'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வகுப்புவாத பிரசாரமா? எதிர்ப்பு ஏன்?

பட மூலாதாரம், Twiiter/sudiptoSENtlm
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இன்று வெளியாகும் நிலையில் அதற்கான எதிர்ப்பும் பரவலாக இருக்கிறது.
தமிழ்நாட்டின் சென்னை கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இந்தத் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
இந்தத் திரைப்படத்துக்கு ஏற்கெனவே இஸ்லாமிய அமைப்புகளும், கேரள முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்டோரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இந்தத் திரைப்படம் வெளியானால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருப்பதாக ஊடகங்களில் பரவலாகச் செய்தி வெளியாகி இருந்தது.

'தி கேரளா ஸ்டோரி' டிரெய்லர்
டிரெய்லரை பார்க்கும் போது அரசுக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் வகுப்புவாதத்தை நோக்கமாகக் கொண்டது போல் தெரிவதாக இந்த திரைப்படம் குறித்து கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.
கேரளாவில் இந்த திரைப்படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் டிரெய்லரில் என்ன இருக்கிறது? மாநிலத்தின் முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?
விபுல் ஷா தயாரிப்பில், சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் முன்பு சமூக ஊடகங்களில் வெளியானது.
முன்னணி கதாபாத்திரத்தில் அடா ஷர்மா, சித்தி இட்னானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வெளியான முன்னோட்டத்தின் முதல் காட்சியிலேயே பல உண்மை சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு எடுக்கப்பட்ட படம் என்று காட்டப்படுகிறது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
டிரெய்லர் முழுவதும் கேரளாவில் இருக்கும் நான்கு பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர் முஸ்லிம் பெண்ணாக வருகிறார்.
கல்லூரி விடுதியில் ஒரே அறையில் தங்கும் அவர்கள், முஸ்லிம் பெண்ணை பின்பற்றி மூளைச்சலவை செய்யப்பட்டு முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்படுவதாகவும், பின்பு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்காக வேலை செய்ய நாடு கடத்தப்படுவதாகவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
டிரெய்லரில் ஷாலினி என்ற இந்து பெண் கதாபாத்திரத்தில் வரும் அடா ஷர்மா, லவ் ஜிகாத் மூலமாக காதல் வலையில் வீழ்த்தப்பட்டு முஸ்லிம் பெண் ஃபாத்திமாவாக மதமாற்றம் செய்யப்படுகிறார்.
பின்பு ஷாலினி உட்பட 48 பேர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்காக வேலை செய்ய வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்படுவது போல காட்சிகள் இடம்பெறுகிறது.
அடுத்த 20 வருடங்களில் கேரளா, இஸ்லாமிய மாநிலமாக மாறும் என்று நம் முன்னாள் முதலமைச்சர் தெரிவித்துள்ளார் என்று ஒரு வசனம் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளது.
இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற 4 மொழிகளில் மே 5ஆம் தேதி வெளியாகிறது.
கேரளாவில் எழுந்த எதிர்ப்பு

பட மூலாதாரம், Twiiter/sudiptoSENtlm
கேரளாவைச் சேர்ந்த 32 ஆயிரம் மலையாளி பெண்கள், மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன என்ற இந்த இந்த படத்தின் கதைக் கரு போலியானது என்கிறார், கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ரஹீம்.
இந்த டிரெய்லர் தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்தை பகிர்ந்துள்ள ரஹீம், "சங்க பரிவார் அமைப்பின் நச்சுத்தன்மைமிக்க பொய்" என்று இந்த படத்தை குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவில் வாழும் மக்களை மதரீதியாக பிளவுப்படுத்த, தவறான பிரச்சாரங்களை முன்வைப்பதாகவும், உள்நோக்கத்துடன் கேரளாவின் பெயரை கெடுக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளதாக ரஹீம் தெரிவித்தார்.
'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது என கேரள மாநில காங்கிரஸ் தலைவர் VD சதீஷன் அறிக்கை மூலமாக குறிப்பிட்டுள்ளார்.
இதை கருத்து சுதந்திரமாக பார்க்கக் கூடாது. சங்க பரிவார் அமைப்புகள் மதரீதியாக சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் முயற்சியாக பார்க்க வேண்டும். இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் இயக்குநரின் பேட்டியின் மூலம் நமக்கு ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. சர்வதேச அளவில் கேரள மக்களை சிறுமைப்படுத்தி, கேரளா குறித்து அவதூறு கிளப்பவே இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது, என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சதீஷன் தெரிவித்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த திரைப்படம் வெளியாக அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளன.
இந்த டிரெய்லர் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் கேரள மாநிலக்குழு செயலாளர் வி.கே.சனோஜ், மதரீதியாக மக்களை பிளவுப்படுத்தவும், இஸ்லாமிய மக்கள் மீதான வெறுப்பு பிரச்சாரமாகவும் தி கேரளா ஸ்டோரி படம் அமைந்துள்ளது என்றார்.
"வகுப்புவாத சக்திகள், கேரளாவில் வாழும் அனைத்து மதத்தினர் இடையே நிலவும் ஒற்றுமையை குலைக்க விஷமத்தனமாக இந்த படத்தை எடுத்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் அமைப்பினரின் இந்த முயற்சிக்கு கேரளா மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். தேர்தல் நேரத்தில் இன்னும் மக்களை மதரீதியாக பிளவுபடுத்த இன்னும் கடுமையாக முயற்சிகளை சங் பரிவார் அமைப்பு எடுக்கும். ஆனால் இந்த வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக கேரளா மக்கள் ஒன்றாக நின்று குரல் கொடுப்பார்கள்," என்று சனோஜ் தெரிவித்தார்.
கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் முஸ்லிம்களாக மதமாற்றம் செய்யப்பட்டு ஈராக், சிரியா நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தி கேரளா ஸ்டோரி உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது என அபிஷேக் என்ற பயனர் ட்விட்டரில் இந்த படத்தை ஆதரித்து பதிவிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
பாஜகவின் தகவல் தொடர்பு அணியின் தேசிய பொறுப்பாளர் அமித் மால்வியா தனது ட்விட்டர் பதிவில், 'லவ் ஜிகாத் நிஜத்தில் இருக்கிறது, அது ஆபத்தானது' என பதிவிட்டு, தி கேரளா ஸ்டோரி படத்தின் ட்ரெய்லரை பகிர்ந்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
கேரள காங்கிரஸ் தலைவர் ஒருவரின் பதிவுக்கு பதிலளித்து பதிவிட்டுள்ள ராம் என்ற ட்விட்டர் பயனர் நிச்சயம் பார்க்க வேண்டிய படம் என பதிவிட்டு தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் போஸ்டரை பகிர்ந்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
இந்த திரைப்படம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சசி தரூர், இது எங்கள் கேரளா ஸ்டோரி அல்ல, உங்களின் கேரளா ஸ்டோரியாக இருக்கலாம் என பதிவிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
படக்குழு என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், Twiiter/adah_sharma
தி கேரள ஸ்டோரி படத்தின் டிரெய்லர் வெளியான பிறகு சமூக ஊடகங்களின் எழுந்துள்ள விவாதங்கள் குறித்து அந்த படத்தின் கதாநாயகி அடா ஷர்மா பதிலளித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 5
"மூளைச்சலவை செய்யப்பட்டு மதமாற்றத்திற்கு உள்ளான சில பெண்களை நான் சந்தித்தேன். அவர்களின் அனுபவங்களை நான் இந்த படத்தில் என் கதாபாத்திரம் வாயிலாக பிரதிபலித்தேன். தி கேரளா ஸ்டோரி படம் குறித்து இயக்குநரும், தயாரிப்பாளரும் நீண்ட ஆய்வை மேற்கொண்டனர். இந்த திரைப்படம் மதங்களுக்கு எதிரானது அல்ல. மதத்தை முன்னிறுத்தி, மக்களை ஏமாற்றும் தீவிரவாத குழுக்களை பற்றி இந்த படத்தில் பேசியிருக்கிறோம். போதை மருந்து கொடுத்து, மூளைச் சலவை செய்யப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்து கடத்தப்படும் பெண்கள் குறித்து மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான் இந்த படத்தின் நோக்கம். ஆனால் இது குறித்து கேள்வி எழுப்பாமல், இந்த படத்தை அரசியல் பரப்புரை என விமர்சனம் செய்கிறார்கள்."
படத்தின் தொடக்கத்தில் பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளோம். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு காட்சியும் சமூகத்தில் யாரோ ஒரு நபருக்கு நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களை சந்தித்து பேசி சேகரித்த தகவலின் அடிப்படையின் இந்த படத்தை எடுத்துள்ளோம், என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் விபுல் ஷா ஊடகங்களிடம் தெரிவித்தார்.
லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்தியாவில் நடந்த சில சம்பவங்கள் தன்னை பாதித்ததாகவும், அதை மையப்படுத்தி இந்த படத்தை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
தனது படம் தொடர்பாக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள இயக்குநர், 'உங்களுக்கு விருப்பம் இல்லையெனில், விவாதிக்கலாம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 6
"கேரளாவில் கல்வியறிவு அதிகம். கல்வி நமக்கு சகிப்பு தன்மையை கற்றுக் கொடுத்துள்ளது. டிரெய்லரை பார்த்து ஏன் அவசரமாக கருத்து சொல்கிறீர்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் விவாதிக்கலாம். 7 வருடமாக கேரளாவில் இந்த படத்திற்காக உழைத்துள்ளோம். நானும் உங்களின் ஒரு பகுதி தான். நாம் அனைவரும் இந்தியர்கள்," என்று அந்த டிவிட்டில் பதிலளித்து இருக்கிறார் தி கேரளா ஸ்டோரி படத்தின் இயக்குநர் சுதிப்டோ சென்.
சங் பரிவாரின் பொய் தொழிற்சாலை

பட மூலாதாரம், ANI
மதச்சார்பின்மை மாநிலமான கேரளாவில், திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக ‘தி கேரளா ஸ்டோரி’ இந்தி படத்தின் ட்ரெய்லர் அமைந்துள்ளது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தி கேரளா ஸ்டோரி திரைப்பட விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள கேரள மாநில முதலமைச்சர், 'லவ் ஜிகாத்' என்பது நீதிமன்றங்கள், புலனாய்வு அமைப்புகள், உள்துறை அமைச்சகத்தால் கூட நிராகரிக்கப்பட்ட ஒரு சொல் என்று அவர் கூறுகிறார்.
அரசுக்கு எதிரான பிரச்சாரமாகவும், வகுப்புவாதத்தை தூண்டும் வகையில் படத்தின் டிரெய்லர் அமைந்துள்ளது என அவர் கூறினார்.
இது போன்ற பிரச்சாரப் படத்தையும், அதில் இஸ்லாமியர்கள் காட்டப்பட்ட விதத்தையும், கேரள மாநிலத்தில் அரசியல் ஆதாயம் தேடும் சங் பரிவாரங்களின் முயற்சிகளுடன் இணைந்து பார்க்க வேண்டும் என்று முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சங் பரிவார அமைப்புகளின் பொய் தொழிற்சாலையில் உருவான மற்றொரு படைப்பு என இந்த படத்தை குறிப்பிட்டுள்ள பினராயி விஜயன் இந்த விவகாரத்தில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 7
ஏ.ஆர். ரகுமான் கருத்து
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 8
கேரளா ஸ்டோரி படம் தொடர்பான தனது மறைமுகமான எதிர்ப்பை தனது டிவிட்டர் பதிவு மூலம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிவு செய்துள்ளார். அதில் மற்றொரு கேரளா ஸ்டோரி என பகிரப்பட்ட ஒரு காணொளியை தனது பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்