தன் நடத்தையை விமர்சித்த ஹாலிவுட் நடிகையை ட்விட்டரில் சாடிய டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், தன்னுடைய நடத்தை குறித்து விமர்சித்த ஹாலிவுட் நடிகை மெரில் ஸ்ட்ரீப்பிற்கு சீற்றத்துடன் பதிலளித்துள்ளார்.

தன் நடத்தையை விமர்சித்த ஹாலிவுட் நடிகையை ட்விட்டரில் சாடிய டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தன் நடத்தையை விமர்சித்த ஹாலிவுட் நடிகையை ட்விட்டரில் சாடிய டொனால்ட் டிரம்ப்

லாஸ் ஏஞ்சலிஸில் நடைபெற்ற கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழாவில் பேசிய ஸ்ட்ரீப், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் பிரசாரம் ஒன்றின் போது மாற்றுத்திறனாளி செய்தியாளர் ஒருவரை வெளிப்படையாக கேலி செய்தததை பார்த்து தான் அதிர்ச்சி அடைந்ததாக கூறினார்.

நடிகை மெரில் ஸ்ட்ரீப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நடிகை மெரில் ஸ்ட்ரீப்

மேலும், அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் அந்தஸ்தைப் பயன்படுத்தி மக்களை அவமானப்படுத்தும்போது பலரும் பாதிக்கப்படுவார்கள் என்றார்.

இதற்கு ட்விட்டரில் பதிலளித்த டிரம்ப், ஹாலிவுட்டில் உள்ள மிகவும் அதிக மதிப்பீடு செய்து கொள்ளும் நடிகைகளில் ஸ்ட்ரீப்பும் ஒருவர் என்று கூறியிருக்கிறார்.

செய்தியாளரை கேலி செய்யவில்லை எனவும், அவர் செய்தியை மாற்றி எழுதியதை நடித்து காட்டியதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.