செஸ் ஒலிம்பியாட்: பிரக்ஞானந்தா வெற்றி - "இன்னும் பெரிசா செய்வோம்": உதயநிதி

செஸ் ஒலிம்பியாட்

பட மூலாதாரம், @FIDE_chess

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் நிறைவு விழாவை மிகப் பெரிய அளவில் செய்யப் போகிறோம் என்று கூறியிருக்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மகனும் திமுக எம்எல்ஏவுமான உதயநிதி.

இந்த நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் இரண்டாம் சுற்று பி பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார். எஸ்டோனியா வீரரை எதிர்கொண்ட ஆட்டத்தில் கறுப்பு நிற காய்களுடன் 41ஆவது காய் நகர்த்தலில் அவர் வென்றார்.

மகளிர் ஏ பிரிவில் அர்ஜென்டீனா வீராங்கனையை எதிர்கொண்ட இந்தியாவின் தான்யா, வெள்ளை காய்களுடன் 31ஆவது நகர்த்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

முன்னதாக, நாற்பத்தி நான்காவது உலகளாவிய செஸ் ஒலிம்பியாட் ஜூலை 28 அன்று ஒரு பெரிய தொடக்க விழாவுடன் தொடங்கியது.

இந்த விழாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோதி துவக்கி வைத்தார்.

இதையொட்டி சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற கோலாகலமான தொடக்க விழாவில் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், நடிகர் ரஜினிகாந்த் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவின் சிறப்பம்சமாக இசைக்கலைஞர்கள் மற்றும் தாள கலைஞர்களின் சிறப்பான நிகழ்ச்சிகள் இருந்தன.தமிழ்நாட்டில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த முடிவெடுக்கப்பட்டதில் இருந்தே அதில் தீவிர அக்கறை காட்டி வருகிறார் உதயநிதி. சமீபத்தில், தொடக்க விழாவின் கலை அம்ச ஏற்பாடுகளை செய்திருந்த கலைக் குழுவினருக்கு உதயநிதி நன்றி தெரிவித்தார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

இந்த விளையாட்டை விளம்பரப்படுத்தும் விதமாக சென்னை நகரம் முழுவதும் டிஜிட்டல் ஃபிளக்ஸ் பேனர்கள், தொலைக்காட்சி, வானொலி விளம்பரங்கள், நாளிதழ் விளம்பரங்கள் என ஏற்பாடுகள் களைகட்டின.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

இந்த நிலையில், பிரமாண்டமான முறையில் நடந்து முடிந்த துவக்க விழா தொடர்பான மகிழ்ச்சியை அதில் பங்கெடுத்த கலைஞர்கள், தொகுப்பாளர்கள் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, கலை நிகழ்ச்சியை திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார்.

அவருக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவிக்க, அதற்கு பதில் கூறும் விதமாக, நினைவில் கொள்ள ஓர் நிகழ்ச்சி. நிகழ்ச்சி முடிந்ததுமே என்னை நேரிலும் பிறகு போனிலும் அழைத்து வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்துக்கு நன்றி. அந்த நிகழ்வில் நீங்கள் பங்கேற்றது, எனது நாளை சிறப்பித்தது என்று விக்னேஷ் சிவன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

X பதிவை கடந்து செல்ல, 4

X பதிவின் முடிவு, 4

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சின்னத்திரை புகழ் பாவனா பாலகிருஷ்ணன், ஒட்டுமொத்த குழுவின் இடைவிடாத உழைப்பால் இந்த அளவுக்கு நிகழ்ச்சி நடந்தேறியதாக தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

அவருக்கு நன்றி கூறும் விதமாக, எல்லா சுமையையும் தோளில் போட்டுக் கொண்டு முழு நிகழ்ச்சியையும் அழகாக உங்களுடைய நம்பிக்கை மிக்க குரல் வளத்தால் கொண்டு சென்றீர்கள். உங்களுடைய தொகுப்பாற்றும் திறனே உங்களுடைய ஆற்றலைப் பேசும் என்று விக்னேஷ் சிவன் கூறியிருந்தார்.

X பதிவை கடந்து செல்ல, 5
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 5

ஆனால், இவர்களின் ட்வீட் உரையாடல் இத்துடன் நிற்கவில்லை.

உதயநிதி ஸ்டாலின் பதிவிட்ட ட்வீட்டில், நேற்றைய #ChennaiChess2022 தொடக்க நிகழ்வின் பின்னணியில் இருந்த படைப்பாற்றல் குழுவிற்கு நன்றி என்று கூறி தமிழ்நாடு முதல்வர், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், விக்னேஷ் சிவன், அதிதி சங்கர் மற்றும் குழுவுக்கு நன்றி என குறிப்பிட்டிருந்தார். இத்துடன் நிறைவு விழா இதை விட மிகப்பெரியதாகவும் சிறப்பாகவும் இருக்கப் போகிறது. விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்கள் என்று உதயநிதி கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 6
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 6

முன்னதாக, செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்கமாக ஒரு இசை காணொளி வெளியிடப்பட்டது. 'வணக்கம் செஸ் சென்னை' என்று தலைப்பிடப்பட்டுள்ள அந்த காணொளியை விக்னேஷ் சிவன் இயக்கினார். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து அதில் பாடலையும் அவரே பாடியிருந்தார். தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை வலுவாக விளக்கும் வகையில் அந்த காணொளி இருந்ததாக நெட்டிசன்கள் பாராட்டை வெளிப்படுத்தினர்.

ஒலிம்பியாட்

பட மூலாதாரம், Getty Images

செஸ் ஒலிம்பியாட் போட்டியை முதல் முறையாக இணையத்தில் நேரலையாக காண ஏற்பாடு செய்திருக்கிறது நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு.

நாற்பத்தி நான்காவது உலகளாவிய செஸ் ஒலிம்பியாட், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி கிராமத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறுகிறது. FIDE செஸ் ஒலிம்பியாட்டின் இந்த பதிப்பில் திறந்தவெளி மற்றும் மகளிர் பிரிவுகளில் பல்வேறு குழுக்கள் போட்டியிடுகின்றன.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

இந்தியா, ஸ்பெயின், போலாந்து, அஜர்பைஜான், நெதர்லாந்து, யுக்ரேன், ஜெர்மனி, இங்கிலாந்து, இந்தியா2, ஆர்மேனியா, இரான், உஸ்பெகிஸ்தான், இந்தியா-3, குரோஷியா ஆகிய அணிகள் முதல் சுற்றில் 4-0 என்ற கணக்கில் சுத்தமாக வெற்றி பெற்றன.

X பதிவை கடந்து செல்ல, 7
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 7

முதல் சுற்றில், முதல்நிலை அமெரிக்க மற்றும் மூன்றாம் நிலை நார்வே அணிகள் 3.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றன. இதைத்தொடர்ந்து சனிக்கிழமை இரண்டாம் சுற்று போட்டிகள் நடைபெற்றன.FIDE செஸ் ஒலிம்பியாட் - பார்ப்பது எப்படி?44வது FIDE செஸ் ஒலிம்பியாட் மற்றும் FIDE மகளிர் செஸ் ஒலிம்பியாட் ஆகியவற்றை Chess.com/TV என்ற இணைய சேனலில் நேரலையில் பார்க்கலாம் அல்லது YouTube.com/ChesscomLive இல் இடம்பெற்ற நேரலை பக்கத்தில் பார்க்கலாம்.

YouTube பதிவை கடந்து செல்ல, 2
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 2

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: