ராஜா சிங் எம்எல்ஏ: ஜாமீனில் வந்தவருக்கு இரண்டே நாளில் மீண்டும் சிறை

ராஜா சிங்

பட மூலாதாரம், RAJASINGH/FB

படக்குறிப்பு, ராஜா சிங் தனது சர்ச்சைக்குரிய கருத்துகளால் எப்போதும் செய்திகளில் இடம்பிடிப்பவர்

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள எம்எல்ஏ ராஜா சிங், முகமது நபிக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளி வந்த இரண்டே நாட்களில் மீண்டும் தடுப்புக்காவல் சட்டப்படி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத் போலீஸார் தங்களுக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ராஜா சிங் மீதான கைது நடவடிக்கைகை மேற்கொண்டனர்.

ஹைதராபாத்தில் உள்ள ஷாலிபந்தா பகுதியில் ராஜாசிங் கூறியதாக சொல்லப்படும் கருத்துக்களுக்கு எதிராக ஏராளமான போராட்டக்காரர்கள் கூடினர். அவர்களைக் கலைக்க போலீசார் தடியடி பிரயோகம் செய்தனர்.

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ராஜா சிங் கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ள காணொளியில் முகமது நபியை விமர்சித்து சர்ச்சை வளையத்துக்குள் சிக்கியுள்ளார். போலீஸார் அவரை கைது செய்தபோதும், அவரை காவலில் வைக்க தாக்கல் செய்த மனுவை உள்ளூர் நீதிமன்றம் ஏற்கவில்லை. என்ன நடந்தது?

தெலங்கானா மாநிலத்தில் நபிக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக எம்எல்ஏ ராஜா சிங் போலீஸாரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். அதற்கு அடுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தது பாரதிய ஜனதா கட்சி மேலிடம். இவர் முஸ்லிம்களுக்கு எதிராக பேசுவதை வழக்கமாகக் கொண்டவர் என்று உள்ளூரில் அறியப்படுபவர்.

முனாவர் ஃபரூக்கி, தனக்கு ஹைராபாதில் இருந்த அச்சுறுத்தலையும் மீறி ஒரு ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சியை நடத்தினார். அதற்கு எதிர்வினையாற்றும் பதிலளிக்கும் விதமாக, ராஜா சிங் பதிவேற்றிய யூடியூப் காணொளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார் ராஜா சிங். இதன் மூலம் தொலைக்காட்சி ஊடகங்களில் அவர் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.

குஜராத்தில் கலவரத்தின் போது முனாவரின் தாயார் தாக்கப்பட்டதாகவும், அதனால்தான் இந்துக்களையும், பாஜகவையும் குறிவைத்து ஸ்டாண்ட்-அப் காமெடி செய்வதாகவும் தனது காணொளியில் பேசியிருந்தார் ராஜா சிங். மேலும், இந்துக் கடவுள்களைப் பற்றி முனாவர் நகைச்சுவையாகப் பேசியதால், தான் நபிகள் நாயகத்தைப் பற்றி கருத்துத் தெரிவிக்கிறேன் என்றும் அவர் காணொளியில் கூறுகிறார்.

ராஜா சிங்கின் காணொளி வெளியானதில் இருந்தே ஹைதராபாத் பழைய நகரத்தில் பெரும் பதற்றம் காணப்படுகிறது. ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் சாலைக்கு வந்து ராஜா சிங்குக்கு எதிராக முழக்கமிட்டனர். அவரை கைது செய்யக் கோரி பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் அலுவலகங்கள் முன்பு முஸ்லிம்கள் பெருமளவில் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ராஜா சிங் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 295 ஏ மற்றும் 153 ஏ பிரிவுகளின் கீழ் தெலங்கானா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து பகல் 12 மணியளவில் ராஜா சிங்கை அவரது வீட்டில் வைத்து போலீஸார் கைது செய்தனர். பிறகு அவரை பொல்லாரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்படுவதற்கு முன்னதாக ஊடகங்களிடம் பேசிய ராஜா சிங், "எனது கருத்துக்களில் நான் உறுதியாக இருக்கிறேன். சிறையில் இருந்து வெளிவந்த பிறகு இன்னொரு காணொளியை வெளியிடுவேன். சன்மார்க்கத்திற்காக இறக்கவும் தயாராக இருங்கள்" என்றார் ராஜா சிங்.

"அவர் மீது எங்களுக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன, எனவே நாங்கள் அவரை காவலில் எடுத்துள்ளோம்" என்று ஹைதராபாத் மேற்கு மாவட்ட காவல்துறையின் துணை ஆணையர் ஜோயல் டேவிஸ் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சர்ச்சை காணொளியை நீக்கிய காவல்துறை

ராஜா சிங்
படக்குறிப்பு, ராஜா சிங்

முஸ்லிம் மதத்தை இழிவுபடுத்தியதாக புகார் எழுந்ததால், ராஜாசிங் தனது வீடியோவில் கூறிய கருத்துகள் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டபோது, ​​ராஜா சிங் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். யூடியூப்பில் இருந்து தனது வீடியோவை காவல்துறை நீக்கியது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

"போலீசார் என்ன செய்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. நான் விடுதலையான பிறகு அந்த வீடியோவின் இரண்டாம் பாகத்தை வெளியிடுவேன்" என்று அவர் கூறினார்.

இந்த முழு விவகாரத்திற்கும் அகில இந்திய மஜ்லிஸ் இ இதிஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் ஒவைஸி அசாதுதீன் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.

"ஹைதராபாத் நகரம் அமைதியாக இருப்பதை பாஜக தலைவர்கள் விரும்பவில்லை போலத் தெரிகிறது. ராஜாசிங் தெரிவித்த கருத்துக்கு, பாஜக தலைவர்களும் பிரதமர் நரேந்திர மோதியும் ஆதரவளிப்பார்களா என அவர் கேள்வி எழுப்பினார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

ஒவைஸி குற்றச்சாட்டு

நீங்கள் எங்களுடன் சண்டையிட விரும்பினால், நீங்கள் அரசியல் ரீதியாக போராட வேண்டும், ஆனால் இது முறை அல்ல என்றும் ஒவைசி கூறினார்."ஹைதராபாதில் வகுப்புவாத கலவரத்தை உருவாக்க பாஜக விரும்புகிறது. நாட்டில் உள்ள முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தவும், மதங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தவும் விரும்புகிறது. நூபுர் ஷர்மா விவகாரத்தில் நடந்ததை உலகமே பார்த்த பிறகும், முஸ்லிம்களை பாஜக தொடர்ந்து அவமதித்து வருகிறது. நபிகள் நாயகத்திற்கு எதிராக ஏன் இப்படிப் பேச வேண்டும்?

ஒவ்வொரு முஸ்லிமும் இன்று கண்ணீர் சிந்துகிறார்கள். அரசியல் ஆதாயம் பெறுவதற்காக இந்த நாட்டையும், மாநிலத்தையும், நகரத்தையும் பிரிக்க பாஜக முயற்சிக்கிறது" என்று அசாதுதீன் ஒவைஸி விமர்சித்தார்.

பாஜக ராஜாசிங்

பட மூலாதாரம், TWITTER/TIGERRAJASINGH

படக்குறிப்பு, பிரதமர் மோதியுடன் ராஜா சிங் (கோப்புப்படம்)

ஆனால், இதைவிட ஓவைசியால் எப்படி சிறப்பாக பேச முடியும் என பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார்.

"ஒவைஸி முற்றிலும் தவறாகப் பேசுகிறார். பாஜக மற்றும் பிரதமர் மோதி செய்த நல்ல விஷயங்களைப் பற்றி அவர் ஒருபோதும் பேசுவதில்லை. மோதியை அவதூறு செய்வதே அவரது வேலை" என்று கிஷண் ரெட்டி கூறினார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

இதற்கிடையே, ராஜா சிங்கின் கருத்துக்கு ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

"தெலங்கானாவில் பாஜக தீயை எரித்து, இங்குள்ள மத நல்லிணக்கத்தையும் அமைதியையும் குலைக்க சதி செய்கிறது. மிகவும் சகிப்புத்தன்மை இல்லாமல் அருவருப்பான கருத்துக்களை கூறுவது மோசமானது. தெலங்கானா மதசார்பற்ற மாநிலமாக தழைத்தோங்கி வருவதை சகிக்க முடியாமல் பாஜக தலைவர்கள் சதி செய்து வருகின்றனர். விஷத்தை கக்குகிறார்கள்,'' என தெலங்கானா மாநில அமைச்சர் கொப்புலா ஈஸ்வர் கூறினார்.

"நாட்டில் இந்துக்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. இப்படி பேசினால் தேர்தலில் போட்டியிடும் தகுதி கூட இருக்காது. மற்ற மதங்களுக்கு எதிராக பேசினால் எம்எல்ஏ பதவியை இழக்க வேண்டும். சண்டையும், ஊரடங்கு உத்தரவும் இருந்தால், சிறு வியாபாரிகளும், உழைக்கும் மக்களும் எப்படி வாழ்வார்கள்?'' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஹனுமந்த ராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

கடந்த காலங்களில் பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா முகமது நபி குறித்து கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவரது கருத்துக்களால், மத்தியில் ஆளும் பாஜக அரசு வெளிநாடுகளில் இருந்து ராஜீய பிரச்னைகளை எதிர்கொண்டது. இதனால் அவரை கட்சியில் இருந்து பாஜக மேலிடம் இடைநீக்கம் செய்தது. நாடு முழுவதும் நூபுர் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சமீபத்தில் ராஜாசிங்கும் நபிகள் நாயகம் குறித்து தகாத கருத்து தெரிவித்ததாக கைது செய்யப்பட்டார். அவரை கட்சியில் இருந்து பாஜக இடை நீக்கம் செய்துள்ளது. மேலும் அவரை ஏன் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது என்பது குறித்து 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவும் கட்சி தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராஜா சிங்

பட மூலாதாரம், TWITTER/TIGERRAJASINGH

ராஜா சிங் யார்?

ராஜா சிங்கின் முழு பெயர் தாக்கூர் ராஜா சிங். ஒருமுறை கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டார். அதன் பிறகு பாஜகவில் இணைந்தார். ஹைதராபாத் கோஷாமஹால் தொகுதியில் இருந்து 2014 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வடமாநிலத்தில் இருந்து ஹைதராபாதில் குடியேறிய குடும்பத்தை சேர்ந்த ராஜா சிங், பா.ஜ.கவில் இணைவதற்கு முன், சிவசேனை கட்சியில் இருந்தார். கடந்த தெலுங்கானா சட்டமன்ற தேர்தலின் போது, ​​உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹைதராபாத் வந்து பிரசாரம் செய்தார்.

"எனக்கு முஸ்லிம் வாக்குகள் வேண்டாம். "தர்மத்திற்காக தேவைப்பட்டால் கொல்லவும் சாகவும் தயார்" போன்ற பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை அப்போது ராஜா சிங் வெளியிட்டார். அவரது சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அவரது பல இடுகைகள் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து 2020ஆம் ஆண்டு செப்டம்பரில் 'ஃபேஸ்புக்' நிறுவனம் ராஜா சிங்கின் கணக்கை முடக்கியது. இன்ஸ்டாகிராமும் அவரது பக்கத்தை நீக்கியது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: