வீர் பால் திவஸ்: ஒளரங்கசீப் பற்றி பிரதமர் மோதி சொன்னது என்ன?

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

குரு கோவிந்த் சிங்கின் இளம் மகன்களான பாபா ஃஜோராவர் சிங், பாபா ஃபதே சிங் மற்றும் மாதா குஜ்ரி ஆகியோரின் அசாதாரண தைரியத்தையும் தியாகத்தையும் நினைவுகூரும் வகையில், தில்லி உட்பட நாடெங்கிலும் மற்றும் வெளிநாடுகளிலும் டிசம்பர் 26 ஆம் தேதியை 'வீர் பால் திவஸ்' என்று இந்திய அரசு கொண்டாடுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதியும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது, ​​சுமார் முன்னூறு குழந்தைகள் பாடிய 'ஷபத் கீர்த்தனிலும்’ பிரதமர் மோதி பங்கேற்றார்.

வீர் பால் திவஸ் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோதி, ”வீரத்தின் உச்சத்தை எட்ட குறைந்த வயது ஒரு தடை அல்ல என்பதை வீர் பால் திவஸ் நினைவூட்டும். பத்து குருக்களின் பங்களிப்பு என்ன என்பதை வீர் பால் திவஸ் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. நாட்டின் சுயமரியாதைக்காக சீக்கிய பாரம்பரியத்தின் தியாகம் என்ன? இந்தியா என்றால் என்ன என்பதையும் இந்தியாவின் அடையாளம் என்ன என்பதையும் வீர் பால் திவஸ் சொல்லும்," என்று கூறினார்.

"குரு கோவிந்த் சிங் ஜி ஔரங்கசீப்பின் பயங்கரவாதத்திற்கு எதிராக மலை போல் நின்றார். ஜோராவர் சிங் சாஹிப் மற்றும் ஃபதே சிங் சாஹிப் போன்ற சிறு குழந்தைகளுடன் ஔரங்கசீப்பிற்கு என்ன பகைமை இருக்க முடியும்? இரண்டு அப்பாவி சிறு குழந்தைகளை உயிருடன் சுவரில் வைத்து மூடும் கொடுமை ஏன் செய்யப்பட்டது?” என்று அவர் குறிப்பிட்டார்.

”குரு கோவிந்த் சிங்கின் குழந்தைகளின் மதத்தை, வாளின் வலிமைகொண்டு மாற்ற ஔரங்கசீபும் அவரது மக்களும் விரும்பினர். எந்த ஒரு நாட்டில் புதிய தலைமுறை குற்றச் செயல்களுக்கு அடிபணிகிறதோ, அந்த நாட்டின் தன்னம்பிக்கை மற்றும் எதிர்காலம் தானாகவே அழிந்து விடும்.”

இந்த நாளை கொண்டாடும்வகையில் கலாசார அமைச்சகம், சிறப்பு டிஜிட்டல் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்தது.

'வீர் பால் திவஸ்' என்ற பெயருக்கு எதிர்ப்பு

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Narendra Modi

ஆனால் ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி 'வீர் பால் திவஸ்' என்ற பெயர் குறித்து மீண்டும் ஆட்சேபங்களை எழுப்பியுள்ளது.

"மோதி அரசு டிசம்பர் 26 ஆம் தேதி வீர் பால் திவஸ்' கொண்டாடுவதாக அறிவித்தது. அதே நேரத்தில் ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி இந்த பெயரை கடிதம் மூலம் எதிர்த்துள்ளது,” என்று ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியின் உறுப்பினர் குர்பச்சன் சிங் கிரேவால், டிசம்பர் 25 மாலை ஊடகங்களிடம் கூறினார்.

"வீர் பால் திவஸ்' என்ற பெயரை சொல்லும்போது ​​குழந்தைகளின் பெயர் மற்றும் அவர்களின் தியாகங்கள் குறிப்பிடப்படவில்லை. இந்தப் பெயருடன் சாஹிப்ஜாதாக்கள் மற்றும் தியாகி என்ற வார்த்தைகளை சேர்க்க கோரிக்கை எழுந்தது. அவ்வாறு செய்ய இருப்பதாக அரசும் கோடிக்காட்டியது. ஆனால் இது செய்யப்படவில்லை."

"சிரோமணி கமிட்டி தனது ஆட்சேபனையை தெரிவித்தது, ஆனால் இந்த நாட்களில் பாஜகவுடன் இயங்கும் டெல்லி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி உறுப்பினர்கள், எல்லாம் தெரிந்தும் இந்த பிரச்னையில் ஒரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. இது மிகவும் வருத்தமளிக்கிறது," என்று கிரேவால் குறிப்பிட்டார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

'சீக்கிய மத உள் விவகாரங்களில் தலையிடுதல்'

குரு கோபிந்த் சிங்கின் இளம் மகன்களின் தியாக தினம் 'வீர் பால் திவஸ்' என்ற பெயரில் கொண்டாடப்படும் என்று கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. அதன் பின்னர் சில சர்ச்சைகள் தொடங்கின. இது சீக்கிய மதத்தின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகக் கூறி, இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெறுமாறு சில சீக்கிய அறிஞர்கள் கோரினர்.

ஆனால் பிரதமரின் இந்த முடிவை பல மத மற்றும் அரசியல் தலைவர்கள் பாராட்டினர்.

பிரதமரின் இந்த அறிவிப்புக்குப் பிறகு பல்வேறு எதிர்வினைகள் வெளியாகின.

இளம் சாஹிப்ஜாதாக்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் டிசம்பர் 26 ஆம் தேதி 'வீர் பால் திவஸ்' என்று கொண்டாடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோதி, ஜனவரி 9 ஆம் தேதி நடைபெற்ற குரு கோவிந்த் சிங்கின் பிரகாஷ் பர்வ் விழாவில் அறிவித்தார்.

இந்த தகவலை ட்வீட் மூலம் பகிர்ந்து கொண்ட பிரதமர்," இந்த ஆண்டு முதல் டிசம்பர் 26 ஆம் தேதி வீர் பால் தினமாக கொண்டாடப்படும் என்பதை இன்று ஸ்ரீ குரு கோவிந்த் சிங் ஜியின் பிரகாஷ் பர்வ்(பிறந்த ஆண்டு தினம்) விழாவின் புனிதமான சந்தர்ப்பத்தில், அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். சாஹிப்ஜாதாக்களின் துணிச்சலுக்கும், நீதியின் மீதான அவர்களின் பக்திக்கும் உரிய மரியாதை இது,"என்று குறிப்பிட்டார்.

"சாஹிப்ஜாதா ஜோராவர் சிங் ஜி மற்றும் சாஹிப்ஜாதா ஃபதே சிங் ஜி தியாகம் செய்த அந்த நாள் வீர் பால் திவஸ் என்று கொண்டாடப்படும். இந்த இரண்டு மகாபுருஷர்களும் மதத்தின் கொள்கைகளிலிருந்து விலகிச் செல்வதைக்காட்டிலும் மரணத்தை விரும்பினர்," என்று அவர் எழுதினார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

சீக்கிய சமூகத்தின் எதிர்ப்புக்குக் காரணம்

பிரதமரின் அறிவிப்புக்குப் பிறகு கருத்து வெளியிட்ட சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியின் தலைவர் வழக்கறிஞர் ஹர்ஜிந்தர் சிங் தாமி,"பிரதமரின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் இளைய சாஹிப்ஜாதாக்களின் தியாகத்தை பால் திவஸ் என்று மட்டுப்படுத்துவது சீக்கிய உணர்வுகள் மற்றும் மரபுகளுக்கு ஏற்றது அல்ல,"என்றார்.

தியாகிகள் தினத்திற்கு பெயர் சூட்டுவதற்கு பதிலாக அதை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று சிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி உறுப்பினர் கிரஞ்சோத் கெளர் கோரிக்கை விடுத்தார்.

"சாஹிப்ஜாதாக்களின் தியாகத்தை புறக்கணித்து சீக்கியரல்லாத அரசு, இளைய சாஹிப்ஜாதாக்களின் தியாக தினத்தை 'வீர் பால் திவஸ்' என்று பெயரிட்டுள்ளது. மோதி அரசு அதை குழந்தைகளின் விளையாட்டாக மாற்றியுள்ளது. சமய சொல்அகராதியில், சாஹிப்ஜாதாக்களை குறிப்பிட ’பாபா’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. மேலும் சீக்கியரல்லாத எவருக்கும் மதச் சொற்களை தவறாகப் பயன்படுத்த உரிமை இல்லை,"என்று பிரதமரின் அறிவிப்பு குறித்து அவர் கூறினார்.

ஜனவரி 9 ஆம் தேதி ஆங்கிலத்தில் ட்வீட் செய்த இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு பிரதமர் பஞ்சாபியிலும் ட்வீட் செய்தார். அதில் சாஹிப்ஜாதாக்களை குறிக்க பாபா என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது.

சீக்கியர்
படக்குறிப்பு, சீக்கிய வரலாற்றின் பார்வையில், பத்தாவது குருவின் மகன்களின் தியாகம் சிறந்த வீரர்களின் தியாகத்தைப்போன்றது என்று ஹர்ஜிந்தர் தாமி கூறியுள்ளார்.

'முடிவை ரத்து செய்ய வேண்டும்'

சீக்கியர்களின் குழுவான தல் கால்ஸாவின் செய்தித் தொடர்பாளர் கன்வர்பால் சிங், இந்த அறிவிப்புக்கு அதிருப்தி தெரிவித்ததோடு, சீக்கியர்களின் மத விவகாரங்களில் தலையிட அரசுக்கு உரிமை இல்லை என்று கூறினார்.

இளைய சாஹிப்ஜாதாக்களின் தியாக தினத்தை 'வீர் பால் திவஸ்' என்று கொண்டாடுவது சரியாக இருக்காது. எனவே இந்த முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று தல் கால்ஸா கேட்டுக்கொண்டது.

மறுபுறம், சாஹிப்ஜாதாக்களின் தைரியத்தையும் வீரத்தையும் கொண்டாடும் வகையில் டிசம்பர் 26 ஆம் தேதியை நாடு முழுவதும் பொது விடுமுறையாக அறிவித்து 'வீர் பால் திவஸ்' கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோதியின் முடிவை, தம்தமி தக்ஸாலின் தலைவர் ஹர்னம் சிங் கால்ஸா பாராட்டினார்.

இதற்காக அவர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். பிரதமரின் இந்த நடவடிக்கையால் நாட்டின் தலை நிமிர்ந்து நிற்கிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், HARNAM SINGH KHALSA

படக்குறிப்பு, பிரதமர் மோதியின் முடிவை ஹர்னாம் சிங் கால்ஸா பாராட்டியுள்ளார்

'முடிவு வரவேற்கத்தக்கது, ஆனால் பெயரிடல் ஏற்புடையதல்ல'

பாபா ஜோராவர் சிங் மற்றும் பாபா ஃபதே சிங் ஆகியோரின் தியாகம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதை சிரோமணி அகாலி தளம் (டெல்லி) தலைவர் பரம்ஜித் சிங் சர்னா, வரவேற்றார். ஆனால் இந்த மாபெரும் தியாக தினத்தை 'வீர் பால் திவஸ்' என்று பெயரிட வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மறுபுறம், டெல்லி சீக்கிய குருத்வாரா பிரபந்த கமிட்டியின் முன்னாள் தலைவரும், பாஜக தலைவருமான மஞ்சிந்தர் சிங் ஸிர்ஸா பிரதமரின் அறிவிப்பை வரவேற்று, சாஹிப்ஜாதாக்களின் தியாக வரலாற்றை நாடும் உலகமும் இதன்மூலம் அறியும் என்று கூறினார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 3

'இது பாராட்டுக்குரிய நடவடிக்கை'

"டிசம்பர் 26-ஆம் தேதியை 'வீர் பால் திவஸ்' ஆக கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோதியின் முடிவை வரவேற்கிறேன்" என்று பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கும் ட்வீட் செய்துள்ளார்.

"இந்திய அரசின் இந்த முடிவை நான் பாராட்டுகிறேன். இது போன்ற அறிவிப்பு சீக்கிய வரலாறு பற்றிய அறிவை அதிகரிக்கும். அந்த தியாகம் வரலாற்றை மாற்றியது. இந்திய அரசு அதை அங்கீகரித்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒரு விஷயம்," என்று குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப் ஆய்வு மையத்தின் இயக்குனர் டாக்டர் அமர்ஜித் சிங் குறிப்பிட்டார்.

மக்களின் யோசனையின் பேரில் இந்த நாளின் பெயரை மாற்றுவது பெரிய விஷயமாக இருக்காது என்று டாக்டர் அமர்ஜீத் சிங் கருதினாலும், அது நடக்கவில்லை. அதில் சாஹிப்ஜாதா என்ற வார்த்தையைச் சேர்த்தால் சிலரது ஆட்சேபங்கள் நீங்கிவிடும் என்று நான் பரிந்துரைக்கிறேன் என்றும் அவர் கூறினார்.

சாஹிப்ஜாதாக்களின் தியாகம்

நரேந்திர மோதி

பட மூலாதாரம், RAVINDER SINGH ROBIN/BBC

சீக்கிய வரலாற்றில், பௌஷ் அல்லது புஸ் மாதம் (டிசம்பர் நடுப்பகுதியில் தொடங்கும்) மிகவும் சோகமானது. பத்தாவது குரு ஸ்ரீ குரு கோவிந்த் சிங் ஜி தனது குடும்பத்தைப் பிரிதல், சாஹிப்ஜாதாக்கள் மற்றும் மாதா குஜ்ரியின் தியாகம் போன்ற சோகங்கள் அனைத்தும் இந்த மாதத்தில் நடந்தன.

17ஆம் நூற்றாண்டில், பஞ்சாபின் சர்ஹிந்த் மாகாணத்தில் மாதா குஜ்ரி, இளைய சாஹிப்ஜாதாக்கள் பாபா ஜோராவர் சிங் மற்றும் பாபா ஃபதே சிங் ஆகியோரை நவாப் வசீர் கான், ஃபதேகர் சாஹிப்பின் குளிரான மினாரில் சிறையில் அடைத்தார். பின்னர் இளைய சாஹிப்ஜாதாக்கள் பாபா ஜோராவர் சிங் மற்றும் பாபா ஃபதே சிங்கும் சுவரில் உயிருடன் வைத்து மூடப்பட்டனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: