புற்றுநோய் திரும்பி வருவதை ஆஸ்பிரின் தடுக்குமா? - பிரிட்டனில் பெரிய ஆய்வு ஆரம்பம்

பட மூலாதாரம், SPL

சிலவகை புற்றுநோய் வந்து குணமான ஒருவர் ஒவ்வொரு நாளும் ஆஸ்பிரின் மருந்தை உட்கொண்டுவந்தால் அவருக்கு அந்நோய் திரும்பி வருவது தடுக்கப்படுகிறதா என்பதைப் பரிசோதிப்பதற்காக இதற்கு முன்பில்லாத பெரிய எண்ணிக்கையிலானோரிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

அதிகமாக வரக்கூடிய ஒருவகை புற்றுநோய் வந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் சமீபத்தில் சிகிச்சை முடிந்தவர்கள் பதினோராயிரம் பேருக்கு ஆஸ்பிரின் மருந்து கொடுத்துப் பார்த்து பிரிட்டனில் நடத்தப்படுகின்ற இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ள்ளது.

நாளொன்றுக்கு முன்னூறு மில்லிகிராம் ஆஸ்பிரின் எடுப்பவர்கள், நூறு மில்லி கிராம் எடுப்பவர்கள், மருந்து எதுவும் இல்லாமல் வெற்று மாத்திரை எடுப்பவர்கள் என்று மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்கள் உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் ஐந்து ஆண்டுகாலம் கண்காணிக்கப்படவுள்ளது.