பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது வழங்கும் விழா - காணொளி
இந்த ஆண்டின் பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனையாக துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த விருதுக்கு மனு பாக்கருடன், கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவ்னி லேகரா, கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.
- செஸ் வீராங்கனை தானியா சச்தேவ் மற்றும் கோ கோ விளையாட்டில் இந்தியாவை வழிநடத்திய நஸ்ரின் ஷேக் ஆகியோருக்கு பிபிசி சேஞ்ச்மேக்கர் ஆஃப் தி இயர் 2024 விருது வழங்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டை சேர்ந்த இறகுப்பந்து வீராங்கனை துளசிமதி முருகேசன் மற்றும் ஓட்டப்பந்தய வீராங்கனை பிரீத்தி பால் ஆகியோருக்கு பிபிசி நட்சத்திர வீரர் 2024 விருது வழங்கப்பட்டுள்ளது.
- 2004 முதல் 2022 வரை 18 ஆண்டு காலம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை வழிநடத்திய மிதாலி ராஜ், பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றுள்ளார்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இந்நிகழ்வையொட்டி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "2020 முதல் ஒவ்வொரு ஆண்டும் பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை என்ற விருதை வழங்குகிறது. இதன் மூலம் விளையாட்டுகளில் பெண்களின் சாதனைகளை முன்னிலைப்படுத்த பிபிசி தனது அர்ப்பணிப்பைக் காட்டியுள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்." என தெரிவித்துள்ளார்.

மேலும், "இந்த முயற்சியின் மூலம் அங்கீகரிக்கப்படும் அசாதாரண விளையாட்டு வீரர்கள், தங்கள் விளையாட்டுகளில் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல், இளம் பெண்கள் தங்கள் கனவுகளை அச்சமின்றித் தொடரவும் ஊக்கமளித்துள்ளனர்." என கூறியுள்ளார்.
இந்தியாவில் உள்ள விளையாட்டு வீராங்கனைகளின் சாதனைகளைக் கௌரவிப்பதற்கும், விளையாட்டு வீராங்கனைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் சவால்களை முன்னிலைப்படுத்துவதற்கும் பிபிசியின் இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2019-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)









