பிக்பாஸ் 3: சாண்டி, ஷெரீன், முகேன், லொஸ்லியா - இவர்தான் வெற்றியாளரா?

பட மூலாதாரம், facebook
பிக்பாஸ் சீசன் 3 கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி தொடங்கியது. இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. பிக்பாஸ் வீட்டின் அன்பு, காதல், சண்டை, சூழ்ச்சி, கோபம், வெறுப்பு, பிரிவு உள்ளிட்டவை சமூக வலைத்தளத்தில் நூறு நாள்களுக்கு மேல் தொடர்ந்து பேசுபொருளாக உள்ளன.
சரி. கடந்த நூறு நாள்களாக இந்த நிகழ்ச்சியில் நடந்தவை என்ன? விவாதத்துக்கு உள்ளான விஷயங்கள் எவை? கமலின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் அகத்திற்குள் செல்வோம்.
வழக்கமாக பிக்பாஸ் வீட்டில் நீச்சல் குளம் இருக்கும். ஆனால் சென்னையில் கோடைக்காலத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. சென்னை தண்ணீர் பிரச்சனை சர்வதேச அளவில் கவனம் பெற்றது.
பிபிசியின் புகைப்படம் ஒன்றை டீ காப்ரியோ இன்ஸ்டாகிராமில் பகிர அது வைரல் ஆனது.


இந்நிலையில் 'விளையாடுவதற்கு மட்டுமல்ல இந்த பிக்பாஸ் வீடு. சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தவும்தான்' எனச் சென்னை தண்ணீர் பிரச்சனைக்கு பிக்பாஸ் நீச்சல் குளத்தில் தண்ணீரை நிரப்பாமல் தன் தீர்வை முன்வைத்தது இந்த நிகழ்ச்சி.

பட மூலாதாரம், Vijay Tv
அது மட்டுமல்லாமல் கேஸ் மற்றும் தண்ணீருக்கு மீட்டர் வைத்து தங்களது சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்தினார்கள்.
சேரன், சரவணன், ஃபாத்திமா பாபு, வனிதா, ஷெரீன், லொஸ்லியா, சாக்ஷி அகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, மோகன் வைத்தியா, தர்ஷன், சாண்டி, முகேன், ரேஷ்மா, - இவர்கள்தான் முதலில் பிக்பாஸ் வீட்டில் குடி புகுந்தவர்கள். இவர்களைத் தொடர்ந்து இரண்டாவது நாள்தான் மீரா வீட்டுக்குள் சென்றார்.
அணி அணியாய்
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் முதல் தலைவராகப் பொறுப்பேற்றவர் வனிதா. கவின் மீதான தன் அன்பை அபி பொதுவிலேயே வெளிப்படுத்தினார் மறுமுனையில் மீராவுடன் அவருக்கு பகையுணர்வு அதிகமானது.
பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த ஓரிரு நாட்களிலேயே சிலர் அணி சேர்ந்துவிட்டார்கள். சாக்ஷி, அபி, ஷெரீன் என ஒரு அணி அமைக்கக் கவின், சாண்டி, சரவணன், மோகன் வைத்யா என இன்னொரு அணி இருந்தது.
அப்பா - மகள் பந்தத்தை சேரன் மற்றும் லொஸ்லியா உருவாக்கிக்கொண்டனர். மதுமிதா பக்திமானாக முகம் காட்டினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஃபாத்திமா பாபுதான் முதலில் வெளியேறினார். இரண்டாவதாக வனிதா வெளியேற்றப்பட்டார். அடுத்தடுத்த வாரங்களில் மோகன் வைத்யா, மீரா வெளியேறினர்.

பட மூலாதாரம், Vijay TV
மீரா Vs சரவணன் Vs சேரன்
பிக்பாஸ் வீட்டுக்குள் சேரன் மற்றும் சரவணன் இடையே முரண் வளர்ந்தது. சேரன் இணக்கமாகச் செல்ல எடுத்த முயற்சிகள் எதுவும் பயன் தரவில்லை.
இந்த சூழ்நிலையில் சேரன் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார் மீரா மிதுன். அவரது குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மையல்ல என்பது பின்னர் திரையிடப்பட்ட காட்சிகள் மூலம் தெரியவந்தது.
சேரனை பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறக் கோரி வெளியிலிருந்து குரல்களும் எழுந்தன. இயக்குநர் வசந்தபாலன், "திரையில் இலக்கியம் செய்ய ஆசைப்பட்டு அதில் வென்று காட்டியவர் நீங்கள். காலத்தின் கரையான் உங்களையும் உங்கள் படங்களையும் அழித்துவிடமுடியாது. இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் பாலுமகேந்திராவுடன் ஒப்பிடக்கூடிய திரை ஆளுமை நீங்கள். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுங்கள்" எனக் கோரிக்கை வைத்தார்.
இப்படியான சூழலில் திடீரென பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார் சரவணன்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 1
பேருந்தில் சிலர் பெண்களிடம் தவறாக நடப்பது குறித்த விவகாரம் ஒன்றை கமல்ஹாசன் பேசும்போது தானும் அதைச் செய்திருக்கிறேன் என கூறி தனது கையை உயர்த்தினார் சரவணன். இந்த சமயத்தில் சரவணனை கமல்ஹாசன் கண்டிக்கவில்லை என சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் 44-வது நாளன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து திடீரென வெளியேற்றப்பட்டார் சரவணன்.
சரவணனின் வெளியேற்றம் குறித்து கமல்ஹாசன் மேடையில் எந்த விளக்கமும் தரவில்லை.
அவர் வெளியேற்றப்பட்ட இரண்டு நாள்களுக்கு பிறகு நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட வனிதா, 50-ம் நாளன்று மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.
"வாடி ராசாத்தி" என்ற பாடல் பில்டப்புடன் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார்.

பட மூலாதாரம், VIJAY TV
மீண்டும் வந்த வனிதா, வெளியேற்றப்பட்ட மதுமிதா
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதன்முறையாக ஏற்கனவே வெளியேற்றப்பட்ட ஒரு நபர் மீண்டும் நிகழ்ச்சிக்கும் போட்டியாளராக உள்ளே நுழைந்தது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் விவாதங்களை எழுப்பியது.
அவர் உள்ளே நுழைந்தபிறகு கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களையும் விமர்சித்தார்.
இந்நிலையில் 54-வது நாளில் மதுமிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் வீட்டில் தன்னை தானே காயப்படுத்திக் கொண்ட மதுமிதா, "என்னை வீட்டில் உள்ளவர்கள் மன ரீதியாகக் கஷ்டப்படுத்தினார்கள்" எனக் குற்றஞ்சாட்டினார்.

பட மூலாதாரம், VIJAY TELEVISION
அப்போது பேசிய கமல், "கொஞ்ச நாட்கள் முன்பு வரை வெற்றி வாய்ப்பு உள்ளவர்கள் பேரில் உங்கள் பெயரும் அடிபட்டது. வெளியே மட்டும் அல்ல உள்ளே இருப்போர் (பிக்பாஸ் வீட்டில் இருப்போர்) முன் வைத்த பட்டியலிலும் உங்கள் பெயர் இருந்தது. இப்போதும் கேப்டன்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். உங்களை வெளியேற்றுவதற்கான அனைத்து வாய்ப்பும் அகன்று, தட்டில் வைத்துக் கொடுக்கப்பட்ட இந்த வெற்றியை தட்டிவிட்டுவிட்டு இங்கே வந்து நிற்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது," என்றார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய மதுமிதா, "நான் தைரியமான பெண் என்று எல்லாருக்கும் தெரியும். என் தைரியம் எந்த அளவுக்குச் சோதிக்கப்பட்டிருந்தால் இந்தவொரு முடிவுக்கு வந்திருப்பேன்," என்றார்.
மதுமிதா எந்த காரணத்திற்காகத் தன்னை தானே காயப்படுத்திக் கொண்டார் என்ற விவரங்களை பிக்பாஸ் நிகழ்ச்சித் தயாரிப்பு குழு தெரிவிக்கவில்லை.

பட மூலாதாரம், VIJAY TV / FACEBOOK
மதுமிதா வீட்டை விட்டு வெளியேறிய பின்னும் சர்ச்சைகள் தொடர்ந்தன. விஜய் டிவி நிர்வாகம் மற்றும் மதுமிதா ஆகியோர் காவல்துறையில் மாறி மாறி புகார் கொடுத்தனர். செய்தியாளர்களை அழைத்து மதுமிதா தனது விளக்கத்தை தந்தார்.
இதற்கிடையில் பிக்பாஸ் வீட்டில் அபி - முகேன் நட்பு கதை முற்றுப்பெற்று கவின் - லொஸ்லியா இடையேயான அன்பின் கதை பல பக்கங்களை தாண்டி இருந்தது.
சேரன் வெளியேற்றப்பட்டு பிக்பாஸ் அழைப்பின் பேரில் ரகசிய அறையில் தங்கி மீண்டும் வீட்டுக்குள் நுழைந்தார்.
இந்த சூழலில்தான் பிக்பாஸ் வீட்டுக்குள் பங்கேற்பாளர்களின் குடும்பத்தினர் வரத் தொடங்கினர்.
பிக் பாஸ் வீட்டுக்குள் லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் வந்தார். கடந்த பத்தாண்டாக தன் தந்தையைப் பார்க்கவில்லை என்று லொஸ்லியா முன்பு கூறி இருந்தார்.
'அப்படியா உன்னை வளர்த்தேன்'

பட மூலாதாரம், Vijay TV
பல நாட்கள் கழித்து தந்தையை பார்த்த மகிழ்ச்சியில் கதறி அழுதார் லொஸ்லியா. மகளை கட்டியணைத்துத் தேற்றினார் மரியநேசன்.
லொஸ்லியாவை தேற்றிவிட்டு சக போட்டியாளர்கள் முன்னிலையிலேயே குமுறிய மரியநேசன், "என்னிடம் என்ன சொல்லி நீ வந்த, நான் உன்னை அப்படியா வளர்த்தேன்" என்று தழுதழுத்தார்.
மரியநேசனை சமாதானப்படுத்தினார் இயக்குநர் சேரன். லொஸ்லியா தந்தை ஆதங்கப்பட்டதைப் பார்த்து ஓரமாக அமைதியாக நின்றிருந்தார் கவின், குற்ற உணர்ச்சியில் வீட்டுக்குள் சென்ற கவின் ஒருபக்கம் அழத் தொடங்கினார்.

பட மூலாதாரம், Vijay Tv
இந்த காட்சிகள் ஒளிபரப்பானதும் இயக்குநர் வசந்தபாலன். தனது ஃபேஸ்புக் பக்கத்தில், பிக்பாஸ் வீட்டில் வாழும் போது காதலும் கண்ணீரும் வருவது சகஜம் தானே என்று, லொஸ்லியா- கவின் காதல் பேச்சுவார்த்தை வளரும்போதே ஏன் எதிர்க்கிறீர்கள் என்று கருத்து பதிந்திருந்தார்.
மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருந்த வனிதா இறுதிக்கட்ட வாரங்களை எதிர்கொள்ளும் முன்னரே வெளியேற்றப்பட்டார்.
முகேன் கோல்டன் டாஸ்க்கில் நேரடியாக இறுதி சுற்றுக்குத் தேர்ச்சி பெற்றார். அதன் பின்னர், இப்போது யாரேனும் ஒருவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற விரும்பினால் அவருக்கு ஐந்து லட்சம் வழங்கப்படும் . ஐந்து லட்சம் வேண்டாமென்றால் அவர் தொடர்ந்து போட்டியிட்டு இறுதி வரை செல்லலாம் என்று பிக்பாஸ் அறிவித்தார்.
சட்டென்று எழுந்த கவின் நண்பர்கள் எதிர்ப்பை மீறி, "நான் ரெடி தல" என்றார். பாத்திர கடையிலேயே கோப்பை வாங்கிக் கொள்கிறேன், நான் வெளியேறுகிறேன் என்று கூறி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.
லொஸ்லியாவும், சாண்டியும் ஒரு பக்கம் அழ. முகேனும், தர்ஷனும் தேற்ற. இது அவன் முடிவு. அதனை அவனை எடுக்க விடுங்கள் என ஷெரீன் பேச வீடே உணர்ச்சி பிழம்பாக மாறியது.

பட மூலாதாரம், instagram/tharshan_shant/
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு கடும் சவாலாக இருந்தவர் தர்ஷன். வனிதாவை எதிர்த்து முதல் முதலாக கேள்வி கேட்டவரும் தர்ஷன். அவர் கோப்பையுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என சிலர் எதிர்பார்த்திருந்தனர்.
இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
Instagram பதிவின் முடிவு
சக போட்டியாளர்களும் தர்ஷன்தான் வின்னர் என நினைத்தனர். இந்த சூழலில் இறுதியாக தர்ஷன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
தர்ஷனுக்கு வாக்கு விழாதது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது என்றார் கமல். பெருஞ்சோகத்துடன் வீட்டைவிட்டு வெளியேறினார் தர்ஷன்.

பட மூலாதாரம், Vijay TV
யார் வெல்வார்?
இப்போது வீட்டுக்குள் இருப்பவர்கள் லொஸ்லியா, ஷெரீன், முகேன் மற்றும் சாண்டி.

பட மூலாதாரம், Vijay Tv
இந்த நால்வரும் கடுமையான போட்டியாளர்கள்தான்.
இந்த நால்வரில் கோப்பையை வெல்லப் போவது யார் என்பது அக்டோபர் ஆறாம் தேதி தெரியவரும்.
இப்படியான சூழலில் முகேன்தான் வெற்றியாளர் என சமூக ஊடகங்களில் முணுமுணுக்கப்படுகிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு

ஏழு நிமிடங்களில் பிக்பாஸ் நூறு நாள் நிகழ்வின் தொகுப்பு
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 2

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












