You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு: இயங்க அனுமதியளிக்கப்பட்ட 34 கடைகளின் பட்டியல் - விரிவான தகவல்
தமிழகத்தில் நாளை முதல் 34 வகையான கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை மற்றும் பிற மாவட்டங்களுக்கு தனியாக ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு நேற்று (மே 9) அறிவித்தது. அதன்படி, தேநீர் கடைகள், அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் போன்றவை திறக்கப்படும் நேரம் நீட்டிக்கப்பட்டது. தற்போது மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், கடந்த மார்ச் மாதம் 24ம்தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது கொண்டுவரப்பட்ட தளர்வுகளின் படி 34 வகையான கடைகள் நிபந்தனைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எல்லா கடைகளிலும் சமூக இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் பார்சல் மட்டுமே வழங்கப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1)டீக்கடைகள் (பார்சல் மட்டும்)
2)பேக்கரிகள் (பார்சல் மட்டும்)
3)உணவகங்கள் (பார்சல் மட்டும்)
4)பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள்
5)கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள்
6)சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள்
7)மின் சாதனப் பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
8)மொபைல் போன் விற்கும் மற்றும் பழுதுநீக்கும் கடைகள்
9)கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்
10)வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள்
11)மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
12)கண் கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள்
13)சிறிய நகைக் கடைகள் ( குளிர்சாதன வசதி இல்லாதவை)
14)சிறிய ஜவுளிக் கடைகள் ( குளிர்சாதன வசதி இல்லாதவை) - ஊரக பகுதிகளில் மட்டும்
15)மிக்ஸி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள்
16)டிவி விற்பனை மற்றும் டிவி பழுது நீக்கும் கடைகள்
17)பெட்டி கடைகள்
18)பர்னிச்சர் கடைகள்
19)சாலையோர தள்ளுவண்டி கடைகள்
20)உலர் சலவையகங்கள்
21)கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ்
22)லாரி புக்கிங் சர்வீஸ்
23)ஜெராக்ஸ் கடைகள்
24)இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள்
25)இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள்
26)நாட்டு மருந்து விற்பனை கடைகள்
27)விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள்
28)டைல்ஸ் கடைகள்
29)பெயிண்ட் கடைகள்
30)எலக்ட்ரிகல் கடைகள்
31)ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விற்பனை கடைகள்
32)நர்சரி கார்டன்கள்
33)மரக்கடைகள் மற்றும் பிளைவுட் கடைகள்
34)மரம் அறுக்கும் கடைகள்
முடிதிருத்தும் நிலையங்கள் ( சலூன்கள் ), ஸ்பா மற்றும் பியூட்டி பார்லர்கள் இயங்கக்கூடாது என்று தெரிவிக்கப்படுகின்றது. ஊரடங்கு தளர்வின் போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகள் / கடைகள் தொடர்ந்து இயங்கும். மேலும் கொரோனா நோய்த் தொற்று தன்மையைப் பொறுத்து வருங்காலங்களில் பல்வேறு பணிகளுக்கு / கடைகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்டுள்ள கடைகளின் உரிமையாளர்கள், குளிர்சாதன வசதி இருந்தால் அதை இயக்காமல், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தனி நபர் இடைவெளியினை பின்பற்ற அறிவுறுத்துவதோடு, கிருமிநாசினிகள் பயன்படுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மாநகராட்சி ஆணையாளர்களும், காவல் துறையினர், அரசால் அறிவுறுத்தப்பட்ட மேற்சொன்ன கடைகள் / நிறுவனங்களில், பணியாளர்கள் / வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யவும், தனிநபர் இடைவெளியை பின்பற்றப்படுவதையும், போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்தி பணிபுரிவதையும், பணியாளர் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதையும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை தீவிரமாக கடைப்பிடிப்பதையும், கண்காணிக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: