கொழும்பில் பிச்சை எடுக்க ஜனவரி முதல் தடை

பட மூலாதாரம், AFP
கொழும்பு நகரில் பிச்சை எடுப்பதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு நகருக்குள் சுமார் 600 ற்கும் அதிகமான பிச்சைக்காரர்கள் இருப்பதாக கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் வி.கே.ஏ.அநுர தெரிவித்துள்ளார்.
பிச்சை எடுப்பவர்கள் அதிகரித்துள்ளமையினால் பொதுமக்களுக்கும், நகரின் அழகுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிச்சை எடுப்பவர்களின் ஜீவனோபாயத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுப்பதுடன் அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் திட்டமொன்றையும் முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
வியாபார நோக்கில் பிச்சை எடுப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர சபையின் ஆணையாளர் வி.கே.ஏ.அநுர தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :








