இதுவரை மனித கண்கள் பார்த்திருக்காத அசாதாரண காட்சிகளை ஆளில்லா விமானங்கள் அபாரமாக எடுத்துள்ளன.
பட மூலாதாரம், Max Seigal
படக்குறிப்பு, உட்டாவில் மோபில் உள்ள குன்றின் மீது மலை ஏறும் வீரர் ஒருவர் ஏறிக் கொண்டிருக்கும் எழுச்சியூட்டும் புகைப்படத்தை மேக்ஸ் சீகல் படம் பிடித்துள்ளார்.
பட மூலாதாரம், Francesco Cattuto
படக்குறிப்பு, பனிமூட்ட கூட்டத்தில் சிக்கியிருக்கும், இத்தாலியின் அம்பிரியாவில் உள்ள அசிசி புனித பிரான்சிஸ் தேவாலயம். தேவாலயத்தின் கோபுரங்களை அஸ்தமிக்கும் சூரியனின் கதிர்கள் குளிப்பாட்டும் கண்கொள்ள காட்சி.
பட மூலாதாரம், Szabolcs Ignacz
படக்குறிப்பு, வெள்ளை ஆட்டு மந்தை கூட்டம் ருமேனியவின் வயல்வெளிகளில் சிதறி காணப்படும் காட்சி.
பட மூலாதாரம், Todd Kennedy
படக்குறிப்பு, மேற்கு ஆஸ்திரேலியாவில், அந்தி சாயும் நேரத்தின் போது, கேபிள் கடற்கரையோரம் நடந்து செல்லும் ஒட்டகங்களின் நீண்ட நிழல்கள் கேரவனை போல தோற்றம் அளிக்கும் காட்சி.
பட மூலாதாரம், Jonathan Payet
படக்குறிப்பு, ரியூனியன் தீவில் பொங்கிக் கொண்டிருக்கும் எரிமலையின் ஆச்சரியவான்வழிக் காட்சி
படக்குறிப்பு, பிரெஞ்சு பாலிநேஷியன் கடற்கரைகளின் சொர்க்கமாக கருதப்படும் பகுதியில் தற்செயலாக நடுவானில் பறந்து கொண்டிருந்த பறவையை படம் பிடித்துள்ள ஓர் ஆளில்லா விமானம்.
பட மூலாதாரம், Calin-Andrei Stan
படக்குறிப்பு, டிரான்சில்வேனியாவில் உள்ள ஷிகிஸோயெரா தான் டிராக்குலா என அறியப்படும் விளாட் தி இம்பேலெரின் பிறப்பிடம். இந்த புகைப்படம், அவர் தன்னுடைய இரவு நேர பயணங்களின் போது எதை பார்த்திருப்பார் என்பதை என்று நினைக்க தோன்றுகிறது.
பட மூலாதாரம், Ulysses Padilha
படக்குறிப்பு, ரியோ டி ஜெனிரோவில் உள்ள கோபகபானா கடற்கரையில் அமைந்துள்ள அற்புதமான கிராபிக் நடைபாதையில் பாதசாரிகள் நடந்து செல்ல அதற்கு பொருத்தமாக பனைமரங்கள் அமைந்துள்ளன.
படக்குறிப்பு, போலந்து கடற்கரையில் மணல் முகடுகள் முழுவதும் நீண்ட நிழல்களையும், ஈர்க்கக்கூடிய வடிவங்களையும் அடிவானத்திலிருந்து குறைந்த தூரத்தில் உள்ள சூரியன் உருவாக்கிய காட்சி.
பட மூலாதாரம், Ryan Jones
படக்குறிப்பு, நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து ஆர்ப்பரிக்கும் நீர் கீழ் நோக்கி செல்ல அதனை ஆளில்லா விமானம் பதிவு செய்த அற்புதம்.
பட மூலாதாரம், Aurobird
படக்குறிப்பு, இந்தியாவின் குண்டூரில் கடல் போல சிதறிக்கிடக்கும் மிளகாயில் தனி ஒரு வெள்ளை புள்ளியாக விவசாயி மட்டும்
பட மூலாதாரம், Maksim Tarasov
படக்குறிப்பு, ரஷ்யாவில் அட்ஸிகார்டக் மலைப்பகுதி மீதான ஓர் உறைந்த இடத்தில் பனிச்சறுக்கு வீரர்களின் சாகச பயணம்.
பட மூலாதாரம், J Courtial
படக்குறிப்பு, வெர்னாஸ்ஸா என்ற இத்தாலிய கடற்கரை நகரில் பிரகாசமாக காட்சியளிக்கும் கட்டடங்களின் அழகிய காட்சி.
அனைத்து புகைப்படங்களையும் Dronestagram வெளியிட்டுள்ளது