You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'ஆன்மா மீண்டும் வரும், நம்முடன் தங்கும்' - அட்டகாச திருவிழா
மெக்ஸிகோவில் 'இறந்தோர் நாள்' பேரணி சனிக்கிழமை மாலை மெக்ஸிகோவில் நடந்தது.
இது போன்ற பேரணி மெக்ஸிகோ தலைநகரில் நடப்பது இது மூன்றாம் முறை.
ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வரும் காட்சியினால் உந்தப்பட்டு இந்த பேரணி 2016 ஆம் ஆண்டு தொடங்கியது.
இந்த ஆண்டு 'இறந்தோர் நாள்' பேரணியின் தீம் குடியேற்றம்.
'குடிபெயர்தலில் மரணித்தவர்களுக்கு அர்ப்பணம்'
குடிபெயர்தலின் போது மரணித்தவர்களுக்காக இந்த ஆண்டு 'இறந்தோர் நாள்' பேரணி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமெரிக்கா நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவை நோக்கி ஊர்வலமாக சென்று கொண்டிருக்கும் இந்த தருணத்தில் குடிபெயர்தலின் போது மரணித்தவர்களுக்காக இந்த பேரணி குடிபெயர்தலின் போது மரணித்தவர்களுக்காக அர்ப்பணிக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதபடுகிறது.
இந்த பக்கமும் ஒரு கனவு இருக்கிறது
பேரணியின் ஒரு பகுதியாக மக்கள் 'இந்த பக்கமும் ஒரு கனவு இருக்கிறது' என்ற பெயர் பொறித்த எல்லை சுவற்றை சுமந்து செல்கிறார்கள்.
வழக்கமாக நவம்பர் 2 ஆம் தேதிதான் இந்த பேரணி நடைபெறும். இறந்தவர்களை கெளரவிப்பதன் மூலம் அவர்களின் ஆன்மா நம்முடன் தங்க மீண்டும் வரும் என்பது அம்மக்களின் நம்பிக்கை.
இதனை கொண்டாடப்படும் முறை மெக்ஸிகோவில் பகுதிக்கு பகுதி வேறுபடும்.
சிலர் மெழுகுவர்த்தி ஏற்றி மூதாதையர்களை நினைவு கூர்வார்கள். சிலர் உணவு படைப்பார்கள், சிலர் மலர் தூவி அஞ்சலி செலுத்துவார்கள்.
இந்த ஆண்டு பேரணி
மெக்ஸிகோவில் இந்தாண்டு நடைபெற்ற பேரணியில், மழை தூரலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றார்கள். தொலைக்காட்சிகளிலும் இந்நிகழ்ச்சி ஒளிப்பரப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கே பகிர்ந்து இருக்கிறோம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :