கனடா: துப்பாக்கிச்சூட்டில் நால்வர் மரணம்
கனடாவின் ஃப்ரெடெரிக்டன் (Fredericton) நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை அதிகாரிகள் இருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், KEV BOURQUE/VIA REUTERS
பிராந்திய தலைநகரான நியூ ப்ருன்ஸ்விக்கில் (New Brunswick) நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இறந்தவர்களின் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை, மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணமும் தெளிவாக தெரியவில்லை.
இனி மக்களுக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்று போலீஸார் கூறுகிறார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
நிலைமையை உன்னிப்பாக கவனித்துவருவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

பணியில் இருக்கும்போது போலீஸ் அதிகாரிகள் மரணமடைவது கனடாவில் மிகவும் அரிது. 1961 முதல் 2009 வரை 133 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ள நிலையில் நியூ ப்ருன்ஸ்விக்கில் ஐந்து பேர் மட்டுமே இறந்துள்ளனர்
கனடா நேரப்படி காலை ஏழு மணிக்கு பிறகு நான்கு துப்பாக்கி குண்டுகள் சுடப்படும் ஓசை கேட்டதாக உள்ளூர் தொலைகாட்சி நிருபர் ஒருவர் தெரிவித்தார்.
சி.டி.வி அட்லாண்டிக் என்ற ஊடகத்தின் நிருபர் நிக் மூரே ட்விட்டரில் வெளியிட்டுள்ள காணொளிக் காட்சிப் பதிவில், அவசரகால வாகனங்கள் ஒரு வீட்டின் வெளியே நிற்பது காட்டப்பட்டுள்ளது.
துப்பாக்கி வைத்துக் கொள்வது தொடர்பான சட்டங்கள், அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது கனடாவில் கடுமையானதாக இருந்தபோதிலும், அண்மை ஆண்டுகளில் கனடாவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












