BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

பட மூலாதாரம், Twitter/VigneshShivN
வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம். எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.
கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம். நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும்.
பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை வேறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அந்த வகையில், இந்த வாரம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம், மித்தாலி ராஜ் ஓய்வு, உடல்நலம், நூபுர் ஷர்மா விவகாரம் மற்றும் சர்வதேச பிரச்னை சார்ந்த ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்: வைரலான புகைப்படங்கள்

பட மூலாதாரம், Twitter/VigneshShivN
நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் வியாழக்கிழமையன்று (ஜூன் 9) சென்னை, மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய திருமணத்திற்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரை பிரபலங்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
இதையடுத்து, திருமண புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக ஊடக பக்கங்களில் வெளியிட அது வைரலானது. திரை பிரபலங்கள் முதல் பொது மக்கள் வரை பலரும் தங்களது வாழ்த்துகளை நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு சமூக ஊடகங்களில் தெரிவித்தனர்.
இதுகுறித்து மேலும் படிக்க இங்கே சொடுக்குங்கள்.
புரோட்டீன் பவுடர் சாப்பிடுவதால் பக்கவிளைவுகள் ஏற்படுமா?

பட மூலாதாரம், Getty Images
உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும், எடையைக் குறைக்க வேண்டும் என்பன போன்ற காரணங்களுக்காக புரோட்டீன் பவுடர் எனப்படும் புரத மாவுகளை எடுத்துக் கொள்ளும் வழக்கம் பரவலாகக் காணப்படுகிறது.
உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்பவர்கள், வெவ்வேறு விளையாட்டுகளில் ஈடுபடுவோர் மத்தியில் இது அதிகமாக உள்ளது. இப்படி புரதத்தை தனியாக எடுத்துக் கொள்வது நல்லதா, உண்மையில் புரதத்தின் தேவை என்ன என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு உணவியல் நிபுணர் ரம்யா ராமச்சந்திரன் அளித்திருக்கும் பதில்கள் இங்கே.
இந்த கட்டுரையை தொடர்ந்து படிக்க: புரோட்டீன் பவுடர் சாப்பிடுவதால் பக்கவிளைவுகள் ஏற்படுமா?
நூபுர் ஷர்மா: முகமது நபி பற்றிய சர்ச்சை - முழு விவரம்

பட மூலாதாரம், Getty Images
பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகளால் இந்தியாவின் பன்னாட்டு உறவுகளில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் நூபுர் ஷர்மா கூறிய கருத்துக்கள், இந்திய முஸ்லிம்களை கொதிப்படையச் செய்தது. பத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகளையும் கொந்தளிக்க வைத்தது.
சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அரசின் நிலைப்பாடு அல்ல என்றும் அவை "உதிரி சக்திகளின் கருத்துகள்" என்றும் கூறி கோபமடைந்த இஸ்லாமிய நாடுகளை அமைதிப்படுத்தும் முயற்சியில் இந்தியத் தூதர்கள் ஈடுபட்டார்கள்.
இந்திய தூதரகங்களின் இந்த கருத்தை எப்படி புரிந்துகொள்வது? மேலும் படிக்க இங்கே ளிக் செய்யுங்கள்.
'இந்திய பெண்கள் கிரிக்கெட் ராணி' மித்தாலி ராஜ் செய்த சாதனைகள்

பட மூலாதாரம், Getty Images
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
23 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத இடத்தில் இருந்த மித்தாலி குறித்த சில முக்கிய தகவல்கள் இங்கே.
இந்த கட்டுரையை படிக்க இங்கே சொடுக்குங்கள்
"யுக்ரேன் போரால் உலகளவில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம்"

பட மூலாதாரம், Getty Images
யுக்ரேன் போரால் தொடங்கிய உணவு நெருக்கடி பல ஆண்டுகளுக்கு நீடிக்கலாம் என, உலக வர்த்தக மையத்தின் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, கோதுமை மற்றும் உரங்கள் பற்றாக்குறையால் ஆப்பிரிக்க நாடுகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என, உலக வர்த்தக அமைப்பு தலைமை இயக்குனர் எங்கோசி ஒகொன்ஜோ-இவேலா பிபிசியிடம் தெரிவித்தார்.
லட்சக்கணக்கிலான டன்கள் அளவுக்கு தானியங்கள் சேமிப்புக் கிடங்களில் கிடத்தப்பட்டுள்ளன. அவை போர் காரணமாக யுக்ரேன் துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலதிக தகவல்களை அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













