அமெரிக்காவுக்கு வருகை தர மோதிக்கு டிரம்ப் அழைப்பு
அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை அமெரிக்கா வருமாறு அழைத்துள்ளார்.

பட மூலாதாரம், AFP
இரு தலைவர்களுக்குமிடையே நடந்த ஒரு தொலைபேசி உரையாடலின் போது, இந்த அழைப்பை டிரம்ப் விடுத்தார்.
``உலகெங்கும் உள்ள சவால்களை சமாளிக்க இந்தியாவை ஒரு உண்மையான நண்பனாகவும், கூட்டாளியாகவும்`` டிரம்ப் கருதுவதாக அமெரிக்கா கூறியது.
பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில், அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான கூட்டுறவை பலப்படுத்தும் வாய்ப்புகள் பற்றி இரு தலைவர்களும் விவாதித்ததாக அமெரிக்கா கூறியது.
தானும் டிரம்ப்பை இந்தியா வருமாறு அழைத்ததாக மோதி கூறினார்.

பட மூலாதாரம், @Narendra Modi

பட மூலாதாரம், @NarendraModi
இந்த ஆண்டு பிற்பகுதியில் மோதி வருவார் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிபர் அலுவலகம் கூறியது.
‘பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரில் தோளோடு தோள் நிற்க’’ டிரம்ப்பும், மோதியும் உறுதி பூண்டதாகவும் அமெரிக்க அறிக்கை கூறியது.
நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பின்னர், அவருக்கு வாழ்த்து தெரிவித்த மோதி, டிரம்ப் இந்தியாவுடன் கொண்டிருக்கும் ‘’நட்பை’’ தான் பாராட்டுவதாகத் தெரி்வித்தி்ருந்தார்.

பட மூலாதாரம், AFP
அமெரிக்க தேர்தல் பிரசாரத்தின் போது, டிரம்ப் இந்திய அமெரிக்க வாக்காளர்களின் ஆதரவைப் பெற முயன்றார். பொதுவாக இந்தியா குறித்து சாதகமான கருத்துக்களையே தெரிவித்திருந்தார்.
அதிகாரவர்க்க சீர்திருத்தங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து மோதி வாதாடி வருவதை டிரம்ப் பாராட்டியிருந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












