You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அஜித்தின் 'வலிமை' திரைப்பட வெளியீடு தள்ளிவைப்பு - என்ன காரணம்?
நடிகர் அஜித்குமாரின் 'வலிமை' படத்தின் வெளியீடு ஓமிக்ரான் பரவல் தீவிரம் காரணமாக தள்ளி வைக்கப்படுகிறது என அந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தயாரிப்பாளர் போனிகபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், பார்வையாளர்களும் ரசிகர்களுமே எங்கள் மகிழ்ச்சியின் ஆதாரம். எல்லையில்லாத அன்பும் ஆதரவும் கடினமான சூழ்நிலைகளில் அவர்களிடம் இருந்து கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
அதுதான் கஷ்டங்களை எதிர்கொள்ளவும் தங்கள் கனவு திட்டத்தை வெற்றிகரமாக முடிக்கவும் முக்கிய நம்பிக்கையை ஏற்படுத்தி கொடுத்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதனால் மக்கள் திரையரங்குகளில் இருக்கும் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பமாக இருக்கும். அதே நேரத்தில் ரசிகர்களின் பாதுகாப்பும் நலனுமே எங்களுக்கு முதன்மை என்று போனி கபூர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், இப்போது உலகெங்கிலும் அதிகரித்து வரும் கோவிட் தொற்றுகளின் எண்ணிக்கை மற்றும் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப 'வலிமை' படத்தின் வெளியீட்டை சூழ்நிலை இயல்பு நிலைக்குக்கு திரும்பும் வரை தள்ளி வைக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா முதல் அலை காரணமாக 'வலிமை' படப்பிடிப்பு தள்ளிப்போனது, திரைக்கதையில் மாற்றம், வலிமை அப்டேட் கேட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களிலும், உலக அளவிலும் ட்ரெண்ட் செய்ததது என பல தடைகளை கடந்து படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
படத்தில் இரண்டு பாடல்கள், முதல் பார்வை வெளியாகி U/A தணிக்கை சான்றிதழும் பெற்று வெளியாக இன்னும் ஒரு வாரமே இருந்த நிலையில் ஓமிக்ரான் பரவல் காரணமாக வெளியீடு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஹெச். வினோத் இயக்கத்தில் இந்த படம் குறித்த அறிவிப்பு 2019ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியானது.
ஓமிக்ரான் பரவல் காரணமாக 'RRR', 'ராதே ஷ்யாம்' உள்ளிட்ட பெரிய படங்கள் வெளியீடு தள்ளிப்போனதை அடுத்து 'வலிமை' வெளியீடு மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலோங்கியது.
இதற்கிடையே, திட்டமிட்டபடி இந்த படம் 13ஆம் தேதியே வெளியாகும், ஓடிடி வெளியீடு என தகவல்கள் வந்த நிலையில் தற்போது 'வலிமை' வெளியீடு, தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- “பறையா” என்ற ஆங்கில சொற்பிரயோகம் தொடங்கியது எப்படி? – ஒரு வரலாற்றுப் பார்வை
- புதுக்கோட்டை சிறுவன் உயிரிழப்பு: சம்பவ தினத்தன்று நடந்தது என்ன? - கள ஆய்வு
- முள்ளெலியின் தோலில் உருவாகும் ஆன்டிபயாடிக் எதிர்ப்பு பாக்டீரியா – ஒரு புதிய தொற்றுப் பரவலின் தொடக்கமா?
- "சூரிய நமஸ்காரம் முஸ்லிம் தனி நபர் சட்டத்திற்கு எதிரானது" - வெளியேறிய மாணவர் கருத்து
- அறிகுறியே இல்லாமல் பரவும் பால்வினை நோய்களை கண்டறிவது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்