நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்: குவிந்த திரை பிரபலங்கள்; வைரலான புகைப்படங்கள்

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்: குவிந்த திரை பிரபலங்கள்; வைரலான புகைப்படங்கள்

பட மூலாதாரம், Twitter/VigneshShivN

நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் வியாழக்கிழமையன்று (ஜூன் 9) சென்னை, மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய திருமணத்திற்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட திரை பிரபலங்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.

இதையடுத்து, திருமண புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக ஊடக பக்கங்களில் வெளியிட அது வைரலானது. திரை பிரபலங்கள் முதல் பொது மக்கள் வரை பலரும் தங்களது வாழ்த்துகளை நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு சமூக ஊடகங்களில் தெரிவித்தனர்.

திரைப்படத்தில் நடித்தபோது மலர்ந்த காதல்

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்: குவிந்த திரை பிரபலங்கள்; வைரலான புகைப்படங்கள்

பட மூலாதாரம், Twitter/VigneshShivN

'லேடி சூப்பர் ஸ்டார்' என ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'நானும் ரௌடிதான்' திரைப்படத்தில் நடித்தார். அப்போது முதல் அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அதனை வெளிப்படையாக தெரிவித்து வந்தனர்.

இருவரும் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள், பிறந்த நாள், பண்டிகைகளை ஒன்றாக கொண்டாடும் புகைப்படங்களை அவ்வப்போது இயக்குனர் விக்னேஷ் சிவன், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்தார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

கடந்த சில மாதங்களாகவே, இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தங்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக, நயன்தாரா அறிவித்தார். இந்நிலையில், திருமணம் ஜூன் 9 அன்று நடைபெற உள்ளதாக, விக்னேஷ் சிவன் அறிவிக்கவே, தொடர்ந்து திருமண பத்திரிகையும் சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்நிலையில், இருவரின் திருமணம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் வியாழக்கிழமையன்று (ஜூன் 9) காலை நடைபெற்றது. இருவரின் தரப்பிலிருந்தும் திருமண புகைப்படங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. அவர்களுடைய திருமணத்திற்கு பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருமண விருந்தின் மெனுவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ட்விட்டரில் அவர்களுடைய திருமணம் தொடர்பான ஹேஷ்டேக்குகள் இந்தியளவில் டிரெண்டாகி வருகின்றன.

திருமணத்திற்கு முன்னதாக, விக்னேஷ் சிவன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இன்று ஜூன் 9. இந்த நாள் நயனுக்கானது" எனவும், திருமணத்தை தன் வாழ்வின் புதிய அத்தியாயம் என்றும் தெரிவித்திருந்தார்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

பட மூலாதாரம், @wikkiofficial

இத்திருமணத்தில் ஷாருக்கான், ரஜினிகாந்த், கார்த்தி, இயக்குனர் மணிரத்னம், திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்ற வண்ணம் உள்ளனர்.

நடிகை நயன்தாராவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கிய 'காத்து வாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. நயன்தாரா நடித்த 'O2' திரைப்படம் சில தினங்களில் வெளியாகவுள்ளது. ஷாருக்கானை வைத்து இயக்குனர் அட்லி இயக்கும் 'ஜவான்' திரைப்படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காணொளிக் குறிப்பு, நயன்தாராவை கரம் பிடித்த விக்னேஷ் சிவன் - பங்கேற்ற பிரபலங்கள் யார், யார்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: