பீயூஷ் ஜெயின்: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் - உ.பி அரசியல் அதிர என்ன காரணம்?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், அனந்த் ஜனானே
- பதவி, லக்னெளவில் இருந்து, பிபிசி இந்திக்காக
உத்தர பிரதேசின் கன்னோஜின் வாசனை திரவிய வியாபாரி பீயூஷ் ஜெயின் விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் பரஸ்பரம் பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகின்றன. இந்த அரசியல் பேச்சுகள் காரணமாக விசாரணை தொடர்பான உண்மைகள் முற்றிலும் குழப்பமடையத் தொடங்கியுள்ளன.
"யோகி ஜி, ஒட்டுமொத்த மாநிலத்திடமும் பொய் சொல்லி உங்கள் அன்புக்குரியவரை நீங்கள் காப்பாற்றியுள்ளீர்கள்!"என்று சமாஜ்வாதி கட்சி புதன்கிழமை ட்வீட் செய்தது,
தொழிலதிபர் பீயூஷ் ஜெயினிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பணத்தை ஆமதாபாதில் உள்ள டிஜிஜிஎஸ்டிஐ (ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம்) விற்றுமுதல் தொகையாகக் கருதியதாக செய்தித்தாளில் வெளியிடப்பட்ட செய்தியையும் அக்கட்சி அந்த ட்வீட்டில் பகிர்ந்துள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.
"அதிகாரிகள், தெரிந்தோ தெரியாமலோ, வழக்கை வலுவிழக்கச் செய்துள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில், அபராதத் தொகையை செலுத்திவிட்டு பீயூஷ் ஜாமீன் பெற முடியும். நடவடிக்கை எடுக்க முடியாது, இதில், வருமான வரித்துறையும் கருப்புப் பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது," என்று நிபுணர்களை மேற்கோள் காட்டி அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
177 கோடி ரூபாய்க்கு வரி செலுத்தவில்லை என்றும், 31 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் விசாரணையில் பீயூஷ் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், வரி அபராதம் மற்றும் வட்டியுடன் சேர்த்து இந்த தொகை 52 கோடி ரூபாய் ஆகும்.
சமாஜ்வாதி கட்சியின் கூட்டணிக்கட்சியான ராஷ்ட்ரிய லோக்தளமும், இந்த செய்தியை ட்வீட் செய்து கேள்வி எழுப்பியுள்ளது.
"கான்பூரில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் 177 கோடி ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்த பிறகு அந்த விவகாரம் இப்போது மூடி மறைக்கப்படுகிறது. கைபற்றப்பட்ட இந்தப்பணம் விவகாரத்தில் பிரதமர் நேற்று எதிர்க்கட்சிகளை திருடர்கள் என்று கூறி இருந்தார். இத்தனை தம்பட்டம் அடித்துவிட்டு, இப்போது யாரைக்காப்பாற்ற முயற்சி நடக்கிறது? இதில் பங்கு எதுவும் கிடைத்துள்ளதா," என்று ராஷ்ட்ரிய லோக் தளம் தனது ட்விட்டர் பதிவில் கேள்வி கேட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
பீயூஷ் ஜெயின் வரியை மட்டும் செலுத்திவிட்டால் அவருக்கு நிவாரணம் கிடைத்துவிடுமா என்று இந்த ட்வீட்களுக்குப் பிறகு ஊகங்கள் தொடங்கியுள்ளன.

பட மூலாதாரம், ANI
கைது செய்யப்பட்டதன் அடிப்படை என்ன?
பீயூஷ் ஜெயின் கைதுக்கு ஒப்புதல் அளிக்கும் உத்தரவை பிபிசி ஆய்வு செய்தது. அதன்படி, பீயூஷ் ஜெயின், டிசம்பர் 25ஆம் தேதி அளித்த வாக்குமூலத்தில், மூன்று நிறுவனங்கள் மூலம் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த நிறுவனங்களின் பெயர்கள் Odochem Industries, Odosynth Inc மற்றும் Flora Natural . அவற்றின் மூலம் பியூஷ் ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தினர் வாசனை திரவிய கலவைகளை வழங்கும் வணிகத்தை சட்டவிரோதமாக நடத்துகின்றனர்.
கான்பூர் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 177 கோடியே 45 லட்சம் ரூபாய் பணம், இந்த மூன்று நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் சட்டவிரோத விநியோகம் தொடர்பான வணிகம் மூலம் கிடைத்தது என்று பீயூஷ் ஜெயின் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் உத்தரவில் எழுதப்பட்டுள்ளது. இதன்மூலம் பீயூஷ் ஜெயினுக்கும், அவரது சகோதரர் அம்பரீஷ் ஜெயினுக்கும் சட்டவிரோத சலுகைகள் கிடைத்துள்ளன.
பீயூஷ் ஜெயின் ஜிஎஸ்டியின் பல்வேறு பிரிவுகளை மீறி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்துள்ளார், சரியான முறையில் வரி இன்வாய்ஸ் வழங்கவில்லை, கணக்குகள் பராமரிக்கவில்லை ,நிறுவனத்திடம் அவரது வணிகம் தொடர்பான பதிவுகள் இல்லை, நிறுவனத்திற்கு வரும் சப்ளை மற்றும் நிறுவனத்திலிருந்து வழங்கப்படும் பொருட்களின் சப்ளை விவரங்களை வழங்கவில்லை, சுய-மதிப்பீட்டு வரி செலுத்தவில்லை மற்றும் ஜிஎஸ்டிக்கு பொருந்தும் விகிதத்தில் வரி செலுத்தவில்லை,' என்பது விசாரணையில் தெரியவந்த உண்மைகளில் இருந்து தெளிவாகக் கண்டறியப்பட்டுள்ளது என்று உத்தரவில் எழுதப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு தொகை 5 கோடி ரூபாய்க்கும் அதிகம். இந்தச் செயல் ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றமாகும். ஜிஎஸ்டி சட்டத்தின் 132(5) பிரிவின் கீழ் இது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகும்.
இந்த உண்மைகள் மற்றும் அவை தொடர்பான குற்றங்களின் அடிப்படையில் பீயூஷ் ஜெயினை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜெயின் டிசம்பர் 26 அன்று கைது செய்யப்பட்டார்.

பட மூலாதாரம், ANI
நிவாரணம் கிடைக்குமா?
"பீயூஷ் ஜெயின் வழக்கு சட்டப்படி விசாரிக்கப்படும். இந்த வரியை செலுத்துவதன் மூலம் அவருக்கு விலக்கு அளிக்கப்படும் என்று எங்கும் எழுதப்படவில்லை. மாண்புமிகு நீதிமன்றம் குற்றத்தை கவனத்தில் கொண்டு அவரை ரிமாண்ட் செய்துவிட்டது," என்று டிஜிஜியின் சிறப்பு அரசு வழக்கறிஞர் அம்பரீஷ் டாண்டன் கூறினார்.
அம்பரீஷ் டாண்டன், முழு விஷயத்தையும் விரிவாக விளக்கினார். " பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும், இந்திய குடியரசுத்தலைவர் பெயரில் எஃப்டிஆர், அதாவது ஃபிக்ஸ்ட் டெபாசிட் செய்யவேண்டும் என்றும் எங்கள் எஸ்ஐஓ, விண்ணப்பம் அளித்திருந்தார். அதன்படி எஃப்டிஆர் அளிக்கப்பட்டுவிட்டது. இப்போது இந்திய குடியரசுத்தலைவரின் கணக்கில் இருக்கும் 177 கோடி ரூபாயை எடுத்து 52 கோடி ரூபாய் டெபாசிட் செய்ய முடியுமா என்ன?," என்று அவர் வினவினார்.
"52 கோடி வரி செலுத்த வேண்டுமென்று அவர் ஒப்புக்கொண்டுள்ளார். நாங்கள் 52 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளோம் என்று அவர் பிரமாணப் பத்திரம் கொடுத்துள்ளார். இப்போது அவரிடமிருந்து 52 கோடி ரூபாய் கண்டிப்பாக பெறப்படும். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 177 கோடி ரூபாய் குடியரசுத்தலைவரின் பெயரில் FDR ஆகிவிட்டது. அது பின்னர் கவனிக்கப்படும். இதனால் செலுத்தவேண்டிய வரி மேலும் அதிகரிக்கும். இது ஜிஎஸ்டியின் விதிகளின் கீழ் கணக்கிடப்படும். விசாரணை இன்னும் தொடர்கிறது" என்றார் அவர்.
அரசியல் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்க அம்பரீஷ் டாண்டன் மறுத்துவிட்டார்.
பீயூஷ் ஜெயினின் வழக்கறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்?
டிசிஜிஐயின் இந்தக் கூற்றுகள் தவறானவை என்று பீயூஷ் ஜெயினின் வழக்கறிஞர் சுதீர் மால்வியா கூறினார்.
"பீயூஷ் ஜெயின் அப்படியொரு வாக்குமூலத்தை அளிக்கவில்லை. இதை DGGI தனது விசாரணையில் எழுதியுள்ளது. நான் ஜாமீன் மனுவை சமர்பிக்கும்போது அதற்கு பதிலளிப்பேன். தற்போது அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்பு எங்கள் தரப்பு நடவடிக்கைகளை எங்களால் பகிரங்கப்படுத்த முடியாது," என்று சுதீர் மால்வியா தெரிவித்தார்.
"என்னிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை என் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்தால், எனது கணக்கில் இருந்து 52 கோடியை எடுத்துக் கொள்ளுங்கள்," என்று பீயூஷ் ஜெயின் காவலின்கீழ் இருந்தபோது, விண்ணப்பம் கொடுத்தது உண்மைதான்.
ஆனால் ஜிஎஸ்டி அதை இன்னும் தனது கோப்பில் சமர்ப்பிக்கவில்லை. இந்தத் தொகையை RTGS (பரிமாற்றம்) செய்ய வங்கிக்கு விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது இன்னும் நடக்கவில்லை. நாங்கள் இதுவரை எந்த அபராதமும் செலுத்தவில்லை, இந்தப் பணத்தை அந்தத் தொகையிலிருந்து கழிக்க வேண்டும் என்று மட்டுமே எழுதியுள்ளோம். அது தொடர்பாக இதுவரை எதுவும் நடக்கவில்லை," என்றார் அவர்.
பறிமுதல் செய்யப்பட்டது என்ன?
பீயூஷ் ஜெயினின் கான்பூர் வீடு மற்றும் பிற இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 177 கோடியே 45 லட்சம் ரொக்கம் மீட்கப்பட்டுள்ளது என்று டிஜிஜிஐ தெரிவித்தது. ரொக்கத்தை எண்ணிமுடிக்க டிஜிஜிஐ க்கு மூன்று நாட்கள் எடுத்தது. கான்பூரில் நடந்த சோதனையில் சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஜெயினின் கன்னோஜ் வீடு மற்றும் தொழிற்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் 19 கோடி ரூபாய் ரொக்கம், 23 கிலோ தங்கம், வாசனை திரவியங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஏராளமான ரசாயனங்கள் மற்றும் 6 கோடி ரூபாய் மதிப்பிலான 600 கிலோ சந்தனம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகவும், டிஜிஜிஐ தெரிவித்துள்ளது. பீயூஷ் ஜெயினின் கன்னோஜ் வீட்டில் ஒரு பாதாள அறையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்ட 23 கிலோ தங்கத்தில் வெளிநாட்டு அடையாளங்கள் இருப்பதால் இது தொடர்பான விசாரணை டிஆர்ஐயிடம் (வருவாய் புலனாய்வு இயக்குனரகம்) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தற்போது, சோதனை நிறுத்தப்பட்டுள்ளது, ஆனால் ஆதாரங்களின் அடிப்படையில் மேலும் சோதனை நடத்தப்படலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், ANI
பரஸ்பர அரசியல் குற்றச்சாட்டுகள் ஓயவில்லை
பீயூஷ் ஜெயினின் அரசியல் உறவு பற்றி இதுவரை விசாரணையில் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் SP-BJP இடையே கடுமையான அரசியல் போர் வெடித்துள்ளது.
கடந்த டிசம்பர் 29-ம் தேதி பாஜக புதிய வீடியோவை வெளியிட்டது. அதில் முதல்வர் யோகி ஆதித்யநாத், "அகிலேஷ் ஜி 'பெர்ஃப்யூம் நண்பரிடம் இருக்கும் கருப்புப்பண மலை யாருடையது," என்று கேள்வி எழுப்பினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
உத்தரபிரதேசத்தில் நடந்த பாஜக வின் 'ஜன் விஸ்வாஸ்' யாத்திரையில் எஸ்பி தலைவர் அகிலேஷ் யாதவை பீயூஷ் ஜெயினுடன் இணைக்க அமித் ஷா முயன்றார், "எஸ்பி தலைவரின் வாசனைத் திரவிய நண்பரிடமிருந்து திடீர் சோதனையில் 250 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்று மாநில மக்களிடம் எஸ்பி தலைவர் சொல்லவேண்டும்," என்றார் அவர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
மறுபுறம், சமாஜ்வாதி கட்சித் தலைவரும், மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், மாநிலத்தில் மேற்கொள்ளும் தேர்தல் பயணங்களில் விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், சமாஜ்வாதி கட்சிக்கும் பீயூஷ் ஜெயினுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 5
பீயூஷ் ஜெயினுக்கு எதிரான விசாரணை தொடரும்போது, பரஸ்பர அரசியல் தாக்குதல் இன்னும் கூர்மையாகக்கூடும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். பீயூஷ் ஜெயின் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.
பிற செய்திகள்:
- விண்வெளியில் 312 நாட்கள்: சோவியத்தின் 'கடைசி குடிமகன்' பூமி திரும்பியதும் சந்தித்த அதிர்ச்சி
- இரானில் தண்ணீர் தட்டுப்பாடு: முதலைகளிடம் இருந்து தப்பிக்கும் மனிதர்கள் - அதிர்ச்சித்தகவல்
- 2021ல் இந்திய கிரிக்கெட் - இந்தியாவின் கப்பா வெற்றி முதல் விராட் கோலியின் கேப்டன் பதவி வரை
- தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது? - கூட்டுறவுத்துறை அறிவிப்பு
- 15 - 18 வயது சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடுவது 'அறிவியல்பூர்வமற்றதா'? வல்லுநர்கள் சொல்வது என்ன?
- ஜிஹாதிகளுக்கு ஆதரவாக மதப் பிரசங்கம் செய்ததாக பிரான்ஸில் மூடப்பட்ட மசூதி
- 'விண்வெளியில் மோத வந்த செயற்கைக்கோள்' - ஈலோன் மஸ்க் நிறுவனம் மீது ஐ.நா-வில் சீனா புகார்
- புத்தாண்டு 2022: 2021இல் பெரும் பொருளாதார அழிவை ஏற்படுத்திய அசாதாரண வானிலை நிகழ்வுகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













