மேன்டோஸ் புயல் படங்கள்: சென்னையில் முறிந்த மரங்கள், சேதமான படகுகள்

மேன்டோஸ்

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ‘மேன்டோஸ்' புயல் நேற்று இரவு மாமல்லபுரத்தில் கரையைக் கடந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக 60க்கும் மேற்பட்ட சாலையோர மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

படகுகள் சேதம்

காசிமேடு துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுமார் 150 படகுகள் புயலின் தாக்கத்தால் சேதமடைந்துள்ளன.

படகுகள் சேதம்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகுகளை கரையில் பாதுகாப்பாக மீனவர்கள் நிறுத்தியிருந்த போதிலும், பலத்த காற்று காரணமாக பல படகுகள் தலைகீழாக கவிழ்ந்துள்ளன. புயலின் தாக்கம் குறைந்த பிறகே, படகுகள், வலைகள் மற்றும் மோட்டார்கள் எவ்வளவு சேதமடைந்தன என்ற முழுவிவரம் தெரியவரும் என கோவளம் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் தெரிவிக்கிறார். வெள்ளத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்குவது போல தங்களுக்கு புயல் நிவாரணம் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை வைக்கிறார்.

மேன்டோஸ் புயல்

பிரதான சாலையில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் சில இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேன்டோஸ் புயல்

அதே நேரத்தில், சாலைகளில் முறிந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் காலை முதலே சென்னை மாநகராட்சி ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுவருகின்றனர்.

மேன்டோஸ் புயல்

புயலின் தாக்கம் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், கடற்கரைக்கு மக்கள் வருவதை தவிர்க்கவேண்டும் என தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மேன்டோஸ் புயல்

மேன்டோஸ் புயல் வலுவிழந்து வட தமிழ்நாட்டுக் கடலோரப் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது என்றும் ஏறக்குறைய மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து டிசம்பர் 10 ஆம் தேதி நண்பகலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: