இலங்கையில் மீண்டும் அவசரநிலை: மக்களுக்கு என்னென்ன பாதிப்புகள்?

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் மே 6ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த சட்டத்தை பிரகடனப்படுத்துவதற்கான காரணங்களை உடனடியாக மக்களுக்கு விளக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக வெள்ளிக்கிழமை மாலையில் அவசரநிலை பிரகடன முடிவு குறித்து அமைச்சரவையின் சிறப்பு அமர்வு கூடி ஆலோசனை நடத்தியது. இத்தகைய ஒரு அவசரநிலை ஏற்கெனவே கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி ஜனாதிபதியால் அமல்படுத்தப்பட்டது. எனினும் ஏப்ரல் 5ஆம் தேதி அந்த நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது.
திடீர் நடவடிக்கை ஏன்?
இலங்கையில் மூன்று விடயங்கள் தொடர்பில் அவசரகால சட்டத்தை அமல்படுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
- நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது.
- பொது வாழ்க்கைக்கான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை பராமரித்தல்.
- பொது பாதுகாப்புக்காக.

இதேவேளை, கொழும்பிற்கான கனடா தூதர் தமது ட்விட்டர் பக்கத்தில் நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அவசரநிலை தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.


"கடந்த வாரங்களாக, இலங்கை முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் தங்களுடைய கருத்துச் சுதந்திர உரிமையை வெளிப்படுத்தும் வகையிலான அமைதியான போராட்டங்களில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டனர். அது இந்த நாட்டின் ஜனநாயகத்துக்கு அடையாளம். இத்தகைய சூழலில் இந்த அவசரநிலை அறிவிக்கப்பட்டது ஏன் என்பதை புரிந்து கொள்வது கடினமாக உள்ளது," என்று கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இதேவேளை, மக்களின் நியாயமான போராட்டங்களை அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு தடுத்து நிறுத்த முடியாது என்பதை கோட்டாபய ராஜபக்ஷ புரிந்து கொள்ள வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது ட்விட்டர் பதிவில், "பயம் மற்றும் வன்முறை மூலம் இந்த நாட்டை எந்த சூழலிலும் கோட்டபயவால் அடக்க முடியாது. அவசரகாலச் சட்டம், நெருக்கடிக்கு எந்தத் தீர்வையும் காண்பதற்கு எதிராக உள்ளது. நீங்கள் உடனே பதவி விலகுங்கள்," என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை
2022 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியால் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்படுவதை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) உன்னிப்பாக அவதானித்து வருகிறது.
ஏற்கெனவே ஏப்ரல் 2ஆம் தேதி குறுகிய காலத்திற்கு அவசரகால நிலையை ஜனாதிபதி பிரகடனப்படுத்தியபோது, தற்போதைய பொதுப் போராட்டங்கள் உட்பட தற்போதைய விவகாரங்களுக்கு அவசரகாலச் சட்டப் பிரகடனம் தீர்வாகாது என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறியிருந்தது.
இந்த நிலையில், நாடும் நாட்டு மக்களும் எதிர்நோக்கும் பாரிய நெருக்கடியை இனங்கண்டு, நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியில் உள்ள அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதில், அமைதியான போராட்டங்கள் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கவோ தன்னிச்சை கைதுகள் மற்றும் போராட்டக்காரர்களை காவலில் வைக்கவோ அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்படக் கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மீண்டும் வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளது.
அரசை வலியுறுத்தும் போராட்டங்கள் வன்முறை வடிவில் இருக்கக்கூடாது என்றும் எப்போதும் அவை அமைதியாக நடத்தப்பட வேண்டும் என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அவசரநிலை என்றால் என்ன?
பொதுப் பாதுகாப்புச் சட்டம், 'ஒரு குறிப்பிட்ட ஆபத்து அல்லது பேரழிவைத் தெளிவாகக் கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ளாமல் இருக்க அரசாங்கத்திற்கு அதிகாரங்களை வழங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், தேசிய பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதை உறுதிப்படுத்த ஜனாதிபதி அவசரகால நிலையை பிரகடனப்படுத்த அனுமதிக்கப்படுகிறார்.

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 1

அவசர நிலையை அறிவிக்கும் அதிகாரம் எங்கிருந்து வருகிறது, யாரால் அறிவிக்க முடியும்?
அரசியலமைப்பின் 155வது பிரிவின் கீழ் அவசரகால நிலையை பிரகடனப்படுத்த ஜனாதிபதிக்கு முழு அதிகாரமும் உள்ளது.
அந்த அறிவிப்பு நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும், அதற்காக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும். இந்த அறிவிப்பு நான்கு நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும்.அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது. அவசரகாலச் சட்டத்தின் பிரகடனம், அவசரகாலச் சட்டங்களை உருவாக்கும் ஜனாதிபதியின் அதிகாரம் உட்பட, பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளை நடைமுறைப்படுத்துகிறது. இந்த விதிமுறைகள் வேறு எந்த சட்டத்தையும் மீறலாம். அதே சமயம், அவை அரசியலமைப்பை மீற முடியாது.
அவசரநிலை எவ்வளவு காலம் நீடிக்கும்?
ஜனாதிபதியால் பிறப்பிக்கப்படும் அவசரநிலை நடவடிக்கை, ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும். (ஒரு மாதம் கடக்கும் முன் அவர் அதை ரத்து செய்யலாம் என்றாலும்). இந்த அறிவிப்பு நான்கு நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அந்த அறிவிப்பு ரத்து செய்யப்படும். அவசரகால நிலைமை ஒவ்வொரு 30 நாட்களுக்கும் நீட்டிக்கப்படலாம். ஆனால் அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அவசியம்.
சிவில் உரிமைகளில் அவசரகால விதிகளின் தாக்கம் என்ன?
அவசரகால விதிமுறைகள் அரசியலமைப்பின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பல அடிப்படை உரிமைகள் மற்றும் பிற சட்டங்களிலிருந்து எழும் பல உரிமைகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கின்றன.
அந்த வரம்புகள் அது தடுக்க முயலும் தீங்கிற்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்று எந்த அரசியலமைப்பு தேவையும் இல்லை. முழுக்க முழுக்க நிர்வாகிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
கட்டுப்படுத்தக்கூடிய அடிப்படை உரிமைகள்
- குற்றமற்றவர் என்ற அனுமானம்
- நம்பிக்கை மற்றும் தற்காப்பு தண்டனைக்கான சான்று
- சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் பாகுபாடு இல்லாதது
- கைது மற்றும் காவலில் வைப்பதற்கான பொதுவான சட்ட நடைமுறை
- கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடல், சங்கங்கள், இயக்கங்களின் செயல்பாடுகள், வேலைவாய்ப்பு, மதம், கலாசாரம் மற்றும் மொழி சுதந்திரம் தொடர்பான அடிப்படை உரிமைகள்
அவசரநிலை ஒழுங்குமுறையால் கட்டுப்படுத்த முடியாதவை?
- சிந்தனை மற்றும் மனசாட்சியின் சுதந்திரம்
- துன்புறுத்தல்
- தகுதியான அதிகார வரம்பிற்கு உட்பட்ட நீதிமன்றத்தின் மூலம் நியாயமான விசாரணைக்கு உரிமை
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) அவசரகால சட்டத்தைப் பொருட்படுத்தாமல் பயன்படுத்த அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது. இந்த பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரங்கள் விரிவானவை. அவற்றுக்கு அவசரகால சட்ட அதிகாரங்களைப் போலவே நாடாளுமன்ற ஒப்புதல் அவசியமாகாது.
அவசரநிலை சாதாரண குடிமக்களை எவ்வாறு பாதிக்கிறது?
இந்த அவசரகால சட்டங்கள் அமுல்படுத்தப்படும் போது பயங்கரவாத அல்லது வன்முறைச் செயல்களில் ஈடுபடாத அல்லது சந்தேகிக்கப்படும் சாதாரண குடிமக்களின் அன்றாட வாழ்க்கை பல வழிகளில் பாதிக்கப்படுவதாக சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஊடகத்தில் என்ன தாக்கம்?
குடிமக்கள் எதை வெளியிடலாம் என்பதற்கான கட்டுப்பாடுகளுக்கு மேலதிகமாக, பதிப்பகங்கள் மீதான கட்டுப்பாடு ஊடகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 2

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












