆளனும்.