திருமண விருப்பத்தைச் சொல்லுமுன் காதலியை தேம்ஸ் நதியில் மோதித் தள்ளிய கார்
லண்டன் தாக்குதலில் தேம்ஸ் நதியில் விழுந்த பெண்ணை, திருமணம் செய்வதாக காதலர் சொல்லத் திட்டமிட்டிருந்த நிலையில் கார் மோதி இனிமை நினைவுகளை தகர்த்துவிட்டது.

பட மூலாதாரம், FACEBOOK
காலித் மசூத் கார் மோதியதில் தேம்ஸ் நதியில் விழுந்த ரூமேனியப் பெண், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆன்ட்ரீயா கிறிஸ்டி என்ற 29 வயதுப் பெண், வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் நடந்து சென்ற போது கார் மோதியது.
அவரது மூளையில் ரத்தக்கட்டு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
கிறிஸ்டியின் காதலர் ஆன்ட்ரி பர்னஸும் அந்தச் சம்பவத்தில் காயமடைந்தார்.
கிறிஸ்டியை திருமணம் செய்து கொள்வதாக அன்று மாலை அவரிடம் தனது காதல் விருப்பத்தை ஆன்ட்ரி பர்னஸ் வெளிப்படுத்தவிருந்த நிலையில் இந்தச் சம்பவம் நடந்துவிட்டது என்று ரூமேனிய தூதர் பிபிசியிடம் தெரிவித்தார்.
பர்னஸின் பிறந்த நாளைக் கொண்டாட அவருடன் லண்டன் வந்தார் கிறிஸ்டி.
அவர் தற்போது மயக்க நிலையிலேயே இருப்பதாகவும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் பர்னஸ் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












