ராட்சசன் திரைப்படம் - 10 சுவாரஸ்ய தகவல்கள்

ராட்சசன்

பட மூலாதாரம், Trident

ராட்சசன் திரைப்படம் வெளியாகி ஓராண்டாகிறது.

அந்தத் திரைப்படம் குறித்த பத்து தகவல்களைத் தொகுத்துள்ளோம்.

  • ரஷ்ய கொலைகாரர் அலெக்ஸாண்டர் ஸ்பெசிஃப்ட்செஃப் குறித்த உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் ராட்சசன். சிறு வயதில் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட அலெக்ஸாண்டர், எழுபதுகளில் தனது தாயின் துணையுடன் குழந்தைகளைக் கடத்தி கொன்றுள்ளார். இதனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் ராட்சசன் திரைப்படம்.
  • புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறையும் என்று நிலவிய நம்பிக்கையை கருப்பொருளாகக் கொண்டு முண்டாசுபட்டி படத்தை இயக்கிய ராம்குமாரின் இரண்டாவது படம் இது.
ராட்சசன்

பட மூலாதாரம், AXESS

  • ராட்சசன் படத்திற்குத் திரைக்கதை அமைக்க இரண்டாண்டுகள் எடுத்துக் கொண்டதாகவும், அப்போது சென்னையில் நடந்த கொலைகள் அதன் பின்னணியை ஆய்வு செய்து திரைக்கதை அமைத்ததாகவும் ராம்குமார் கூறி இருந்தார்.
  • முதலில் இப்படத்திற்கு ராட்சசன் எனப் பெயரிடப்படவில்லை. மின்மினி என்றே அழைக்கப்பட்டது. 'ராட்சசன்' டைட்டில் அப்போது தயாரிப்பாளர் சி.வி.குமார் வசம் இருந்தது. அவரிடம் பேசி இந்த டைட்டிலை தயாரிப்பாளர் பெற்றார்.
  • அசுரன் திரைப்படத்தில் தனுஷின் காதலியாக நடித்த அபிராமிதான், ராட்சசன் திரைப்படத்தில் அம்முவாக நடித்தவர். அபிராமி தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் கார்த்தியின் தங்கையாக நடித்திருக்கிறார். துப்பாக்கி முனை படத்தில் நடித்திருக்கிறார். இன்னும் வெளிவராத பாலாஜி சக்திவேலின் யார் இவர்கள் திரைப்படத்தின் நாயகியும் இவர்தான்.
ammu abirami

பட மூலாதாரம், twitter/Ammu_Abhirami

  • ராட்சசன் படத்தில் அபிராமி கதாபாத்திரம் கொலைகாரனால் கொல்லப்படும். அதுபோல, துப்பாக்கி முனை, அசுரம் படத்திலும் அபிராமி கதாபாத்திரம் கொல்லப்படுவதுபோல காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
  • 2018ஆம் ஆண்டு வெளியான தலைசிறந்த பத்து படங்கள் என ஐ.எம்.டி.பி (IMDB) வெளியிட்ட பட்டியலில் ராட்சசன் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது.
Presentational grey line
Presentational grey line
  • இப்படம் தேசிய விருது பெறும் எனப் பெரிதும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெறவில்லை. இப்போது லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விருதுகள் விழாவில் நான்கு விருதுகளை இப்படம் பெற்றுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த த்ரில்லர், சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவுகளில் ராட்சசன் திரைப்படம் விருதுகளை வென்றுள்ளது.
ராட்சசன்

பட மூலாதாரம், IMDB

  • ராட்சசன் திரைப்படத்தின் பின்னணி இசை பெரிதும் கொண்டாடப்பட்டது. இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான்.
  • ராட்சசன் திரைப்படத்தில் சீரியல் கில்லர் கிறிஸ்டோபர் கதாபாத்திரத்தில் நடித்தவர் சரவணன். இவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இவர் இதற்கு முன் 'நான்' திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :