அமித் ஷா vs யோகி: மோதி இடத்தை பிடிக்கப் போவது யார்? ஆர்.எஸ்.எஸ். ஆதரவு யாருக்கு? ஓர் அலசல்

அமித்ஷா vs யோகி ஆதித்யநாத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (இடமிருந்து) யோகி ஆதித்யநாத், மோதி, அமித் ஷா
    • எழுதியவர், விகாஸ் திரிவேதி
    • பதவி, பிபிசி நிருபர்

'மோதிக்கு மாற்று யார்?'

மளிகைக் கடையோ, டீ கடையோ, சேதமடைந்த சாலையில் செல்லும் டெம்போவோ அல்லது மேகங்களைத் தொடும் விமானமோ, எந்த இடமாக இருந்தாலும் சரி பல ஆண்டுகளாக, நரேந்திர மோதியின் ஆதரவாளர்கள் மத்தியிலான பேச்சுக்களின் போது எழுப்பப்படும் ஒரு கேள்வி.. - மோதியின் அரசியல் வாரிசு யார்? மோதி இடத்திற்கு வரப் போவது யார்?

இதற்கு முன்பு பிரதமர் மோதிக்கு சரிக்கு சரியாக எதிர்க்கட்சியில் யார் இருக்கிறார்கள் என்று கேட்கப்பட்ட கேள்வி, இப்போது பாஜகவில் அவருக்கு பதிலாக அவரது இடத்தை நிரப்பப் போகும் நபர் யார் என்று கேட்கப்படுகிறது.

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோதி அடுத்த ஆண்டு 75 வயதை தொடுவார். 75 வயது தலைவரின் அரசியல் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள, சில தேதிகளையும் சில அறிக்கைகளையும் பின்னோக்கி பார்க்க வேண்டும்.

யோகி பக்கம் நிற்கும் ஆர்எஸ்எஸ், அமித்ஷா பக்கம் நிற்கும் மோதி : அடுத்த வாரிசு யார்?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஜாமீனில் வெளிவந்த கேஜ்ரிவால் குறித்து கேள்வி

அரவிந்த் கேஜ்ரிவால்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மே 2024 இல், திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து பாஜகவைப் பற்றி பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதில், முக்கியமான ஒன்று மோதிக்குப் பிறகு பாஜகவில் யார் பிரதமராக வருவார்? என்பது பற்றியதாகும்.

அப்போது அமித் ஷாவும் நரேந்திர மோதியும் கூட தங்கள் நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய ஒன்று, இந்த அறிக்கைகள் அனைத்தும் 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பு வெளிவந்தது.

400-ஐ தாண்டும் என்ற பாஜகவின் கனவு உடைந்துவிட்டது.

எனவே, இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜகவில் ஏற்பட்ட சலசலப்பு பாஜகவின் புதிய வாரிசு பற்றிய விவாதங்களுக்கு வழிவகுத்ததா? பாஜகவிற்குள் நரேந்திர மோதியின் அரசியல் வாரிசாக யார் இருக்க முடியும்? இதில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) பங்கு என்னவாக இருக்கும்?

ஆர்எஸ்எஸ்-ன் பங்கு முக்கியமானது, ஏனெனில் நிபுணர்களின் கூற்றுப்படி, பாஜக பலவீனமடையும் போது, ​​​​கட்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்கு அதிகரிக்கிறது.

யோகி ஆதித்யநாத்துக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் இடையே அரசியல் பனிப்போர் நடப்பதாக பல அரசியல் நிபுணர்களின் கூற்று மற்றும் சில சம்பவங்கள் ஊகங்களுக்கு வழிவகுத்தன. இது அரசியல் வாரிசு என்னும் கேள்வியை மிகவும் முக்கியமானதாகிறது.

75 வயதில் ஓய்வு என்ற பேச்சு எங்கிருந்து தொடங்கியது?

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

நரேந்திர மோதி 2014-ல் பிரதமரான போது, ​​எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கு நாடாளுமன்றக் குழுவிலோ அல்லது அமைச்சரவையிலோ இடம் கொடுக்கப்படவில்லை.

இரு தலைவர்களுக்கும் இடம் ஒதுக்கப்பட்டது உண்மைதான், ஆனால் வழிகாட்டுதல் குழுவில். அப்போது அத்வானிக்கு 86 வயது, ஜோஷிக்கு 80 வயது.

ஜூன் 2016 இல் மத்தியப்பிரதேச அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, ​​75 வயதான பாபுலால் கவுர் மற்றும் சர்தாஜ் சிங் ஆகிய அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. அதேபோல், 80 வயதான முன்னாள் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கும் எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை, மூத்த ஹிமாச்சல் தலைவர் சாந்தகுமாரும் ஓரங்கட்டப்பட்டார்.

2019 மக்களவைத் தேர்தலில் 91 வயதான அத்வானி மற்றும் 86 வயதான ஜோஷிக்கு பாஜக தொகுதி ஒதுக்கவில்லை.

ஏப்ரல் 2019 இல் `தி வீக்’ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், அமித் ஷா, "75 வயதுக்கு மேல் யாருக்கும் தொகுதி வழங்கப்படவில்லை" என்று கூறியிருந்தார். இது கட்சியின் முடிவு என்றார்.

மற்றொரு பழைய வீடியோவில், ஷா "75 வயதுக்கு மேற்பட்ட தலைவர்களுக்கு பொறுப்பு வழங்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது." என்று கூறியிருப்பார்.

ஆனால், "75 வயதைக் கடந்த தலைவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று கட்சியில் எந்த விதியும் இல்லை, மரபும் இல்லை" என்றும் அமித்ஷா கூறியிருந்தார்.

உதாரணமாக, கர்நாடகாவின் எடியூரப்பா 80 வயதைத் தாண்டிய பிறகும் மாநிலத்தில் பாஜகவை வழிநடத்திச் செல்கிறார்.

ஆனால், கடந்த காலத்தில் கல்ராஜ் மிஸ்ரா, நஜ்மா ஹெப்துல்லா, தற்போது ஜிதன் ராம் மாஞ்சி ஆகியோர் 75 வயதைக் கடந்தும் மோதி அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளார். இதில், மாஞ்சி பாஜகவைச் சேர்ந்தவர் அல்ல, ஆனால் அவரது கட்சி ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.

அமித் ஷா சொன்ன `75 வயது’ தொடர்பான கட்சியின் முடிவை மோதி பின்பற்றுவாரா?

ஒரு காலத்தில் மோதியின் தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்த பிரசாந்த் கிஷோர் ஒரு பேட்டியில் கூறுகையில், "இந்த ஆட்சியை உருவாக்கியது வழி நடத்துவது மோதி ஜி தான், எனவே அவர் இந்த விதியை பின்பற்றுவாரா இல்லையா?"

ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் பாஜகவின் சித்தாந்த ஆதரவாளரான டாக்டர் சுர்வோகமல் தத்தா பிபிசியிடம் கூறுகையில், "75 வயதைத் தாண்டிய பிறகு, ஓய்வைப் பற்றி பரிசீலிக்க வேண்டுமா இல்லையா என்பது பிரதமரைச் சார்ந்தது. அவர் தானாக முன்வந்து முடிவு எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம். இது அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கும், இதில் அமைப்பு அல்லது சித்தாந்தத்தின் அழுத்தம் ஏதும் இல்லை. ” என்றார்.

மூத்த பத்திரிகையாளர் விஜய் திரிவேதி, பாஜக, ஆர்எஸ்எஸ், அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் யோகி ஆதித்யநாத் குறித்து புத்தகங்களை எழுதியுள்ளார்.

விஜய் திரிவேதி பிபிசி ஹிந்தியிடம், "மோதி தனது 75 வயதில் தனது பதவியை விட்டு விலகுவார் அல்லது ஆர்எஸ்எஸ் வேறு யாரையாவது முன்னிறுத்தும் எண்ணத்தில் இருப்பது போல தெரியவில்லை" என்று கூறினார்.

மூத்த பத்திரிகையாளர் ராகேஷ் மோகன் சதுர்வேதி கூறுகையில், "நரேந்திர மோதி தற்போது மிகவும் சுறுசுறுப்பாக உள்ளார். 2029 வரை கட்சியின் கட்டுப்பாடு நரேந்திர மோதியின் கையில் தான் இருக்கும் என்று தெரிகிறது".

ஆனால் அரசியல் களம் நிச்சயமற்ற தன்மைகள் நிறைந்தது. குறிப்பாக பா.ஜ.க மற்றும் ஆர்எஸ்எஸ் சங்கத்தில் எது வந்தாலும் எதிர்கொள்ளும் ஆயத்தங்கள் வெகு காலத்திற்கு முன்பே தொடங்கிவிட்டன.

'சங்கம் சரணம் கச்சாமி' புத்தகத்தின் ஆசிரியர் விஜய் திரிவேதி கூறுகையில், "நம்பர் ஒன் இடத்துக்கான போட்டி நடக்கவில்லை. ஆனால் அந்த நபருக்கான தேடுதல் தொடங்கியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆர்எஸ்எஸ் சங்கத்தைப் பற்றி நாங்கள் புரிந்துகொண்டது என்னவென்றால், அவர்கள் தொலைநோக்கு முடிவுகளையும் கொள்கைகளையும் நம்பியுள்ளனர். வெளிப்படையாகவே, பிரதமர் மோதியைத் தவிர வேறு தலைமையையும் அந்த அமைப்பு தேடி கொண்டுதான் இருக்கிறது.

எனவே ஆர்எஸ்எஸ் உண்மையில் மோதியின் அரசியல் வாரிசை தேடும் ஆயத்தங்களைத் தொடங்கியுள்ளது. நரேந்திர மோதிக்கும் ஆர்எஸ்எஸ் சங்கத்துக்கும் கடந்த 10 ஆண்டுகளில் உறவு எவ்வளவு ஆழமானது என்பதை புரிந்துகொள்வது அவசியம்.

ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் நரேந்திர மோதி

"அவர்கள் வானத்தில் எவ்வளவு உயரம் வேண்டுமானாலும் செல்லட்டும், ஆனால் அவர்கள் மீண்டும் பூமிக்கு தான் வர வேண்டும்."

புதிதாக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியான ஜனசங்கத்தில் இணைந்த தொண்டர்களுக்காக ஆர்எஸ்எஸ் அமைப்பின் இரண்டாவது தலைவர் கோல்வால்கர் இவ்வாறு கூறினார்.

ஜனசங்கத்திற்குப் பதிலாக பாரதிய ஜனதா கட்சி ஏப்ரல் 1980 இல் உருவாக்கப்பட்டது.

கோல்வால்கர் பேசிய அந்த மேடை பேச்சுக்கு பிறகு பல காலங்கள் கடந்துவிட்டன. ஆனால் ஆர்எஸ்எஸ் கடந்த காலங்களில் அதன் தலைவர்களை 'வானத்திலிருந்து பூமிக்கு' கொண்டு வந்ததற்கு பல உதாரணங்கள் உள்ளன.

பால்ராஜ் மதோக், ஜஸ்வந்த் சிங், லால் கிருஷ்ண அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி போன்றவர்கள் சில உதாரணங்கள். இந்த பெரிய தலைவர்கள் சுமையாக மாறத் தொடங்கிய போது, ​​​​அவர்களை வீழ்த்தவும், அதிகாரத்தை பறிக்கவும் ஆர்எஸ்எஸ் தாமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்த நிலைப்பாடு இப்போதும் அப்படியே இருக்கிறது. சமீப நாட்களில் அமைப்புத் தலைவர் மோகன் பாகவத்தின் இரண்டு அறிக்கைகளைக் கவனியுங்கள்.

கடந்த ஜூன் 10-ம் தேதி பேசுகையில், "உண்மையான வேலைக்காரன், உண்மையான வேலைக்காரன் என்று சொல்லக் கூடியவன் கண்ணியத்துடன் நடந்து கொளகிறான். அதற்குரிய வரம்புகளைப் பின்பற்றி செயல்களை செய்கிறார். ஆனால் அதனைச் செய்தார் என்ற அகங்காரம் அவனுக்குள் இல்லை. வேலைக்காரன் என்று சொல்லும் உரிமை அவனுக்கு உண்டு" என்று மோகன் பாகவத் பேசியிருந்தார்.

ஜூலை 18-ம் தேதி பேசுகையில், "மனிதன் இருக்கிறான், ஆனால், மனிதாபிமானம் இல்லை. அவன் முதலில் மனிதனாக மாற வேண்டும். பிறகு மனிதன் அமானுஷ்யமாக, சூப்பர்மேன், சூப்பர் மனிதனாக மாற விழைகிறான். அத்துடன் நிற்பதில்லை. கடவுளாக மாற விரும்புகிறான். ஆனால், கடவுள் நம்மை விட பெரியவர். நான் பிரபஞ்ச வடிவம் என்று கடவுள் கூறுகிறார். கடவுளாக மாற விரும்புகிறவர் அத்துடன் நிற்பாரா அல்லது அதற்கு அப்பாலும் எதாவது இருக்கிறதா?" என்றும் அவர் பேசியுள்ளார்.

மோகன் பகவத்தின் இந்த இரண்டு கருத்துகளும் மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வந்தவை.

இந்த கருத்துகளில் பிரதமர் மோதியின் பெயர் எங்கும் இடம் பெறவில்லை, ஆர்எஸ்எஸ் சங்கத்திலிருந்து வரும் அறிக்கையின் மூலம் அவர்களின் நடவடிக்கையை யூகிக்க முடியாது, ஆனால் இந்த அறிக்கைகளுக்கும் பிரதமர் மோதிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்வது கடினம்.

இந்த தேர்தல்களில் ஆர்எஸ்எஸ் முன்பு செய்தது போல் பா.ஜ.க.வுக்கு வேலை செய்யவில்லை என்று சங்கத்துடன் தொடர்புடைய பலர் மற்றும் அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பா.ஜ.க.வுக்கு ஆதரவாகச் செல்லும் வாக்காளர்கள் மத்தியில் இத்தகைய கருத்தையும் சூழலையும் உருவாக்குவதுதான் சங்கத்தின் மிக முக்கியமான பணி.

2013-ம் ஆண்டு பிரதமர் பதவிக்கான போட்டியில் நரேந்திர மோதி தன்னை முன்னிறுத்தியது இந்த சங்கத்தின் ஒப்புதலுடன்தான்.

2019 அல்லது 2014 இல் செய்ததைப் போல 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு சங்கம் உதவாதது ஏன்?

மோதி

பட மூலாதாரம், Getty Images

ஆர்எஸ்எஸ் சங்கமும் மோதியும்: இடைவெளி எப்படி வந்தது?

பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா மே 2024 இல், 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் , "ஆரம்பத்தில் நாங்கள் திறன் குறைந்தவர்களாக இருந்திருப்போம். பெரிதாக சாதிக்காமல் இருந்திருப்போம். அப்போது ஆர்எஸ்எஸ் தேவைப்பட்டது. இன்று நாங்கள் திறன் பெற்று வளர்ந்துள்ளோம். பாஜக சுயமாக இயங்கும்” என்றார் வெளிப்படையாக.

நட்டாவின் இந்த கருத்து சங்கத்தில் கடும் கோபத்தை ஏற்படுத்தியதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

பத்திரிகை ஆசிரியர் ஒருவர் பிபிசியிடம், "இந்த முறை நட்டாவின் கருத்தால் சங்கத்தில் கோப அலை உருவாகியுள்ளது. நீங்கள் எந்த சங்கத்தினரிடம் கேட்டாலும் அவரை பற்றி இதை தான் சொல்வார்கள். அவர் மத்திய பிரதேசத்தில் கடுமையாக உழைத்தார்,அது உண்மை தான். ஏனென்றால் சிவராஜ் சிங் சவுகான் அவருக்கு மரியாதை கொடுத்தார்.” என்றார்.

ஆனால் கோபம் நட்டாவின் கருத்து மீது மட்டும் அல்ல.

பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் ஜூன் 7, 2024 அன்று, நிதிஷ் குமார் கூறியது - இந்தியப் பிரதமர் பதவிக்கு பாஜக நாடாளுமன்றக் கட்சி தலைவர் நரேந்திர மோதியை எங்கள் கட்சி ஆதரிக்கிறது.

`மோதி’ தான் தலைவர் என்று நிதிஷ் குறிப்பிட்டார். ஆனால் அதை யார் தீர்மானித்தது. அதற்கான பாஜக நாடாளுமன்றக் கட்சியின் கூட்டம் இந்த முறை நடந்ததா?

பாஜக -ஆர்எஸ்எஸ் கூட்டணியைப் பற்றி பேசும் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் பிபிசி உடனான உரையாடலில், "ஜூன் 4 மாலை, பாஜக அமைப்பின் உயர்மட்டத் தலைவரும், மூத்த கேபினட் அமைச்சரும் டெல்லியில் உள்ள சங்க அலுவலகத்துக்கு சென்றனர். சங்கத்தின் சார்பில், நாடாளுமன்றக் கட்சி கூட்டத்துக்கு கூப்பிடுகிறார்கள் என்று சங்பரிவாரம் மிக லேசாக சொன்னதும் அர்த்தம் புரிந்தது.

இதைத் தொடர்ந்து, பாஜக நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை, ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் நடைபெற்றது.

2024 தேர்தல் முடிவுகள் பாஜகவின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்ட பிறகும், பாஜக நாடாளுமன்றக் கட்சி கூட்டம் பற்றிய தகவல் வெளியாகவில்லை. ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் தொடர்பான செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டது. அதே நேரத்தில், 2019ல் 303 இடங்களில் வெற்றி பெற்ற பிறகு, தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாளே மே 24-ம் தேதி பாஜக நாடாளுமன்றக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்த ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் நடக்கவில்லை.

அரசியல் வட்டாரங்கள் கூற்றின்படி, “240 இடங்களில் 140 எம்.பி.க்கள் எங்களின் கீழ் உள்ளனர் என்று சங்கத்தினர் அதிகாரப்பூர்வமற்ற உரையாடலில் கூறினர். பா.ஜ.க கூட்டம் இருந்திருந்தால், ஒருவேளை அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க மாட்டார், அதனால்தான் அந்த கூட்டத்தை அவர் கூட்டவில்லை. மறுநாள் சந்திரபாபு நாயுடுவையும், நிதிஷையும் அழைத்து, கடிதங்கள் போன்றவற்றுடன் கூட்டணி விவகாரம் துவங்கப்பட்டது. அவர்களாக எடுத்த முடிவை சங்கத்திற்கு பிடிக்கவில்லை."

மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலோட்டின் 'மோதியின் இந்தியா' புத்தகத்தின்படி, மோதி தனது எட்டாவது வயதில் சங்கத்தில் சேர்ந்தார். லக்ஷ்மண்ராவ் இனாம்தார் என்ற வக்கீல் சாஹேப்புடன் தொடர்பு கொண்டு, நரேந்திர மோதி 1972 இல் சங்கப் பிரசாரகர் ஆனார்.

ஆர்எஸ்எஸ் சங்கத்தின் அதிருப்தி

சங்கத்தைப் பற்றி புரிந்துகொண்டவர்களுக்கு தெரியும், ஒரு தனிநபரை காட்டிலும் சித்தாந்தம் அல்லது அமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

The RSS - Icons of Indian Right என்ற புத்தகத்தின் ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான நிலஞ்சன் முகோபாத்யாய் பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், "மோதி ஜி மீது கோபம் உள்ளது என்பது தெளிவாகிறது. சங்கத்தின் முக்கியத்துவம் குறைகிறது என்று பேசுவதற்கு முன், பாஜகவுக்கு பின்னால் அவர்கள் தாங்கி நிற்கிறார்கள் என்பது முக்கியம். மேலும் மோதியின் பெயரை எடுக்காமல் சங்கம் விமர்சிக்கிறது.

ஆனால், மோதிக்கும், சங்கத்துக்கும் இடையே உள்ள இடைவெளி வெகுவாக அதிகரித்துள்ளது என்று கூறுவது சரியாக இருக்காது.

2024 தேர்தல் பிரசாரத்தின் போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நாக்பூரில் மோதி இரவைக் கழித்ததாக செய்திகள் வந்தன.

முகோபாத்யாய் கூறுகையில், "அமைப்பை விட தனி நபருக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒட்டுமொத்த `மோதி வழிபாட்டு’ முறையையும் ஊக்குவித்ததே அதிருப்திக்கு ஒரு முக்கிய காரணம்."

மோதி மற்றும் அமித் ஷாவின் சார்பு மனிதராக ஜேபி நட்டா கருதப்படுகிறார். அத்தகைய சூழ்நிலையில், நட்டாவின் நாசூக்கான கருத்தும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டது, மேலும் அது அவரது தனிப்பட்ட கருத்தாக கருதப்படவில்லை.

இருப்பினும், ஜூலை 2024 இல், சங்கத்துடனான உறவை இனிமையாக்க பாஜக முயற்சிகளை மேற்கொண்டது.

அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பதற்கும், அந்த அமைப்பின் நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கும் 50 ஆண்டுகளாக இருந்த தடையை மோதி அரசு நீக்கியது

ஆர்எஸ்எஸ்-பாஜக தொடர்புடைய வட்டாரங்கள் கூறுகையில், "குறைவான இடங்கள் காரணமாக எதுவும் மாறவில்லை என்பதை பாஜக காட்ட விரும்புகிறது. எந்த அமைச்சரும் மாறவில்லை, சபாநாயகர் மாறவில்லை, குடியரசு தலைவரும் மாறவில்லை, ஆனால் சங்கத்தின் கோபம் பாஜகவுக்கு தெரியும். அந்த சூழலில் பாஜக முழுவதுமாக விட்டுக்கொடுத்து, "கொஞ்சம் பாசம் காட்டியது."

சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகரும் அரசாங்கத்தின் நடவடிக்கையைப் பாராட்டினார்.

ஆனால் ஒருவேளை சங்கத்தின் கோபம் மிகவும் அதிகமாக இருந்திருக்கலாம், ஜூலை 9 அன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, ஜூலை 18 அன்று பகவத், சூப்பர்மேன் மற்றும் கடவுள் ஆகியவற்றை பற்றி ஒரு கருத்தை வெளியிட்டார்.

முகோபாத்யாய் கூறுகையில், "இந்தத் தடை நீக்கப்பட்ட பிறகு பாகவத் வெளியிட்ட கருத்திலிருந்து, மோதி ஜிக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. சங்கத்தின் அறிக்கைகளை கவனமாக கண்காணிக்க வேண்டும். இந்த விமர்சனம் எப்போது வேண்டுமானாலும் வேறொருவரை அமர வைக்கும் ஒரு அழைப்பாக மாறும் வாய்ப்புள்ளது” என்றார்.

அடுத்த வாரிசுக்கான தேடல் மற்றும் மோதல்

மோகன் பகவத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மோகன் பகவத்

ஒருபுறம், ஆர்எஸ்எஸ் நரேந்திர மோதி மீது கோபமாக இருப்பதாக சங்கத்திலிருந்து அறிகுறிகள் தென்படுகிறது, மறுபுறம், நாட்டின் தேசிய அரசியல் அரங்கில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் போன்ற தலைவர்கள் தோன்றுகிறார்கள்.

எனவே மோதியின் வயது , பொதுமக்களின் மாறிவரும் போக்குகள் மற்றும் பிரதமர் நரேந்திர மோதியின் அரசாங்கம் அதன் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இயங்கும் நிலை ஆகியவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இந்த காரணங்களை முன்வைத்து, தற்போதைய நிலவரப்படி, மோதியை அதிகாரத்தில் இருந்து நீக்குவது நடக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர், ஆனால் அடுத்த முகத்திற்கான தேடல், ஆய்வுகள் மற்றும் சர்ச்சைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

யோகி ஆதித்யநாத் குறித்து கடந்த காலங்களில் உத்தரபிரதேசத்தில் எழுந்த யூகங்களால் இது மேலும் வலுப்பெற்றுள்ளது.

உ.பி.யில் உள்ள பாஜக எம்.எல்.ஏ ஒருவர் பிபிசி ஹிந்தியிடம், "இன்று, சந்திப்பில் அமர்ந்திருப்பவருக்கு கூட தெரியும், பாபா (யோகி) ஏதாவது வேலை செய்தால், டெல்லியில் இருந்து நம்பர்-2 (ஷா) தொந்தரவு செய்வார் என்று."

அலகாபாத் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் டாக்டர் பங்கஜ் குமார் பிபிசியிடம் கூறினார் - "யோகியை எப்படி நீக்குவது என்று அமித் ஷாவும் யோசித்து வருகிறார்." அவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. அமித் ஷாவுக்கு நிர்வாக அதிகாரம் இருக்கும். ஆனால் பொதுமக்களின் பார்வையில் ஷா சரியாக செயல்படவில்லை." என்கிறார்.

பாஜகவைக் கண்காணிக்கும் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறும்போது, ​​“மோதிக்குப் பிறகு பாஜகவை விரும்பும் வாக்காளர்களின் தேர்வு யோகி மட்டும்தான். உ.பி.யில் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும். அமித்ஷாவை விட யோகியின் செல்வாக்கு அதிகம். இது யோகிக்கும் தெரியும். பாஜகவின் நட்சத்திர பிரசாரகர்களில் யோகி ஆதித்யநாத்தும் ஒருவர்." என்பது அவரது கருத்து.

சங்கத்தின் மீது நாட்டம் கொண்ட டாக்டர் கமல்சுர்வோ தத்தா கூறுகையில், "எந்தவொரு கட்சியிலும், இப்படி நடப்பது ஆரோக்கியமான போட்டியாக கருதப்படுகிறது. இது சண்டை அல்ல. இது அவசியமானது.”

யோகி vs ஷா?

யோகி பக்கம் நிற்கும் ஆர்எஸ்எஸ், அமித்ஷா பக்கம் நிற்கும் மோதி : அடுத்த வாரிசு யார்?

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஜூன் 5, 2024 அன்று பிரதமர் இல்லத்தில் NDA தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக வட்டாரங்கள் மற்றும் பல மூத்த பத்திரிகையாளர்களிடம் பேசினோம். தற்போது யோகிக்கும் ஷாவுக்கும் இடையேதான் போட்டி நடப்பதாக பெரும்பாலானோர் கூறுகின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆர்எஸ்எஸ் சங்கம் யாரை ஆதரிக்கும்?

நாளிதழ் ஒன்றின் ஆசிரியர் பிபிசி இந்தியிடம் கூறுகையில் - “ஆர்எஸ்எஸ் யோகி பக்கம் நிற்கிறது. யோகி பதவி விலகினால் சண்டை முடிவுக்கு வரும் என்று நம்பர்-2 (ஷா) நம்புகிறார். ஆனால் யோகியிடம் சங்கத்தின் கை பலமாக இருப்பதால், அவர் விலகிச் செல்வது கடினம்.

பாஜகவுடன் தொடர்புடைய வட்டாரங்கள் கூறும்போது, ​​“தனக்குப் பதிலாக அமித் ஷாவை நியமிக்க வேண்டும் என்று மோதி விரும்புகிறார். இங்கிருந்து ஷா, யோகியின் வேலையில் தலையிடுகிறார். மறுபுறம், யோகி அவர்களின் சொந்த மக்களுக்கு ஒரு அதிர்ச்சியை கொடுக்கிறார்.

உ.பி.யில் நடந்த ஸ்மார்ட் மீட்டர் பந்தயத்தில் அதானியின் இருப்பு மற்றும் அதன் டெண்டர் ரத்து செய்யப்பட்டது. யோகிக்கும் மோதி அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இடைவெளியை சுட்டிக் காட்டிய சில சம்பவங்கள் இவை.

மூத்த பத்திரிகையாளர் ராகேஷ் மோகன் சதுர்வேதி, “யோகி, ஷா பெயர்கள் பலரால் உச்சரிக்கப்படுகிறது” என்கிறார்.

யோகி இந்துத்துவாவின் முகம். மறுபுறம் மோதியின் திட்டங்களை செயல்படுத்துவதில் ஷா முக்கிய பங்கு வகித்துள்ளார்.

2009ல் நிதின் கட்கரியை பாஜக தலைவராக்குவது, உ.பி.யில் யோகியை முதல்வர் ஆக்குவது அல்லது ஜூன் 2005ல் முகமது அலி ஜின்னாவை மதச்சார்பற்றவர் என்று கூறி அத்வானியிடம் இருந்து பாஜக தலைவர் நாற்காலியைப் பறித்தது ஆகிய பாஜக தொடர்பான முக்கிய முடிவுகளின் பின்னால் ஆர்எஸ்எஸ் இருந்தது.

யோகி மற்றும் ஷாவைப் பற்றி குறிப்பிட்டு, பத்திரிகையாளர் விஜய் திரிவேதி கூறுகையில், "ஒரு முடிவு எடுக்கப்பட்டால், அது சங்கத்தின் ஒப்புதல், வழிகாட்டுதல்கள் மற்றும் பரஸ்பர விவாதத்துடன் முடிவு செய்யப்படலாம் என்று நான் நினைக்கிறேன்." என்றார்.

ஆர்எஸ்எஸ் யார் பக்கம்?

இத்தகைய சூழ்நிலையில், யோகி vs ஷா பற்றிய யூகங்கள் சரியானதாகக் கருதப்பட்டால், ஆர்எஸ்எஸ் சங்கம் எந்தப் பக்கம் சாயும் என்பதுதான் இப்போதைய கேள்வி.

ஆர்எஸ்எஸ் அமைப்பு இந்த பிரச்னைகள் குறித்து அதிகாரப்பூர்வமாகவோ அல்லது பகிரங்கமாகவோ கருத்து தெரிவிக்கவில்லை.

சங்கத்தில் முக்கியமான பதவியை வகிக்கும் ஒருவர், பெயர் குறிப்பிட விரும்பாத நிலையில் பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், "நேரம் வரும்போது, ஒருமித்த கருத்து எட்டப்படும் என்பது குறித்து பாஜக முடிவு செய்யும்."

எல்லா விஷயங்களிலும் பாஜகவுக்கு ஏதேனும் ஆதரவு தேவைப்பட்டால், சங்க நிர்வாகிகள் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். என்ன ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டுமோ, அதை ஆர்எஸ்எஸ் வழங்கும். ஆனால் இறுதி முடிவை பாஜகதான் எடுக்க வேண்டும்.”

"எந்த மாற்றமும் இதுவரை நிகழவில்லை என்று நாங்கள் நினைக்கிறோம்." மக்கள் யூகத்தின் அடிப்படையில் பேசிக்கொண்டே தான் இருப்பார்கள்.

இந்த மதிப்பீடு குறித்து சங்க ஆதரவாளர் டாக்டர் கமல்சுர்வோ தத்தாவிடம் கேட்டோம்.

டாக்டர் கமல்சுர்வோ தத்தா கூறுகையில், “என் கருத்துபடி, மஹந்த் யோகி ஆதித்யநாத் ஜி என்று நான் நினைக்கிறேன். அவருடன் ஹிமந்தா பிஸ்வா சர்மா, சிவராஜ் சிங் சவுகான், பியூஷ் கோயல், அனுராக் தாக்கூர்... என பல தலைவர்கள் உள்ளனர்.” என்றார்

நீங்கள் பல பெயர்களை எடுத்தீர்கள், ஆனால் அமித் ஷா பெயரை எடுக்கவில்லையா? என்று அவரிடம் கேட்டோம்.

இந்தக் கேள்விக்கு டாக்டர் தத்தா பதிலளிக்கையில், "மோதி ஜி-க்கு அடுத்தபடியாக அமித் ஷா ஜி, நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்டவர் என்று நான் நினைக்கிறேன். அவரை இரண்டாவது இடத்தில் வைப்பது ஏற்புடையதல்ல.” என்றார்.

ஆர்எஸ்எஸ் சங்கத்தின் பார்வையில் யோகி மற்றும் ஷா:

பாஜக அமைப்பினுள் அமித் ஷா வலுவான இடத்தில் உள்ளார்.

ஆதாரங்களின்படி, ஷா தனக்கு நெருக்கமான நபர்கள் அதிகபட்சமாக அமைப்பில் இருக்க வேண்டும் என்று நம்புகிறார், இதனால் நாளை தேவை ஏற்பட்டால், கட்சியில் பெரும்பாலானோர் ஷாவுக்கு ஆதரவாக பேசுவார்கள்.

ஷாவையும் மோதியையும் தனித்தனியாக பார்க்க முடியாது. இருவரும் பழைய நண்பர்கள்.

இருப்பினும், ஷாவைப் பற்றி நிபுணர்கள் கூறுகையில், யோகியிடம் ஜாதி அல்லது புகழ் காரணிகள் எதுவும் இல்லை.

மூத்த பத்திரிகையாளர் பிரதீப் சிங் பிபிசியிடம், “யோகி ஆதித்யநாத் அமைப்பைச் சேர்ந்த நபர் அல்ல. பாஜகவில் அவருக்கு எந்த தலையீடும் பங்கும் இருந்ததில்லை. அமைப்பில் உள்ள அதிகாரிகளால் யோகியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதுல் சந்திரா மற்றும் ஷரத் பிரதான், யோகி ஆதித்யநாத்தின் பின்னணியில் சங்கம் செயல்பட்டது பற்றி தங்கள் புத்தகத்தில் விரிவாக எழுதினார்கள்.

'யோகி ஆதித்யநாத்' என்ற தனது புத்தகத்தில் அவர் எழுதுகையில் - இந்துத்துவத்தின் குரல் மற்றும் வலுவான குரலாக இருப்பதால், சங்கத் தலைவர் மோகன் பகவத்தின் ஆசீர்வாதங்களைப் பெற்றவர் யோகி ஆதித்யநாத்.

அந்த புத்தகத்தின்படி, "உ.பி.யில் ஐஐடி பட்டதாரி தலைவர் மனோஜ் சின்ஹாவை விட காவி உடை அணிந்த மஹந்த் யோகி ஆதித்யநாத் சிறந்த அரசியல் புள்ளியாக இருப்பார் என்று 2017ல் மோதியை நம்பவைத்தவர் பகவத் தான்".

இதன் மூலம் உ.பி.யில் கட்சியின் இந்துத்துவா செயல்திட்டம் தெளிவாகும்.

உ.பி மற்றும் இந்தியா இந்து நாடாக இருப்பது அல்லது ஆக்கப்பட்டது குறித்து யோகி அடிக்கடி கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

'மாயா, மோதி, ஆசாத்' புத்தகத்தின் ஆசிரியர்களும், அரசியல் நிபுணர்களுமான சுதா பாய் மற்றும் சஜ்ஜன் குமார் ஆகியோர் 2017 இல் ஒரு கட்டுரை எழுதியிருந்தனர் .

இந்தக் கட்டுரையின்படி, "பாஜக- ஆர்எஸ்எஸ் சங்கத்தின் குறிக்கோள் தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமல்ல, இந்தியாவை மேலும் இந்துத்துவ நாடாக மாற்றுவது. இந்துத்துவாவை சாமானியர்களின் பார்வையில் பெரிய கலவரங்கள் இல்லாமல் ஏற்றுக்கொண்டு முஸ்லிம்களை `மற்றவர்களாகக்’ காட்ட வேண்டும் என்பதே இதன் கருத்து. இந்த பணியை யோகி ஆதித்யநாத் வெற்றிகரமாக செய்து வருகிறார். அத்தகைய சூழ்நிலையில், சங்கம் இந்த விஷயத்தில் யோகியை வெற்றிகரமான நபராகக் கருதியது.

பத்திரிக்கையாளர் விஜய் திரிவேதி கூறுகையில், ​​“யோகியை பாஜக நாடு முழுவதும் பிரசாரத்திற்கு அனுப்புகிறது. அதே நேரத்தில், உ.பி.யில் நடந்த அதிகாரப் போட்டியில், யோகியுடன் சங்கம் நிற்பதைக் காண முடிந்தது. அத்தகைய சூழ்நிலையில், யோகியின் வாய்ப்புகள் பிரகாசமாக தெரிகிறது.

ஆனால் யோகி மற்றும் ஷாவின் சாத்தியக்கூறுகளுக்கு மத்தியில், வேறு சில பெயர்கள் மற்றும் மாறும் அரசியலையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அமித் ஷா மற்றும் யோகி ஆதித்யநாத்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, அமித் ஷா மற்றும் யோகி ஆதித்யநாத்

இந்துத்துவா அல்லது சாதி

2024 மக்களவைத் தேர்தலில் ஜாதி ஒரு முக்கிய பிரச்னையாக உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

உ.பி., தேர்தல் முடிவுகளில், சமாஜ்வாதி கட்சியின் வெற்றிக்கு, பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் சிறுபான்மையினர் கூட்டணி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகால அரசியல், இந்துத்துவா என்ற ரதத்தில் சவாரி செய்வதைப் பார்த்தது, ஆனால் இப்போது இந்திய அரசியல் அதன் ரதத்தை மாற்றிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

பிபிசி ஹிந்தி நிகழ்ச்சியான தி லென்ஸில் மூத்த பத்திரிக்கையாளர் நீரஜா சௌத்ரி கூறுகையில் - ஒரு அரசியல் பிரச்னையாக, மதம் பின்தங்கியிருப்பதாகவும், சாதி முன்னோக்கி வருவதாகவும் தெரிகிறது.

வல்லுனர்கள் கூற்றுபடி, இந்துத்துவாவின் முக்கியத்துவம் மாறி, மக்களவைத் தேர்தலைப் போல பாஜக தொடர்ந்து கீழ்நோக்கிச் சென்றால், மோதி-யோகியின் டெம்ப்ளேட் மாறத் தொடங்கும். அப்படி நடக்கும்பட்சத்தில் சங்கம் மூன்றாவது நபரையும் உள்ளே கொண்டு வரலாம்.

யோகி பக்கம் நிற்கும் ஆர்எஸ்எஸ், அமித்ஷா பக்கம் நிற்கும் மோதி : அடுத்த வாரிசு யார்?

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, மோகன் பகவத் மற்றும் யோகி ஆதித்யநாத்

மோதி, யோகி, அமித் ஷா இல்லையென்றால் வேறு யார்?

மூத்த பத்திரிக்கையாளர் ராகேஷ் மோகன் சதுர்வேதி கூறுகையில், ஒருவர் கட்காரி, மற்றொருவர் ராஜ்நாத் சிங். இருவருமே இதற்கு முன் கட்சித் தலைவர்களாக இருந்துள்ளனர். ராஜ்நாத் மோதியின் வயதுடையவர். கட்கரி சற்று இளமையாக இருக்கிறார். அவர் பிரபலமானவர் மற்றும் சங்கத்துடன் உறவும் கொண்டவர். சிவராஜ் சிங் சவுகான் இவ்வளவு காலம் முதல்வராக இருந்ததால், பிரபலமான தலைவர்களில் அவரும் ஒருவர். அவருக்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.

இருப்பினும், கட்சியுடன் தொடர்புடைய வட்டாரங்கள், "மோதியும் ஷாவும் தங்கள் மக்களை பாஜகவிற்குள் நிரப்பியுள்ளனர்" என்று கூறுகின்றனர். கட்கரியையோ, சிவராஜ் சிங்கையோ முன்னிறுத்த மாட்டார்கள் என்பது அவர்களின் கருத்து.

பத்திரிகையாளர் விஜய் திரிவேதி கூறுகையில், "இந்துத்துவா அரசியல் ஆதிக்கம் செலுத்துமா அல்லது பிற பிற்படுத்தப்பட்ட மற்றும் ஓபிசி அரசியல் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதுதான் கேள்வி. இந்த இரண்டு விஷயங்களும் வாரிசு பெயரைப் பாதிக்கும். ஜாதி அரசியல் முன்னுக்கு வரும்போது, ​​கிடைக்கும் பெயர்களில் சிவராஜ் சிங் சவுகானின் பெயரே முன்னிலையில் வருகிறது.

2029, ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் வாரிசு

நரேந்திர மோதி

பட மூலாதாரம், NARENDRAMODI.IN

வாரிசுகள் பெரும்பாலும் நம் `சொந்த மக்களுக்காக’ உருவாக்கப்படுகிறார்கள், அரசியலில் இந்த `சொந்தம்’ என்னும் வரையறை மாறிக்கொண்டே இருக்கிறது.

பத்திரிக்கையாளர் பூர்ணிமா ஜோஷி கூறியதாவது- மோதி போன்ற தலைவர்கள் வேறு யாரையும் வளர விடுவதில்லை.

ஆனால் ஆர்எஸ்எஸ் சங்கத்தின் பங்கும் தலையீடும் இங்குதான் தொடங்குகிறது.

நிலஞ்சன் முகோபாத்யாய் கூறுகையில், “இன்றைய நிலவரப்படி சங்கத்துக்கும் பாஜகவுக்கும் இடையே நல்ல உறவு இல்லை. ஏபிவிபி, தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள் போன்ற ஆர்எஸ்எஸ் சார்ந்த அமைப்புகள் எந்த அளவுக்குப் பொதுமக்களின் கோபத்தை வெளிப்படுத்துகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இதைப் புரிந்து கொள்ள, சில நாட்களுக்குப் பின் செல்வோம்.

டெல்லியில் முதல்வர் கவுன்சில் கூட்டம், 27 ஜூலை 2024 இல் நடந்தது.

எதேர்ச்சையாக, அமித் ஷாவும் யோகி ஆதித்யநாத்தும் மேஜையில் அருகருகே இருந்தனர்.

நரேந்திர மோதியும், பாஜக தலைவர் ஜேபி நட்டாவும் இரு தலைவர்களுக்கு இடையே அமர்ந்திருந்தனர்.

சிலருக்கு இந்த காட்சி ஒரு பந்தயத்தின் தொடக்க காட்சி போல தோன்றலாம், அதன் பிறகு பலத்த சத்தம் கேட்கும். பின்னர் நம்பர் ஒன் ஆவதற்கான பந்தயம் தொடங்கும்.

அரசியலின் 'ஒலிம்பிக்'களில், பந்தயத்தில் கூட ஓடாத வீரர்கள் பெரும்பாலும் தங்கப் பதக்கங்களை வெல்லகின்றனர்.