கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியின் சார்பாக போட்டியிட்ட விஜய் வசந்த் ஒரு லட்சத்து 37 ஆயிரத்துக்கு மேலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
அவரை எதிர்த்து பாஜக சார்பாக போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் 4,38,087 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.
விஜய் வசந்த் 5,76,037 வாக்குகளையும், அவரை எதிர்த்து பாஜக சார்பாக போட்டியிட்ட பொன் ராதாகிருஷ்ணன் 4,38,087 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதனால், விஜய் வசந்த் 1,37,950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் வெற்றிபெற்ற வசந்த் அண்ட் கோ வணிக நிறுவனரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான வசந்தகுமார், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்றுக்குப் பிந்தைய சிகிச்சையின்போது உயிரிழந்தார். இதனால், அவர் மக்களவைக்கு தேர்வான கன்னியாகுமரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
அந்த தொகுதியில் காங்கிரஸ் உறுப்பினரும் வசந்தகுமாரின் மகனுமான விஜய் வசந்த்துக்கு போட்டியிட கட்சி மேலிடம் வாய்ப்பு வழங்கியது.
கன்னியாகுமரியில் தனது தந்தை வசந்தகுமார் கண்ட கனவை நனவாக்குவதே தலையான கடமை என்று கூறி வந்த விஜய் வசந்த், தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளதால், அதன் மூலம் அவருககு கிடைத்த பிரபலம் தொகுதி மக்களை நெருங்க உதவியது.
2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் முக்கிய போட்டியாளராக இருந்த பாரதிய ஜனதா கட்சியின் பொன்.ராதாகிருஷ்ணனை வசந்தகுமார் தோல்வியடைய செய்தார். இப்போது அவரது மகனான விஜய் வசந்த்திடமும் பொன். ராதாகிருஷ்ணன் தோல்வி அடையும் வகையில் தேர்தல் முன்னிலை நிலவரம் உள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இதற்கிடையே, தனது தேர்தல் வெற்றி முடிவு உறுதியாகும் கட்டத்தில் இருந்தபோது, தனது ட்விட்டர் பக்கம் மூலம் தொகுதிவாசிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் விஜய் வசந்த்.
விஜய் வசந்த் - யார் இவர்?
1983 ம் ஆண்டு மே மாதம் 20 தேதி வசந்த் அன்ட் கோ வணிக நிறுவன உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகனாக விஜய் வசந்த் பிறந்தார்.
திரைப்பட நடிகரும், விளம்பர மாடலாக விஜய் வசந்த் விளங்கினார்.
கடந்த ஆண்டு தந்தையின் மறைவுக்கு பின்பு, வசந்த் அன்ட் கோ வணிக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.
தந்தை இறந்த பின்னர் காலியான நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்குதல் செய்த காங்கிரஸ் கட்சியின் மேலிடம் இந்த தொகுதியை விஜய் வசந்த்-க்கு ஒதுக்கியது.
தேர்தல் வேட்பாளராக களம் கண்ட முதல் முயற்சியிலேயே கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வஜய் வசந்த் குமார் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
திரைப்பட பிரபலம்
2007ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கி, வெளிவந்த சென்னை 600028 என்ற தமிழ்த் திரைப்படத்தில் விஜய் வசந்த், கோபி என்ற பாத்திரத்தில் அறிமுகமானார்.
பின்னர், தோழா, சரோஜா (கௌரவ தோற்றம்), நாடோடிகள், மங்காத்தா (கௌரவ தோற்றம்), நண்பன் (2012), மதில்மேல் பூனை, பிரியாணி (கௌரவ தோற்றம்), என்னமோ நடக்குது, உன்னை தெரியாம காதலிச்சுட்டேன், மாஸ், பாவாடை, வெற்றிவேல் (கௌரவ தோற்றம்), சென்னை 600029 பாகம் 2, அச்சமின்றி, வேலைக்காரன் (2017) ஆகிய திரைப்படங்களில் விஜய் வசந்த் நடித்துள்ளார்.
பிற செய்திகள்:
- பினராயி விஜயன்: கேரளாவில் 'வேட்டி கட்டிய மோதி' ஆக அழைக்கப்பட்ட முதல்வர்
- தமிழக தேர்தல் முடிவுகள்: சமூக ஊடகங்களில் பிரபலங்கள் சொல்வது என்ன?
- "நான் அவர்களிடம் படுக்கை கேட்டேன், அவர்கள் எனக்குச் சடலங்களைக் காட்டினார்கள்"
- கொரோனா தடுப்பூசி தேவையை இந்தியாவால் பூர்த்தி செய்து கொள்ள முடியுமா?
- என்ஜிடி நிபுணத்துவ உறுப்பினர் பதவியை ஏற்க மறுத்த கிரிஜா வைத்தியநாதன்
- 18 வயதுக்கு மேல் கொரோனா தடுப்பூசி: மோதி அரசின் அறிவிப்பை செயல்படுத்த மாநிலங்கள் தயாரா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












