விஜய் 64: இதுதான் திரைக்குழு - 10 தகவல்கள் #OntheBoard

விஜய் 64 இதுவரை வண்டியில் ஏறியவர்கள் #OntheBoard

பட மூலாதாரம், VIJAY FANS CLUB

விஜய் 64 திரைப்படம் குறித்து நித்தமும் ஒரு தகவல் வந்து கொண்டிருக்கிறது. On the Board என்று பதிவிட்டு தினமும் ஒருவர் தாமும் அந்தப் படத்தில் இருப்பதாக தகவல் பகிர்கின்றனர்.

விஜய் 64 திரைப்படம் குறித்து நித்தமும் ஒரு தகவல் வருகின்றன. On the Board என்ற தலைப்பில் தினமும் ஒருவர் தாமும் அந்தப் படத்தில் இருப்பதாக தகவல் பகிர்கின்றனர்.

பட மூலாதாரம், Twitter

எக்ஸ் பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் யார் யார் பணியாற்றுகிறார்கள் என்று இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியான தகவல்களை பார்ப்போம்.

விஜய் 64 இதுவரை வண்டியில் ஏறியவர்கள் #OntheBoard

பட மூலாதாரம், twitter.com/Dir_Lokesh/

  • மாநகரம் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இன்னும் பெயரிடப்படாத விஜயின் 64வது திரைப்படத்தை இயக்குகிறார். கார்த்தியை வைத்து இவர் இயக்கிய கைதி திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் லோகேஷ் இயக்கிய அவியல் குறும்படம் 2016ஆம் ஆண்டு வெளியாகிப் பரவலாகப் பாராட்டைப் பெற்றது.
விஜய் 64: இதுதான் திரைக்குழு - 10 தகவல்கள் #OntheBoard

பட மூலாதாரம், Twitter

  • சுந்தர பாண்டியன், பேட்ட திரைப்படத்தைத் தொடர்ந்து இந்த திரைப்படத்திலும் வில்லனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி.
  • பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்த மாளவிகா 'விஜய் 64' திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
Malavika

பட மூலாதாரம், twitter.com/MalavikaM_

  • தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களுக்குப் படத்தொகுப்பாளராக பணிபுரியும் ஃபிலோமின் ராஜ்தான் இந்தப் படத்திற்கும் எடிட்டர்.
Philomin Raj
  • சக்கரக்கட்டி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிய சாந்தனு பாக்கியராஜ் விஜய் 64 திரைப்படத்தில் நடிக்கிறார்.
Presentational grey line
Presentational grey line
  • யுத்தம் செய், முகமூடி, தீரம் அதிகாரம் ஒன்று, அடங்க மறு ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளரான சத்யன் சூர்யன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பொறுப்பேற்கிறார்.
  • கத்தி படத்தை அடுத்து விஜயுடன் இணைகிறார் இசையமைப்பாளர் அனிருத்.
  • மேயாத மான், ஆடை ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார் இந்தப் படத்தின் திரைக்கதை பிரிவில் பணியாற்றுகிறார்.
  • மலையாளத்தில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் ஆண்டனி வர்கீஸ் விஜய் 64 படத்தில் நடிக்கிறார். மலையாளத்தில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் இவர் 'அங்கமலி டைரீஸ்', 'ஜல்லிக்கட்டு' உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.
  • ஸ்டண்ட் சில்வா இந்தப் படத்திற்கு ஸ்டண்ட் மாஸ்டராக ஒப்பந்தமாகி உள்ளார். பெரும்பாலான விஜய் படங்களில் இருக்கும் ஸ்ரீமன் இந்தப் படத்திலும் நடிக்கிறார்.

தினமும் ஒருவர் விஜய் 64 திரைப்படத்தில் தாமும் பணியாற்றுகிறேன் என்று #OntheBoard என்ற ஹாஷ்டாக் போட்டு தகவல்கள் பகிர, அதுகுறித்த மீம்கள் அதிகளவில் சமூக ஊடகங்களில் வைரலானது.

Presentational grey line

Big Boss வெல்லப் போவது யார்? கடந்த 100 நாட்களில் நடந்தது என்ன?

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :