அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய -சீன வீரர்கள் மோதல்: என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய-சீன வீரர்கள் மோதல் - என்ன நடந்தது?

இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் செக்டாரில் இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. 2022ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி இந்த மோதல் நடந்ததாக இந்திய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 9ஆம் தேதி அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டரில் சீன ராணுவ துருப்புக்கள் நுழைந்ததாகவும், அதற்கு இந்தியா பதிலடி கொடுத்ததாகவும் இந்திய இராணுவம் பிபிசியிடம் தெரிவித்தது.

இந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்கள் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து, இரு நாட்டு வீரர்களும் உடனடியாக அங்கிருந்து பின்வாங்கி விட்டதாக இந்திய ராணுவம் கூறுகிறது.

அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய-சீன வீரர்கள் மோதல்

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: