ஒரே ஆண்டில் ஒன்பது ஏவுகணைகளை தொடுத்த வடகொரியா
குறுகிய தூர ஏவுகணையை வடகொரியா ஜப்பானிய கடலில் (சக்கலின் மற்றும் ஆசியப் பகுதிகளுக்கு இடையே ஒரு குறுகலான கடல்) செலுத்தியுள்ளது .

பட மூலாதாரம், Getty Images
வட கொரியாவின் இந்த நடவடிக்கையின் மூலம் அது பிராந்திய அழுத்தங்களை அதிகரித்துள்ளது மேலும் அதன் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்தும் சர்வதேச முயற்சிகளையும் மீறியுள்ளது.
இந்த ஆண்டில் தனது ஒன்பதாவது ஏவுகணையை செலுத்திய வடகொரியா உடனடியாக கண்டனங்களை எதிர்கொண்டுள்ளது.
சமீபத்தில் நடந்த ஜி7 மாநாட்டில் வடகொரியாவை எதிர்கொள்ளும் விஷயத்திற்கு முன்னுரிமை தரவேண்டும் என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது என்று ஜப்பானிய பிரதமர் ஷின்சு அபே தெரிவித்தார்.
அமெரிக்கா உட்பட பிற நாடுகளுடன் சேர்ந்து, ஜப்பான் வடகொரியாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை முறியடிக்க குறிப்பிட்ட நடவடிக்கை எடுக்க வேலைசெய்யவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












