'உயரமானவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து அதிகம்': ஆய்வாளர்கள்

உயரமானவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து ஏன் அதிகம் என்பதற்கான காரணங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை

பட மூலாதாரம், Thinkstock

படக்குறிப்பு, உயரமானவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து ஏன் அதிகம் என்பதற்கான காரணங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை

புற்றுநோய் ஏற்படக்கூடிய ஆபத்து உயரமாக உள்ளவர்களுக்கு கணிசமான அளவு அதிகம் என்று சுவீடனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலதிகமாக 10 சென்டிமீட்டர் உயரம் கொண்ட ஆண்களுக்கு 11 சதவீதமும் பெண்களுக்கு 18 சதவீதமும் புற்றுநோய் ஏற்படக்கூடிய ஆபத்து அதிகம் என்று அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

கடந்த 50 ஆண்டுகளில் லட்சக்கணக்கான மக்களிடமிருந்து திரட்டப்பட்ட தரவுகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள், ஏற்கனவே பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளுடன் ஒத்துப்போகின்றன.

ஆனால், உயரமானவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து ஏன் அதிகம் என்பதற்கான காரணங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை.