மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024: வட மாநிலங்களில் நிலவரம் என்ன?

வட இந்திய மாநிலங்களின் நிலவரம் : உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக பின்னடைவு?

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ் மெயின்புரி தொகுதியில் முன்னிலை

இந்தப் பதிவைப் பார்க்க ஜாவா ஸ்கிரிப்ட் உடன் கூடிய நவீன பிரௌசர் மற்றும் சீரான இணைய இணைப்பு தேவை.

முடிவுகள் இன்னும் வரவில்லை.
ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை
முடிவுகள் இன்னும் வரவில்லை.
அண்மைத் தகவலைப் பார்க்க பக்கத்தைப் புதுப்பிக்கவும்

இந்திய மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணைய இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிகை விவரங்களின் அடிப்படையில், வட மாநிலங்களின் தேர்தல் முன்னணி நிலவரம்:

உத்தர பிரதேசம்: ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலை

வட இந்திய மாநிலங்களின் நிலவரம் : உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக பின்னடைவு?

பட மூலாதாரம், ANI

  • இரவு 11:30 நிலவரப்படி உத்தர பிரதேசத்தில் பாஜக 33 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சமாஜ்வாதி 36 இடங்களில் வெற்றியும், 1 இடத்தில் முன்னிலையும் வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
  • மெயின்புரி தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் டிம்பிள் யாதவ் 598,526 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாஜகவின் ஜெய்வீர் சிங் 376,887 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியுள்ளார்.
  • அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய உ.பி.யின் அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கே.எல். ஷர்மா 539,228 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி 372,032 வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளார்.
  • உத்தர பிரதேச மாநிலம் நாகினா மக்களவைத் தொகுதியில் ஆசாத் சமாஜ் கட்சியின் (கன்ஷிராம்) வேட்பாளர் சந்திரசேகர் 512,552 வாக்குகள் பெற்று 1,51,473 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
  • வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயைவிட பிரதமர் நரேந்திர மோதி 1,52,513 அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
  • ரேபரேலி தொகுதியில் காங்கிரஸின் ராகுல் காந்தி 687,649 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாஜகவின் தினேஷ் பிரதாப் சிங் 297,619 பெற்று தோல்வியடைந்துள்ளார்.
  • கன்னோஜ் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் 642,292 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் சுப்ரதா பதக் 471,370 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியுள்ளார்.
  • மதுரா தொகுதியில் பாஜகவின் ஹேமமாலினி 510,064 வாக்குகள் பெற்று, காங்கிரஸின் முகேஷ் தங்கரை விட 293,407 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மணிப்பூர்

மணிப்பூரின் இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

அருணாச்சல பிரதேசம்

அருணாச்சல பிரதேசத்தின் இரு தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

ஜம்மு காஷ்மீர்: மெகபூபா முஃப்தி தோல்வி

வட இந்திய மாநிலங்களின் நிலவரம் : உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக பின்னடைவு?

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, மெகபூபா முஃப்தி

ஜம்மு காஷ்மீரில் ஐந்து மக்களவைத் தொகுதிகள் உள்ளன, அவற்றில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக இரண்டு இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தியைவிட, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சியின் மியான் அல்தாப் அகமது 521,836 வாக்குகளை பெற்று, 281,794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அதேநேரம், பாரமுல்லா தொகுதியில் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா 268,339 வாக்குகள் பெற்று, சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரஷீத் ஷேக்கிடம் 204,142 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார்.

அசாம்: பாஜக முன்னிலை

பாஜக 9 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

மேகாலயா: துரா தொகுதியில் காங்கிரஸ் வெற்றி

மேகாலயாவின் 2 தொகுதிகளில் ஒன்றான ஷில்லாங் தொகுதியில், மக்கள் குரல் கட்சி வேட்பாளர் டாக்டர் ரிக்கி ஆண்ட்ரூ சிங்கன் 3,71,910 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

துரா தொகுதியில் காங்கிரஸின் சலேங் சங்மா தேசிய மக்கள் கட்சியின் அகதா சங்மாவைவிட 1,55,241 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

திரிபுரா: பாஜக வெற்றி

திரிபுராவின் இரண்டு தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இங்கு திரிபுரா கிழக்கு தொகுதியில் கிர்த்தி தேவி தேவ்பர்மன் வெற்றி பெற்றுள்ளார். திரிபுரா மேற்கு தொகுதியில் பிப்லப் குமார் தேப் வெற்றி பெற்றுள்ளார்.

மிசோரம்: மிசோரமில் உள்ள ஒரே தொகுதியில் ஜோரம் மக்கள் இயக்கத்தின் (Zoram People’s Movement) ரிச்சர்ட் வன்லால்மங்காஹியா 68,288 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

நாகாலாந்து: நாகாலாந்தில் உள்ள ஒரே தொகுதியில் காங்கிரஸின் சுபோங்மரேன் ஜமீர் வெற்றி பெற்றுள்ளார்.

பிகார்

பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) கட்சி 5 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஒடிஷா

ஒடிஷாவில் இரவு 12 மணி நிலவரப்படி, பாஜக 19 இடங்களில் வெற்றியும், ஒரு தொகுதியில் முன்னிலையும் வகிக்கிறது. காங்கிரஸ் 1 இடத்தில வெற்றி பெற்றுள்ளது.

குஜராத்: 7 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அமித்ஷா முன்னிலை

வட இந்திய மாநிலங்களின் நிலவரம் : உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக பின்னடைவு?

பட மூலாதாரம், ANI

குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளில், பாஜக 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.

காந்திநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா 1,010,972 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சோனல் ராமன்பாய் படேல் 266,256 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியுள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, போர்பந்தர் மக்களவைத் தொகுதியில் 633,118 வாக்குகள் பெற்று, காங்கிரஸின் லலித் வசோயாவைவிட 383,360 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

வட இந்திய மாநிலங்களின் நிலவரம் : உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக பின்னடைவு?

பட மூலாதாரம், ANI

மேற்கு வங்காளம்

மேற்கு வங்கத்தின் 42 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் 29 இடங்களில் வெற்றியை பெற்றுள்ளது. 11 இடங்களில் வென்றுள்ள பாஜக இரவு 12 மணி நிலவரப்படி 1 இடத்தில் முன்னிலையில் உள்ளது.

மேலும் இங்கு காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)