''ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் இருக்கும்போதும் தாலிபான்கள் வலுவாக இருப்பது எப்படி?'' -- டிரம்பை சாடிய இம்ரான்கான்

இம்ரான் கான்

பட மூலாதாரம், Reuters

ஆண்டுதோறும் 13 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக பெறும் பாகிஸ்தான், அதற்காக எதுவுமே செய்யவில்லை; எனவே நிதியுதவியை நிறுத்திவிட்டோம் என்று கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனது தொடர் டிவிட்டர் பதிவுகள் மூலம் சாடியுள்ளார்.

ஞாயிறன்று ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த நேர்காணலில், பாகிஸ்தானுக்கான நிதியுதவிகளை குறைத்தது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடமாக இருப்பதாக கூறியிருந்தார்.

பாகிஸ்தான் மீது டிரம்ப் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு தனது மூன்று ட்விட்டர் பதிவுகள் மூலம் சுருக்கமாக பதிலளித்திருக்கிறார் இம்ரான் கான்.

பாகிஸ்தானை குற்றம்சாட்டும் டிரம்பின் முன்னர் சில ஆதாரங்களை முன்வைப்பதாக தனது முதல் ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருக்கிறார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

9/11 சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்ற போதிலும், தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் போராட்டத்தில் இணைய பாகிஸ்தான் முடிவு செய்தது. இந்த போரில், 75 ஆயிரத்திற்கும் அதிகமான பாகிஸ்தானியர்கள் உயிரிழந்தனர். மேலும் பாகிஸ்தானின் பொருளாதாரம் 123 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்தது. இதில் அமெரிக்காவில் இருந்து கிடைத்த உதவி 20 பில்லியன் டாலர்கள் மட்டுமே என்று கூறியிருந்தார்.

டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

அடுத்து சற்று நேரத்தில் வெளியிட்ட இரண்டாவது டிவிட்டர் பதிவில், "எங்கள் பழங்குடிப் பகுதிகள் அழிக்கப்பட்டன, மில்லியன் கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர். தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் போரில் சாதாரண பாகிஸ்தான் மக்களின் வாழ்க்கை மோசமாக பாதித்தது, ஆனால் அதற்கு பிறகும் பாகிஸ்தான் தனது நிலத்தையும், வான் பகுதியையும் அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியது. இதுபோன்ற தியாகங்களை தங்களுக்காக செய்த வேறு எதாவது ஒரு நட்பு நாட்டின் பெயரை டிரம்பால் சொல்ல முடியுமா?" என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

மூன்றாவது டிவிட்டர் பதிவில், "அமெரிக்காவின் தோல்விகளுக்கு பாகிஸ்தானை பலியாடாக மாற்றுவதற்கு பதிலாக, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் இருக்கும்போதும், அங்கு, இன்றும் தாலிபன்கள் வலுவாக இருப்பது எப்படி என்று கேள்வி கேட்டுக்கொள்ளவேண்டும்" என்று இம்ரான் கான் கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

முன்னதாக, பாகிஸ்தான் மனித உரிமைகள் அமைச்சர் சிரீன் மஜாரியும் டிரம்பின் குற்றச்சாட்டு குறித்து டிவிட்டரில் பதிலளித்திருந்தார்.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

"ஆளில்லா விமான தாக்குதல்களில் சட்டவிரோதமாக கொல்லப்பட்ட மக்களின் பட்டியல் மிகவும் நீளமானது, ஆனால் எவ்வளவு திருப்தி செய்தாலும் அது போதாது என்பதை வரலாறு மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டியுள்ளது. சீனாவாக இருந்தாலும் சரி அல்லது இரானாக இருந்தாலும் சரி, அமெரிக்காவின் தனிமைப்படுத்தும் கொள்கைகள், பாகிஸ்தானின் நலன்களை பூர்த்தி செய்வதாக இல்லை." என்று கூறியிருந்தார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :