காமன்வெல்த் 2022: பிரிட்டனில் இன்று தொடங்கும் போட்டியில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு எப்படி உள்ளது?

சிந்து

பட மூலாதாரம், Getty Images

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுகள் இன்று இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் தொடங்குகிறது.

காமன்வெல்த் போட்டிகள் என்றால் என்ன?

காமன்வெல்த் அமைப்பின் உறுப்பு நாடுகளும் அதனை சார்ந்த பிராந்தியங்களுக்கும் இடையே நடைபெறும் விளையாட்டுப் போட்டியே 'காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி' என அழைக்கப்படுகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் 72 நாடுகள் கலந்து கொள்கின்றன.

இதில் தடகளம், பேட்மின்டன், ஹாக்கி, குத்துச்சண்டை, பளு தூக்குதல், கிரிக்கெட் உள்ளிட்ட 19 போட்டிகளும், 8 பாரா விளையாட்டுகளும் இடம்பெறுகின்றன.

சுமார் 6,500 வீரர்கள் மற்றும் குழு நிர்வாகிகள் இந்த போட்டியில் கலந்து கொள்வர்.

இந்த ஆண்டின் காமன்வெல்த் போட்டிகளில் முதன்முறையாக பெண்கள் கிரிக்கெட் இடம்பெறவுள்ளது.

இந்த ஆண்டுக்கான தொடக்க விழா ஜூலை 28ஆம் தேதி பர்மிங்காமில் அலெக்சாண்டர் அரங்கில் நடைபெறும்.

காமன்வெல்த் போட்டிகள் எங்கு எப்போது நடைபெறுகிறது?

2022ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் பிரிட்டனின் பர்மிங்காம் நகரில் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்தியாவின் சார்பில் காமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள்

ஜூலை 28ஆம் தேதி தொடங்கவுள்ள காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்வதற்கான வீரர்களை தேர்வு செய்யும் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

இதுவரை பேட்மின்டன், ஹாக்கி, கிரிக்கெட், பளு தூக்குதல், குத்துச் சண்டை, டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகளுக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஒலிம்பிக்கில் பேட்மின்டனில் இதுவரை இருமுறை தங்கம் வென்ற பி.வி. சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த், லக்ஷயா சென், புல்லேலா கோபி சந்தின் மகள் காயத்ரி கோபி சந்த் ஆகியோர் உட்பட 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேரி கோம்

பட மூலாதாரம், Getty Images

குத்துச் சண்டையில் லவ்லினா உட்பட 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காயம் காரணமாக மேரி கோம் காமன்வெல்த் போட்டிகளுக்கு தேர்வாகவில்லை.

இந்த காமன்வெல்த் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஹாக்கியை பொறுத்தவரை ஆண்கள் மற்றும் மகளிர் அணி இரண்டுமே தேர்ச்சி பெற்றுள்ளன.

பளு தூக்குதல் போட்டியில் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற மீராபாய் சனு உட்பட 12 பேர் கலந்து கொள்கின்றனர்.

மல்யுத்தத்தில் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் உட்பட 12 பேர் கலந்து கொள்கின்றனர்.

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் முக்கிய வீரர்கள் யார்?

டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, மீராபாய் சனு, பி.வி. சிந்து, இந்திய ஹாக்கி அணி, லவ்லினா, உலக குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த நிகாத் ஜரீன் போன்றோர் இந்த காமன்வெல்த் போட்டிகளில் இடம்பெறுகின்றனர்.

பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவுள்ளது. இதற்காக இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா எத்தனை பதக்கங்களை வென்றது?

இந்த காமன்வெல்த் போட்டி இந்தியாவிற்கு 18ஆவது போட்டியாகும்.

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 66 பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தை பிடித்திருந்தது.

2018 போட்டியில் டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிக்கா பாட்ரா நான்கு பதக்கங்களை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

2010ஆம் ஆண்டு இந்திய தலைநகர் புது டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா அதிகபட்சமாக 101 பதக்கங்களை பெற்று பதக்க பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தது.

இதுவரை இந்தியா அதிக பதக்கங்களை பெற்றது அப்போதுதான்.

காமன்வெல்த் போட்டிகளில் பொதுவாக சிறப்பாக செயல்பட்டு வரும் இந்தியா, 2000ஆம் ஆண்டிலிருந்து பதக்க பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடித்து வருகிறது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: