You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விஜய் 64: இதுதான் திரைக்குழு - 10 தகவல்கள் #OntheBoard
விஜய் 64 திரைப்படம் குறித்து நித்தமும் ஒரு தகவல் வந்து கொண்டிருக்கிறது. On the Board என்று பதிவிட்டு தினமும் ஒருவர் தாமும் அந்தப் படத்தில் இருப்பதாக தகவல் பகிர்கின்றனர்.
எக்ஸ் பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் யார் யார் பணியாற்றுகிறார்கள் என்று இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியான தகவல்களை பார்ப்போம்.
- மாநகரம் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இன்னும் பெயரிடப்படாத விஜயின் 64வது திரைப்படத்தை இயக்குகிறார். கார்த்தியை வைத்து இவர் இயக்கிய கைதி திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் லோகேஷ் இயக்கிய அவியல் குறும்படம் 2016ஆம் ஆண்டு வெளியாகிப் பரவலாகப் பாராட்டைப் பெற்றது.
- சுந்தர பாண்டியன், பேட்ட திரைப்படத்தைத் தொடர்ந்து இந்த திரைப்படத்திலும் வில்லனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி.
- பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்த மாளவிகா 'விஜய் 64' திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
- தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களுக்குப் படத்தொகுப்பாளராக பணிபுரியும் ஃபிலோமின் ராஜ்தான் இந்தப் படத்திற்கும் எடிட்டர்.
- சக்கரக்கட்டி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிய சாந்தனு பாக்கியராஜ் விஜய் 64 திரைப்படத்தில் நடிக்கிறார்.
- யுத்தம் செய், முகமூடி, தீரம் அதிகாரம் ஒன்று, அடங்க மறு ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளரான சத்யன் சூர்யன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பொறுப்பேற்கிறார்.
- கத்தி படத்தை அடுத்து விஜயுடன் இணைகிறார் இசையமைப்பாளர் அனிருத்.
- மேயாத மான், ஆடை ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார் இந்தப் படத்தின் திரைக்கதை பிரிவில் பணியாற்றுகிறார்.
- மலையாளத்தில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் ஆண்டனி வர்கீஸ் விஜய் 64 படத்தில் நடிக்கிறார். மலையாளத்தில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் இவர் 'அங்கமலி டைரீஸ்', 'ஜல்லிக்கட்டு' உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.
- ஸ்டண்ட் சில்வா இந்தப் படத்திற்கு ஸ்டண்ட் மாஸ்டராக ஒப்பந்தமாகி உள்ளார். பெரும்பாலான விஜய் படங்களில் இருக்கும் ஸ்ரீமன் இந்தப் படத்திலும் நடிக்கிறார்.
தினமும் ஒருவர் விஜய் 64 திரைப்படத்தில் தாமும் பணியாற்றுகிறேன் என்று #OntheBoard என்ற ஹாஷ்டாக் போட்டு தகவல்கள் பகிர, அதுகுறித்த மீம்கள் அதிகளவில் சமூக ஊடகங்களில் வைரலானது.
Big Boss வெல்லப் போவது யார்? கடந்த 100 நாட்களில் நடந்தது என்ன?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்