You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: தனிமையில் இருந்த பெண் புகைப்பட கலைஞர்களின் சுய நிழற்பட முயற்சி - 'Girls of Isolation'
தன்னை சுற்றி பலர் சூழ்ந்த நிலையிலேயே வாழ்க்கையை வாழ்ந்த பெண் புகைப்பட கலைஞர் லூசியாவிற்கு கொரோனா வைரஸ் ஊரடங்கால் ஒருவழியாக தனக்கான நேரம் கிடைத்தது என்கிறார்.
சமீபத்தில் தான் லூசியா நியூயார்க்கிலிருந்து இத்தாலிக்கு வந்து சேர்ந்தார். எப்போதும் கேமராவுடன் வீதிகளில் நடமாடுவது, நண்பர்களுடன் வெளியில் செல்வது என்றே லூசியாவின் நாட்கள் இருந்தன.
ஆனால் அவர் வசித்த மிலனில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததால், வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு லூசியா தள்ளப்பட்டார். முதல் மூன்று வாரங்கள் வெளியில் செல்லாமல் நண்பர்களைப் பார்க்க முடியாமல் தனிமையில் தவித்த லூசியா ஒரு கட்டத்தில் நாட்டில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டபோது தானும் தன் நண்பர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்பதை நினைத்து அமைதிக்காத்ததாக கூறுகிறார்.
இதேபோல டெல்லிக்கு அருகில் உள்ள குர்கானில் 26 வயதான அபர்ணா தனது தாயின் பழைய அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசிக்கிறார். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் பாதுகாவலர்களை மட்டுமே காணமுடிந்தது என்கிறார் அபர்ணா.
இதே போல உலகின் பல பகுதிகளில் வாழும் பலருக்கு இன்னும் சில மாதங்களுக்கு மனிதர்கள் இன்றி தாங்கள் தனிமையில் தான் வாழ போகிறோம் என்பதை நன்கு உணர்ந்து அதை ஏற்றுக்கொண்டு விட்டனர்.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
லண்டனில் வசிக்கும் அங்கியின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது. ஆனால் அவரிடம் பூனை ஒன்று இருப்பது ஆறுதலாக உள்ளது என்கிறார். 100 மையில் தூரத்தில் வசிக்கும் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களை இன்னும் சில நாட்களுக்கு காண முடியாது என்பது வருத்தம் அளிப்பதாகவும் கவலை தெரிவிக்கிறார்.
உலகின் பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் தற்போது இந்த வித்தியாசமான தனிமை அனுபவத்தை ஒரே சமயத்தில் எதிர்கொண்டு வருகின்றனர்.
லூசியா, அபர்ணா, அங்கி இந்த மூன்று பெண்களும் வெவ்வேறு கண்டங்களில் வசித்தாலும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை ஒன்று தான்.
ஒரு பெரிய நிகழ்வு ஒன்றில் நாமும் பங்களிக்கிறோம் என்பது நமக்கு சற்றே ஆறுதல் அளிக்கும். அதன் வெளிப்பாடோ என்னவோ, மார்ச் 30ம் தேதி எழுத்தாளர் ஒலிவியா கேட்வுட் தன்னை தானே புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். ''தனிமைப்படுத்திக்கொண்ட பெண்ணின் சுய நிழற்படம்'' என்ற தலைப்பில் தனது சொந்த புகைப்படத்தைப் பதிவு செய்தார்.
பிறகு சில நிமிடங்களில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் ஒலிவியாவிற்கு குவியத்துவங்கியது. இதனால் ''Girls of Isolation'' என்ற தலைப்பில் ஒலிவியா ஒரு தனி இன்ஸ்டாகிராம் பக்கத்தை துவங்கியுள்ளார். உலகின் பல்வேறு இடங்களில் தனிமையில் உள்ள பெண்கள் தங்களின் சொந்த நிழற்படங்களை ஒரே இடத்தில் காண்பதன் மூலம் உற்சாகமடைகின்றனர்.
குர்கானில் உள்ள அபர்ணாவும் இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்திற்குப் புகைப்படம் அனுப்பியுள்ளார். இந்த ஊரடங்கு உத்தரவால் நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது கேமராவை எடுத்து புகைப்படம் எடுக்க துவங்கியுள்ளார்.
தொற்று பரவும் இந்த நேரத்தில் அன்றாட வாழ்க்கையை பதிவு செய்வது அவசியம் என்கிறார் அபர்ணா. ''உங்கள் மனம் என்ன சொல்கிறதோ அதை செய்யுங்கள், உங்களை நீங்கள் அன்பாகப் பார்த்துக்கொள்ளுங்கள், உங்களால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும், அல்லது எதை வேண்டுமானாலும் செய்யாமல் இருக்க முடியும், எதையும் விட்டுக்கொடுக்காமல் வாழவும் முடியும்'' என்கிறார் அபர்ணா.
''இந்த ஊரடங்கால் நாம் நம்மை தனிமைப்படுத்திக்கொள்வதன் மூலம், ஒரு தேசமாகவும் ஒரு தனி மனிதனாகவும், நம்மை நாம் புரிந்துகொள்ள முடியும், இந்த நேரத்தில் ஒருவருடன் ஒருவர் எப்படி இணைந்து இருக்கிறோம் என்பதையும் புரிந்துகொள்ள முடியும்'' என்கிறார் மருத்துவர் காசியப்போ.
''நம்மை நாம் தனிமைப்படுத்திக்கொள்வதன் மூலம் நாம் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது'' என்கிறார் அபர்ணா.
இந்த தருணத்தில் உலகின் வேறு ஒரு பகுதியில் உள்ளவர்களோடு கூட நம்மால் நம்மை ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. இது மிகவும் அவசியமும் கூட, உலகில் உள்ள அனைவருக்கும் வெவ்வேறு விதமான பிரச்சனைகள் இருந்தாலும், தற்போது அனைவருமே வீட்டில் முடங்கி தான் இருக்க வேண்டும். ஆனால் யாரோ ஒருவர் மட்டும் தனிமையில் முடங்கி இருக்கவில்லை என்பது மட்டும் தான் உண்மை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: