அஷ்வின்: “இந்தி பேச தெரியாததால் இந்திய அணியில் நுழைந்தபோது தனிமைப் படுத்தப்பட்டேன்”

கிரிக்கெட் வீரர் அஸ்வின்

பட மூலாதாரம், GREG WOOD

திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் கிளப் சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா திண்டுக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணி வீரரான அஸ்வின் விழாவில் பங்கேற்று பரிசுகளை வழங்கினார். பின்பு அந்நிகழ்ச்சியில் பேசிய அஸ்வின், தேசிய அணியில் பங்கேற்ற ஆரம்ப நாட்களில் , தனக்கு இந்தி பேசத்தெரியாததால், குழுவில் தனிமையை உணர்ந்ததாக அவர் தெரிவித்தார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

இது குறித்து பேசிய அவர், "இந்திய கிரிக்கெட் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ஒவ்வொரு நாளும் விளையாட செல்லும் போது அழுது கொண்டே செல்வேன். வீட்டுக்கு திரும்பும் போது சிரித்துக் கொண்டே வருவேன். நான் வீட்டைவிட்டு செல்வதால்தான் அழுகிறேன் என்று பல நேரங்களில் என் பெற்றோரிடம் கூறியுள்ளேன். உண்மையில், எனக்கு இந்தி எழுதவும் படிக்கவும் தெரியும். ஆனால் பேச வராது. இதனால் நான் பேசுவதற்கு ஆளின்றி தனிமையில் விடப்பட்டேன். இதனால் நான் அழுது கொண்டே இருந்தேன்" என்று இந்தி மொழி பேச தெரியாதால் மற்ற வீரர்கள் தன்னை புறக்கணித்ததாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :