ஆந்த்ரே ரஸல், சுப்மன் கில் - முடிவுக்கு வந்த கொல்கத்தா அணியின் தொடர் தோல்விகள்

91-ஐ 80 வென்றது எப்படி? பாண்ட்யாவும், ரஸலும் நடத்திய ருத்ரதாண்டவம்

பட மூலாதாரம், Getty Images

58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து தனது அணி தடுமாறி கொண்டிருந்தபோது களத்தில் நுழைந்த ஹர்திக் பாண்ட்யா அதன்பின் நடத்தியது ருத்ர தாண்டவம் என்றுதான் கூற வேண்டும்.

9 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் என மைதானத்தின் நான்குபுறமும் பந்தை விளாசிய ஹர்திக் பாண்ட்யா, 34 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார்.

ஆனாலும், போட்டியின் முடிவு வேறு விதமாக அமைந்துவிட்டது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை நடந்த ஐபிஎல் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றது.

மிகவும் பரபரப்பான இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 2 விக்கெடுக்கு 232 ரன்கள் எடுத்தது.

கொல்கத்தாவின் பேட்டிங்கில் தொடக்கவீரர்கள் சுப்மன் கில் மற்றும் கிறிஸ் லின் ஆகிய இருவரும் தொடக்கம் முதில் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர்.

கிறிஸ் லின் 29 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். அதேவேளையில் சுப்மன் கில் 45 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார்.

சுப்மன் கில்

பட மூலாதாரம், MARTY VILLAGE / afp / getty IMMAGE

படக்குறிப்பு, சுப்மன் கில்

ஆனால், இவர்களை மிஞ்சி அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டது ஆந்த்ரே ரஸல்தான். 40 பந்தில் 6 பவுண்டரி, 8 சிக்சர்கள் என ரஸல் 80 ரன்கள் அடித்தார். இது மட்டுமல்லாமல் , 4 ஓவர்கள் பந்துவீசிய ரஸல் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்திய மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஹர்திக் பாண்ட்யாவை தவிர மற்ற வீரர்கள் யாரும் சிறப்பாக விளையாடததே அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே மற்றொரு போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி அணி மொத்தமுள்ள 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார்.

ஷ்ரேயாஸ் அய்யர்

பட மூலாதாரம், PTI

இதனையடுத்து பேட் செய்த ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :