BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

பட மூலாதாரம், TNDIPR
வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம். எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம். நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும். பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை மாறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த வகையில் இந்த வாரம், 'தமிழ்நாடு என்ற பெயரும் தொடர் சர்ச்சைகளும், டெல்லியில் காருடன் இழுத்துச் செல்லப்பட்ட பெண்ணுக்கு நடந்தது என்ன?, இந்த ஆண்டு மூன்றில் ஒரு பங்கு உலக நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?, ரொனால்டோ மூலம் சௌதி அரேபியாவுக்கு கிடைக்கும் ஆதாயம் என்ன? 'வாரிசு' டிரைலர் விஜய் ரசிகர்களை ஏமாற்றியதா? என்பன உள்ளிட்ட ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
தமிழ்நாடு என்ற பெயரும் தொடர் சர்ச்சைகளும் - பின்னணி என்ன?
"தமிழ்நாடு என்ற பெயருக்கு பதில் தமிழகம் என்பதே சரியாக இருக்கும், ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டதால் பாரதத்தின் பகுதி தமிழகம் என்பதுதான் சரி" என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் தெரிவித்த கருத்து பெரும் சர்சையாகியுள்ளது. விரிவாக படிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
டெல்லியில் காருடன் இழுத்துச் செல்லப்பட்ட பெண்ணுக்கு நடந்தது என்ன? – களத்தில் பிபிசி
கஞ்சாவ்லா வழக்கை விசாரித்து வரும் தில்லி போலீஸார் செவ்வாய்கிழமை மதியம் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, இந்த விவகாரத்தில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது என்று தெரிவித்தனர்."பாதிக்கப்பட்ட பெண்ணுடன் மற்றொரு பெண் இருந்தார்.
விபத்தில் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. விபத்து நடந்தவுடன் அவர் எழுந்து சென்று விட்டார்,” என்று டெல்லி காவல்துறையின் சிறப்பு கமிஷனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சாகர்ப்ரீத் ஹூடா கூறினார். என்ன நடந்தது? லிங்கை க்ளிக் செய்து படிக்கவும்.

பட மூலாதாரம், ANI
உலக பொருளாதாரம்: மூன்றில் ஒரு பங்கு உலக நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன?
உலகப் பொருளாதார வலிமையில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ள நாடுகள் இந்த ஆண்டு மந்தநிலையை எதிர்கொள்ளும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் எச்சரித்துள்ளார்.
அந்த அமைப்பின் தலைவரான கிறிஸ்டலீனா ஜியார்ஜீவா, கடந்த ஆண்டை விட 2023ஆம் ஆண்டு சற்று கடினமாக இருக்கும் எனவும், அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். விரிவாக படிக்க லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
ரொனால்டோ மூலம் சௌதி அரேபியாவுக்கு கிடைக்கும் ஆதாயம் என்ன?
உலக கோப்பை காலிறுதியில் போர்ச்சுகல் தோற்றுப் போனதும் கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறிய நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாக செளதி அரேபியாவில் அரங்கம் அதிர புதிய அவதாரம் எடுத்துள்ளார். இதனால் செளதிக்கு என்ன ஆதாயம் என்பதை அறிய லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

பட மூலாதாரம், Getty Images
'வாரிசு' டிரைலர் விஜய் ரசிகர்களை ஏமாற்றியதா? 'யூட்யூப்' எண்கள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், VENKATESWARA CREATIONS
அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் அதிக பார்வையை பெற்றதாகவும் அதனை விஜய் நடித்துள்ள வாரிசு படம் பெறவில்லை என்றும் கூறப்படும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் இருதரப்பு ரசிகர்களிடையே காரசார விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. லிங்கை க்ளிக் செய்து முழுமையாக வாசிக்கவும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












