அஜித்தின் 'வலிமை' திரைப்பட வெளியீடு தள்ளிவைப்பு - என்ன காரணம்?

வலிமை அஜித்

நடிகர் அஜித்குமாரின் 'வலிமை' படத்தின் வெளியீடு ஓமிக்ரான் பரவல் தீவிரம் காரணமாக தள்ளி வைக்கப்படுகிறது என அந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தயாரிப்பாளர் போனிகபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், பார்வையாளர்களும் ரசிகர்களுமே எங்கள் மகிழ்ச்சியின் ஆதாரம். எல்லையில்லாத அன்பும் ஆதரவும் கடினமான சூழ்நிலைகளில் அவர்களிடம் இருந்து கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

அதுதான் கஷ்டங்களை எதிர்கொள்ளவும் தங்கள் கனவு திட்டத்தை வெற்றிகரமாக முடிக்கவும் முக்கிய நம்பிக்கையை ஏற்படுத்தி கொடுத்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதனால் மக்கள் திரையரங்குகளில் இருக்கும் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பமாக இருக்கும். அதே நேரத்தில் ரசிகர்களின் பாதுகாப்பும் நலனுமே எங்களுக்கு முதன்மை என்று போனி கபூர் தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

மேலும் அவர், இப்போது உலகெங்கிலும் அதிகரித்து வரும் கோவிட் தொற்றுகளின் எண்ணிக்கை மற்றும் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப 'வலிமை' படத்தின் வெளியீட்டை சூழ்நிலை இயல்பு நிலைக்குக்கு திரும்பும் வரை தள்ளி வைக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா முதல் அலை காரணமாக 'வலிமை' படப்பிடிப்பு தள்ளிப்போனது, திரைக்கதையில் மாற்றம், வலிமை அப்டேட் கேட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களிலும், உலக அளவிலும் ட்ரெண்ட் செய்ததது என பல தடைகளை கடந்து படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

படத்தில் இரண்டு பாடல்கள், முதல் பார்வை வெளியாகி U/A தணிக்கை சான்றிதழும் பெற்று வெளியாக இன்னும் ஒரு வாரமே இருந்த நிலையில் ஓமிக்ரான் பரவல் காரணமாக வெளியீடு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஹெச். வினோத் இயக்கத்தில் இந்த படம் குறித்த அறிவிப்பு 2019ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியானது.

ஓமிக்ரான் பரவல் காரணமாக 'RRR', 'ராதே ஷ்யாம்' உள்ளிட்ட பெரிய படங்கள் வெளியீடு தள்ளிப்போனதை அடுத்து 'வலிமை' வெளியீடு மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலோங்கியது.

இதற்கிடையே, திட்டமிட்டபடி இந்த படம் 13ஆம் தேதியே வெளியாகும், ஓடிடி வெளியீடு என தகவல்கள் வந்த நிலையில் தற்போது 'வலிமை' வெளியீடு, தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

காணொளிக் குறிப்பு, வலிமை பட ரீலிஸ் மீண்டும் ஒத்திவைப்பு - திடீர் அறிவிப்பை வெளியிட்ட போனி கபூர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: