You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணம் - முன்னாள் அமைச்சர் பொன்னையன் கருத்துக்கு கடும் எதிர்ப்பு
காற்றடித்ததால்தான் சுபஸ்ரீ மீது பேனர் கீழே விழுந்தது என்றும், பேனர் வைத்தவரே அதை வேண்டுமென்றே தள்ளிவிடவில்லை அதனால் வேண்டுமென்றால் காற்று மீதுதான் வழக்கு போட வேண்டும் என்று தமிழக முன்னாள் அதிமுக அமைச்சர் பொன்னையன்ஒரு பேட்டியில் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நியுஸ் 7 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், பேனர் வைப்பதில் தவறில்லை என்றும், பொதுமக்களுக்கு ஒரு நிகழ்வு நடைபெறுவதை தெரியப்படுத்தும் அணுகுமுறையே இது என்றும் பேனர் வைப்பதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும், காற்று பலமாக அடித்ததால்தான் சுபஸ்ரீ மீது பேனர் கீழே விழுந்தது என்றும், பேனர் வைத்தவர் அதை வேண்டுமென்றே சுபஸ்ரீ மீது தள்ளிவிடவில்லை என்றும் கூறியிருந்தார்.
அதோடு நிற்காமல், காற்று மீதுதான் போலீஸ் வழக்கு போட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
பொன்னையனின் இந்த கருத்துக்கு சமூக ஊடங்களில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது குறித்து பிபிசி தமிழ் சமூக ஊடக பக்கங்களில் நேயர்களிடம் கருத்து கேட்டிருந்தோம். நேயர்கள் தெரிவித்த கருத்துகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
பதவிக்காக ஒரு மூத்த அரசியல்வாதி பொறுப்பில்லாமல் எதையும் பேசலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஃபேஸ்புக் நேயர் ரஜேந்திரன் தங்கராஜ்.
தேவேந்திரன் என்ற ஃபேஸ்புக் நேயர், இவ்வளவு புத்திசாலி அமைச்சர் தமிழ்நாட்டில் இருந்தார் என்பது மிகவும் வியப்பாக உள்ளது என்றும், "இது தமிழ்நாட்டின் பாக்கியம்; தமிழக மக்கள் நாங்கள் வாங்கி வந்த வரம் அப்படி வேறு என்ன சொல்ல" என்றும் பதிந்துள்ளார்.
பெனீல் என்ற நேயர், ஜெயலலிதா அமைச்சரவையில் மட்டுமல்ல, எம்ஜிஆர் ஆட்சியிலும் விஞ்ஞானிகள் இருந்தோம் என்று பொன்னையன் நிரூபித்திருக்கிறார் என்று நையாண்டி செய்திருக்கிறார்.
பேனர் கட்டியவர் மீது வழக்கு போடாமல் காற்று மீது வழக்கு போட சொல்பவர், சாலையில் ஓரமாக நடப்பவர் மீது கார் மோதினால் கார்மீதுதான் வழக்கு போட சொல்வாரோ என்று கேள்வி எழுப்புகிறார் சங்கர ராஜா என்ற ஃபேஸ்புக் நேயர்.
மொகமத் அக்பர் என்ற நேயர், "இனிமேல் கத்தியால் குத்தப்பட்டால் கத்தி மீதுதான் வழக்கு போட வேண்டும். குத்தியவர் மீதல்ல என்று அதிமுகவினர் பேசினாலும் ஆச்சரியம் இல்லை" என்று பதிந்துள்ளார்.
India's dirty railway stations list : Tamil Nadu முதலிடம்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்