பொய் சொல்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது?

நாங்கள் விரைவாக பொய் சொல்லி விடுவோம்....ஆனால், பொய்யர்களை கண்டுபிடிப்பதில் மிகவும் மோசம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாங்கள் விரைவாக பொய் சொல்லி விடுவோம்....ஆனால், பொய்யர்களை கண்டுபிடிப்பதில் மிகவும் மோசம்.

நீங்கள் நேர்மையானவரா?

சமூகமாக வாழும் மனிதர்களைப் பொருத்தவரை, பொய் சொல்வது என்பது - அல்லது குறைந்தபட்சம் கெடுதல் செய்யாத பொய்கள் சொல்வது - நம் அனைவரையும் ஒன்றாகப் பிணைத்திருப்பதற்கான உறுதியான சமூகப் பசை போன்றதாக உள்ளது.

பொய்யைக் கண்டுபிடிப்பதில் நாம் அவ்வளவு திறமைசாலிகள் இல்லை என்றாலும், உங்களிடையே கதையளப்பவர்களை அடையாளம் காண்பதற்கு எளிதான உத்தி ஒன்று உள்ளது.

விலங்குகள் உலகில் - மற்றும் மனிதர்களிடத்திலும் - திரைமறைவு செயல்பாடுகள் ஏன் மிகுந்து காணப்படுகின்றன என்பதைக் கண்டறிய விலங்கியலாளரும், எழுத்தாளருமான லூசி குக்கி முயற்சி மேற்கொண்டுள்ளார்.

அமைதியைப் பராமரிக்க உண்மையை மாற்றுகிறோம்

நேர்மையான கருத்துக்களை எப்போதும் தெரிவிப்பது என்பது உங்கள் சிறந்த ஆர்வமாக இருக்காது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நேர்மையான கருத்துக்களை எப்போதும் தெரிவிப்பது என்பது உங்கள் சிறந்த ஆர்வமாக இருக்காது.

பெரும்பாலும் நாம் `பொய்' என்பதை ஒருவர் தமது வார்த்தைகள் அல்லது செயல்களால் நம்மை ஏமாற்றுவது என்று பொருள் கொள்கிறோம். ஆனால், உண்மையில், நாம் எதை சரியாக நினைக்கிறோம் அல்லது பொருள்தருகிறோம் என்று சொல்லாத காரணத்தால், இயல்பான உரையாடல் நடக்கிறது.

ஒவ்வொருவருடனும் நீங்கள் பேசும்போது, உங்களைப் பற்றியும் வாழ்க்கையில் நீங்கள் எடுத்த முடிவுகள் பற்றியும் தாம் நினைப்பது பற்றி உண்மையை அவர் பேசுவதாக இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். பொறுத்துக் கொள்ள முடியாததாக அது இருக்கும்.

ஒருவருடைய புதிய, அதிக செலவில் செய்து கொண்ட முடி அலங்காரம் நமக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்றாலும், அதை வெளியில் சொல்ல நம்மில் பலரும் நினைத்திருக்க மாட்டோம்.

100 சதவீதம் உண்மை பேசினால் நல்லதைவிட கெட்டது தான் அதிகம் நடக்கும் என்பதை உணர்ந்திருக்கிறோம். இதுபோன்ற ஒத்துழைப்பு என்பது சமூக கருத்தாடல்களின்போது நிறைய பேரின் இதயத்தில் ஏற்படுகிறது.

எனவே, உண்மைகளை மறைப்பது என்பது நம்மை ஒன்று சேர்க்கும் பசை போல உள்ளது, இந்த ஒத்துழைப்பு என்பது, சக்கரம் இயல்பாக சுற்ற உதவும் எண்ணெய் போன்றது, உலகை நல்லிணக்கம் மிக்க இடமாக ஆக்க உதவும் கருவியாக இது உள்ளது.

மூன்றில் ஒருவர் தினமும் பொய் சொல்கிறோம்

நான் ஒருபோதும் பொய் சொல்வதில்லை!

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நான் ஒருபோதும் பொய் சொல்வதில்லை!

``மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதி பேர் தினமும் கடுமையான பொய் ஒன்றைப் பேசுகிறோம்' என்று உளவியலாளர் ரிச்சர்ட் வைஸ்மேன் கூறுகிறார்.

ஆனால் சமீபத்தில் நடத்திய ஒரு கணக்கெடுப்பில், தாங்கள் ஒருபோதும் பொய் பேசியதில்லை என்று ஐந்து சதவீத மக்கள் கூறியுள்ளனர்.

பெயர் வெளியிடாத கணக்கெடுப்புகளில் கூட நம்மில் பலர் உண்மையைக் கூறுவதில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது.

பொய்யை கண்டுபிடிப்பதில் நீதிபதிகளைவிட கைதிகள் சிறந்து விளங்குகின்றனர்

தங்க மீன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கண்ணால் பார்ப்பதை எப்போதும் நீங்கள் நம்புகிறீர்களா?

``பொய் சொல்வதில் நாம் வல்லவர்கள்; பொய்யைக் கண்டுபிடிப்பதில் மிக மோசமானவர்கள்'' என்று ரிச்சர்டு மேலும் கூறுகிறார்.

ஏமாற்றுப் பேர்வழிகளைக் கண்டறிவதில் நாம் சிறந்தவர்கள் என்று நினைக்கிறோம்; இரண்டு பேரை ஒரு ஆய்வகத்துக்கு அழைத்துச் சென்று ஒருவர் பொய் பேசும் விடியோவையும், இன்னொருவர் உண்மை பேசும் விடியோவையும் பார்க்கச் செய்துவிட்டு - யார் சொன்னது உண்மை, யார் சொன்னது பொய் என்று கேட்டால் - 50 சதவீதம் பேர் மட்டுமே சரியாகக் கண்டுபிடிக்கிறார்கள்.

காவல் துறையினர், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் விஷயத்தில் இதுதான் சரியாக உள்ளது.

இவர்கள் அனைவரையும்விட சிறப்பாக கண்டுபிடிப்பவர்கள் உள்ளனர், அவர்கள் சிறைக் கைதிகள்.

ஒருவர் பொய் சொல்கிறார் என்பதைக் கூறுவதற்கு செவிகளைப் பயன்படுத்துங்கள் கண்களை அல்ல

சீட்டு விளையாட்டு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பார்க்கும் துப்புக்களை மறந்து விடுங்கள். நன்றாக செவிமடுங்கள்

நாம் கண்ணால் பார்ப்பவற்றைக் கொண்டு மதிப்பிடுவதால் தான் பொய் சொல்வதை நம்மால் சரியாகக் கண்டறிய முடிவதில்லை.

நம் மூளையின் பெரும்பகுதி, கண் வழியே வரும் காட்சிகளின் அடிப்படையில் தான் இயங்குகிறது. எனவே ஒருவர் பொய் சொல்கிறாரா என்பதைக் கண்டறிய முயற்சிக்கும்போது, இந்த அறிகுறிகளை வைத்து தான் நாம் முடிவு செய்கிறோம்.

இருக்கையில் அசைந்து கொண்டே இருக்கிறாரா? முகபாவனை எப்படி உள்ளது? ஏதும் உடல் அறிகுறிகள் உள்ளனவா என்று பார்க்கிறோம்.

ஆனால், அந்த விஷயங்கள் அனைத்தையுமே கட்டுப்படுத்த முடியும்: ஒரு பொய்யைக் கண்டுபிடிக்க எதிராளி எதையெல்லாம் எதிர்பார்ப்பார் என்பதை, நன்றாக பொய் சொல்லும் நபர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

வார்த்தைகள் அதற்கு மிஞ்சியதாக உள்ளன: நாம் எதைச் சொல்கிறோம், எப்படி சொல்கிறோம் என்பதைப் பொருத்தது அது.

அதைக் கட்டுப்படுத்துவது பொய்யர்களுக்கு மிகவும் சிரமமானது - எனவே அதில் நீங்கள் கவனம் செலுத்தினால், என்ன மாதிரியான போக்கு அவரிடம் தெரிகிறது என்று பார்க்கத் தெரிந்தால், பொய் கண்டறிதலில் நீங்கள் திறமைசாலியாக ஆகிறீர்கள் என அர்த்தம்.

பொதுவாக, பொய்யர்கள், குறைவாக சொல்வார்கள்: ஒரு கேள்வி கேட்டால் பதில் சொல்ல நீண்ட நேரம் எடுத்துக் கொள்வார்கள்; பொய்களில் இருந்து உணர்ச்சிபூர்வமாக தங்களை அன்னியப்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்கள்: 'நான்' 'எனது' என்பது போன்ற வார்த்தைகளை பெரும்பாலும் பயன்படுத்த மாட்டார்கள்.

நீங்கள் நன்கு பொய் சொல்கிறவரா என்று அறிய நெற்றியில் Q வரையுங்கள்

உங்களுக்கு தேவையானது எல்லாம் சுட்டு விரலும், சிந்தனையும்தான்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உங்களுக்கு தேவையானது எல்லாம் சுட்டு விரலும், சிந்தனையும்தான்.

இது Q டெஸ்ட் எனப்படுகிறது. இதை முடிப்பதற்கு உங்களுக்கு ஐந்து விநாடிகள் தான் ஆகும்.

நீங்கள் அதிகம் பயன்படுத்தும் கையின் (வலது கை பழக்கம், இடது கை பழக்கம் உள்ளதைப் பொருத்து) ஆள்காட்டி விரலால் உங்கள் நெற்றியில் Q என்ற எழுத்தை கேபிட்டல் எழுத்தாக எழுதுங்கள்.

இந்த எழுத்தில் கீழே உள்ள வால் போன்ற கோட்டை நீங்கள் வலது புருவத்துக்கு மேலே போடுகிறீர்களா அல்லது இடது புருவத்துக்கு மேலே போடுகிறீர்களா என்பது தான் கேள்வி. வேறு வகையில் சொல்வதானால், எதிரே இருப்பவர் சரியாகப் படிக்கும் வகையில் Q எழுத்தை எழுதுகிறீர்களா அல்லது நீங்கள் சரியாகப் படிக்கும் வகையில் எழுதுகிறீர்களா என்பதைப் பார்க்க வேண்டும்.

இடது புருவத்துக்கு மேல் அந்த வால் பகுதி கோடு வரும் வகையில் வரைபவராக இருந்தால் - மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றியே எப்போதும் சிந்திப்பவராக இருக்கிறீர்கள் எனவே நீங்கள் நன்கு பொய் சொல்லக் கூடியவர்கள் என்று பொருள்.

ஆனால் வலது புருவத்துக்கு மேல் முடிவது போல எழுதினால் - உங்களுடைய பார்வையில் உலகத்தை நீங்கள் பார்க்கிறீர்கள் - நீங்கள் கொஞ்சம் நேர்மையானவர் என்று பொருள்.

இயற்கை உலகம் பொய் பேசுவோர் நிறைந்ததாக உள்ளது

கோழியிடம் ஒருபோதும் நம்பிக்கை வைக்க வேண்டாம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோழியிடம் ஒருபோதும் நம்பிக்கை வைக்க வேண்டாம்.

ஏமாற்றுவது என்பது எங்கும் உள்ளது. இயற்கை உலகில் விலங்குகள் மறைந்திருந்தும், ஒன்றை ஒன்று ஏமாற்றியும் தங்கள் மரபணுக்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முயல்கின்றன.

சிப்பி மீன் வகையை எடுத்துக் கொள்ளுங்கள். ஆதிக்கம் செலுத்தும் ஆண் மீனை ஏமாற்றிவிட்டுத் தப்புவதற்கு அந்த இனத்து ஆண் மீன்கள் பெண் மீன் போல வேடமிடுகின்றன. இப்படி எதிரியிடம் இருந்து மறைக்கப்பட்டிருக்கும் பக்கவாட்டு உடம்பைப் பயன்படுத்தி இது பெண் மீனுக்கு பாலியல் சமிக்ஞைகளை தருகின்றன.

கோழி இனத்தை ஒருபோதும் நம்பாதீர்கள்.... உணவு கிடைத்திருப்பதைப் போல அது ஒலி எழுப்பி பெண் கோழியை சேவல்கள் வரவழைக்கும். யாரும் இல்லாத சூழ்நிலையில் உணவுக்குப் பதிலாக, கோழியை ஏமாற்றி சேவல் பாலுறவு வைத்துக் கொள்ளும்.

கடல் பறவைகள் வாழ்நாளின் பெரும் பகுதி நேரம் எப்போதும் ஜோடியாகவே இருக்கும். அவை நம்பிக்கையானவை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் பறவைகளும் வாழ்வுக்காக - குவில்லர்மோட் இனத்தைப் போன்று - ``பந்தம் மீறிய'' உறவில் ஈடுபடுகின்றன என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நிறைய அல்லது நல்ல - தரமான அடுத்த தலைமுறையை உருவாக்க உதவும் என்று கருதினால் அவை இவ்வாறு செய்யும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மனிதன் எப்போது பொய் சொல்ல ஆரம்பிக்கிறான்?

ஏமாற்றுதல் அல்லது பிரச்சனைகை்கு தீர்வு காணுதல்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஏமாற்றுதல் அல்லது பிரச்சனைகை்கு தீர்வு காணுதல்?

குழந்தைகள் எந்த வயதில் பொய் சொல்ல ஆரம்பிக்கிறார்கள் என்பது குறித்து ஆர்வம் தரும் சில ஆய்வுகள் உள்ளதாக ரிச்சர்ட் வைஸ்மேன் கூறுகிறார்.

``குழந்தைகளை ஓர் அறைக்கு அழைத்துச் செல்லுங்கள். `உங்களுக்குப் பிடித்த பொம்மையை உங்கள் பின்னால் வைக்கிறோம். ஆனால் தயவுசெய்து திரும்பிப் பார்க்க வேண்டாம்' என்று கூறுங்கள் - பிறகு அறையைவிட்டு வெளியே வந்துவிடுங்கள். பொம்மையைப் பார்க்கக் கூடாது என்று மறுபடியும் நினைவுபடுத்துங்கள்'' என்கிறார் அவர்.

காணொளிக் குறிப்பு, அதிகம் பொய் சொல்வது ஆண்களா பெண்களா?

காமிரா மூலம் அறையில் நடப்பதைப் பாருங்கள். சில நிமிடங்களில் அவர்கள் பொம்மையைப் பார்ப்பார்கள்.

நீங்கள் அறைக்கு திரும்பிச் சென்று, ``பொம்மையைப் பார்த்தீர்களா'' என்று கேளுங்கள்.

``மூன்று வயதுக் குழந்தைகளிடம் - நன்கு பேசத் தொடங்கும் வயது - இந்த சோதனையை நீங்கள் நடத்தினால், 50% பேர் பொய் சொல்வதை நீங்கள் காண முடியும்'' என்கிறார் ரிச்சர்ட்.

``ஆனால் அவர்கள் ஐந்து வயதுக் குழந்தைகளாக இருந்தால் ஒருவர் கூட உண்மை சொல்ல மாட்டார்கள்.''

சாதுர்யமாக ஏமாற்றும் வரலாறு நமக்கு நிறையவே உண்டு

நேர்மை இல்லாமல் இருப்பது சிறந்த கொள்கையாக இருக்கும்போது...

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நேர்மை இல்லாமல் இருப்பது சிறந்த கொள்கையாக இருக்கும்போது...

பரந்த, சிக்கலான சமூகத்தில் வாழ்க்கையை நகர்த்திச் செல்வதற்கு பொய் சொல்வது என்பது உண்மையிலேயே முக்கியமான விஷயமாக உள்ளது.

மனிதக் குரங்கு போன்ற விலங்கினங்களில், பெரிய கூட்டமாக இருப்பதால் ஆதாயங்கள் உள்ளன: உணவு தேடும் பொறுப்பை சில விலங்குகளிடம் ஒப்படைத்துவிடலாம், வேட்டைக்கு வரும் மிருகங்களை கவனிக்கும் வேலையில் சில விலங்குகள் ஈடுபடலாம்.

ஆனால், உணவை சாப்பிடுவதற்கு மற்றவர்களுடன் போட்டி இருக்கும். அப்போது சண்டைகள் வரலாம். அதில் நீங்களோ அல்லது அடுத்தவரோ காயமாகலாம். அது அந்தக் கூட்டத்துக்கு இழப்பாக இருக்கும். எனவே குரல் எழுப்புவது என்பது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் உண்மையில் நல்லதாக இருக்கும்.

சமூக உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் சாதுர்யமாக ஏமாற்றும் செயலுக்கு நீண்ட வரலாறு உள்ளது.

ஒருவருக்கொருவர் உயர்த்திப் பேசுவதால் மட்டும் தான் முன்னேறிய சமூகத்தில் காலத்தை ஓட்ட முடிகிறது. விலங்கினம் எந்த அளவுக்கு அதிநவீனமாக உள்ளதோ அதற்கேற்ப, பொய்யுரைகள் சாதாரணமாக உள்ளன என்பதாக ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

எனவே, பொய்யராக இருப்பது எப்போதும் அவ்வளவு கெடுதலான விஷயமாக இருக்காது. பொய்யே இல்லாவிட்டால், நாம் இப்போது இங்கிருக்க முடியாது: நாம் ஜீவித்திருப்பதற்கு அது முக்கியமானதாக இருக்கிறது.

ஆனால், பொய்யர்கள் இப்படி சொல்வார்கள், சொல்லமாட்டார்களா என்ன?

Línea

இந்தக் கட்டுரை பிபிசி வானொலியில் Lucy Cooke-யின் The Power of Deceit, என்ற நிகழ்ச்சியில் இருந்து எடுக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :