எடப்பாடி பழனிசாமி பேட்டி: தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு திடீர் செய்தியாளர் சந்திப்பு

பட மூலாதாரம், Edappadi Palaniswami FB
சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாகவிருக்கும் நிலையில், கூட்டுறவுக் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி ஆகியவற்றை அறிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மு.க. ஸ்டாலின் சொன்னதால் இவற்றைச் செய்யவில்லை என கூறினார்.
சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். தொடக்கத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்திப்பார்கள் என கூறப்பட்ட நிலையில், முதல்வர் மட்டும் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அதில் அவர் பின்வரும் விவரங்களை தெரிவித்தார்: "புயல், வெள்ளம், வறட்சியால் விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடனை ரத்துசெய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள். அதை ஏற்று 12,110 கோடி ரூபாய் கடனை ரத்து செய்திருக்கிறோம். 16 லட்சத்து 43 ஆயிரம் பேர் இதில் பயன் அடைந்திருக்கிறார்கள். விவசாயிகள் தங்கள் பம்ப்செட்களுக்கு மும்முனை மின்சாரம் வேணடுமென கோரிக்கை வைத்தார்கள். அதை ஏற்று ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் அளிக்கப்படும்.
ஏழை மக்கள் தங்கள் செலவுகளுக்காக கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்திருக்கிறார்கள். ஆகவே 6 சவரனுக்குக் குறைவாக அடமானம் வைத்த நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுக்கள் தாங்கள் வாங்கிய கடனை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள். அந்தக் கடனையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளேன்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
ஆனால், எதிர்கட்சித் தலைவர் தான் சொல்லித்தான் முதல்வர் கடன்களை ரத்துசெய்வதாக கூட்டங்களில் பேசி வருகிறார். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கட்சிக்கும் ஒரு கொள்கை உண்டு. அவர்கள் ஆட்சியில் இல்லை. எதை வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், ஆட்சியில் உள்ளவர்கள் சிந்தித்து, கணக்கிட்டுத்தான் அறிவிப்பாக வெளியிட முடியும். நாங்கள் இப்படி கணக்கிடும்போது அதைத் தெரிந்துகொண்டு, நாங்கள் சொல்லித்தான் அறிவித்ததாக தவறான பிரச்சாரத்தைச் செய்து வருகிறார் ஸ்டாலின். மக்களுக்கு என்ன தேவை என்று தெரிந்துகொண்டு செய்கிறோம்.
நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்ததால், மக்களின் பிரச்சனைகள் எனக்குத் தெரியும். அவர்களுக்கு எந்த காலகட்டத்தில் என்ன தேவை எனத் தெரிந்து அறிவித்துள்ளோம்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
மாநிலம் நிதி நெருக்கடியில் இருக்கும்போது இவ்வளவு செலவுபிடிக்கும் அறிவிப்புகளைச் செய்தால் எப்படி சமாளிக்க முடியுமென செய்தியாளர்கள்கேட்டபோது, இந்தியா முழுவதும் கடன்வாங்கித்தான் செலவழித்துக்கொண்டிருக்கிறார்கள். யாரும் நிதியை வைத்துக்கொண்டு திட்டத்தை அறிவிப்பதில்லை. மக்கள்தான் முக்கியம். ஆகவே இம்மாதிரி அறிவிப்பை வெளியிடுகிறோம். மத்திய அரசுக்கும் கடன் இருக்கிறது. அவர்கள் திட்டங்களை அறிவிக்காமல் இருக்கிறார்களா?கடன் வாங்காத மாநிலம் கிடையாது. வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன் வாங்கி செலவழித்ததால்தான் மாநிலத்தின் ஜிடிபி உயர்ந்துள்ளது. இந்தக் கடன்கள் எல்லாம் வளர்ச்சித் திட்டங்களுக்கான கடன்.
2011ல் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கோடி கடன் இருந்ததை மு.க, ஸ்டாலினே ஒப்புக்கொண்டிருக்கிறார். அப்போது இருந்த நிதி நிலை என்ன, இப்போது நிதி நிலை என்ன? இப்போதைய சூழலுக்கு ஏற்றபடி கடன் வாங்க வேண்டியுள்ளது. தி.மு.க. உலக வங்கியில் கடன் வாங்கிதான் திட்டங்களை செலவழித்தார்கள். நாளுக்கு நாள் திட்டச் செலவு அதிகரிக்கிறது. ஆகவேதான் கூடுதலாக கடன் வாங்க வேண்டியுள்ளது. மக்களுக்குத் தேவையான திட்டங்களுக்காக இதைச் செய்கிறோம்.
தி.மு.கவைப் பொறுத்தவரை விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென நாடாளுமன்றத்திலோ சட்டமன்றத்திலோ குரல் கொடுத்தார்களா என்றால் இல்லை. தேர்தல் வந்தால் குரல் கொடுக்கிறார்கள். எல்லா கட்சியுமே அவரவர் நிலைப்பாட்டை சொல்வார்கள். எங்களைப் பொறுத்தவரை அன்றைக்கு என்ன தேவையோ அதைச் செய்கிறோம். வறட்சி நிவாரணம், புயல் நிவாரணம் கொடுத்தோம். இப்படி விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டதால், கடனைத் தள்ளுபடி செய்தோம்.
தேர்தலுக்கும் இந்த அறிவிப்புக்கும் சம்பந்தமில்லை. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் என்ன சொல்கிறார் என்றால், நாங்கள் அறிவிக்கிறோம், செய்வதில்லை என்று சொல்கிறார். ஆகவேதான் எங்கள் அரசு சொல்வதைச் செய்வோம் என்று காட்டியிருக்கிறோம்.
மாநிலத்தின் கடன் நெருக்கடியைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்வோம். நபார்ட் வங்கியுடன் தொடர்பு கொண்டு ஐந்து ஆண்டுகளில் பிரித்துக் கட்டுவோம். கடந்த முறையும் அதேதான் செய்தார்கள். விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கிவருகிறோம்."
டெண்டர் விடுவதில் ஊழல் இருப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தது குறித்துக் கேட்டபோது, "ஈ டெண்டரில் எப்படி ஊழல் செய்ய முடியும். 40,000 கோடி ரூபாய் திட்டம் என்றால், உடனடியாக அதைச் செய்ய முடியாது. காவரி - குண்டாறு திட்டத்தை எடுத்துக் கொள்வோம். முதலில் குறிப்பிட்ட தொகைதான் ஒதுக்கியிருக்கிறோம். தி.மு.க. ஆட்சியிலும் இப்படித்தான். பெரும்பாலான திட்டம் உலக வங்கி மூலமாக நிறைவேறும் திட்டம். அதன் விதிகளுக்கு உட்பட்டுத்தான் வெளியிட முடியும்.
ஆளுநரிடம் என் மீது புகார் தெரிவித்திருக்கிறார்கள்.அந்த டெண்டர் முன்பே ரத்து செய்யப்பட்டுவிட்டது. பிறகு, ஜனவரியில் இரண்டாக பிரிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டு, மீண்டும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கென நிதியும் ஒதுக்கப்பட்டவில்லை. வேலையும் நடக்கவில்லை. இதில் எப்படி ஊழல் நடக்க முடியும்?
நான் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமெனச் சொன்னபோது எதிர்க்கட்சியினர் எவ்வளவு அராஜகம் செய்தார்கள் என எல்லோருக்கும் தெரியும். கட்சியை உடைக்க சதி செய்தார்கள். எங்கள் கட்சியிலிருந்தவர்கள் தி.மு.க. தூண்டுதலில் வெளியேறினார்கள். இடைத் தேர்தலில் வெற்றிபெற்று, நான்காண்டு காலம் நிறைவுசெய்திருக்கிறோம்.
நாங்கள் ஆட்சியேற்றபோது கடுமையான வறட்சி. அதற்குப் பிறகு, புயல், அதற்குப் பிறகு கொரோனா தாக்குதல். இவை எல்லாவற்றையும் சிறப்பாக சமாளித்தோம். தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதற்குக் காரணம், ஆர்.டி.பிசிஆர் சோதனை அதிகம் செய்ததுதான். இதனால்தான் கொரோனா குறைந்திருக்கிறது.
கொரோனோ காலத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்து உதவி செய்தோம். குடும்ப அட்டைக்கு ஆயிரம் கொடுத்தோம். பொங்கலுக்கு 2,500 ரூபாய் கொடுத்தோம். மக்களுக்கு பக்கபலமாக இருந்து துன்பத்திலிருந்து மீட்டெடுத்தோம்" என்றால் முதலமைச்சர்.
மூத்த காவல் துறை அதிகாரி மீது பாலியல் துன்புறுத்தல் புகார் வந்தது குறித்துக் கேட்டபோது, அந்த விவகாரம் விசாரணையில் இருக்கிறது என்று மட்டும் தெரிவித்தார்.
"60 வயதுக்கு ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டது குறித்துக் கேட்டபோது, 2019ல் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருப்பதாகத் தெரிவித்தார். புதிய புதிய வேலை வாய்ப்புகளை அரசு மட்டும் தர முடியாது. இந்தியாவிலேயே தொழில் துவங்க சிறந்த மாநிலம்" என்றும் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- பெர்முடா முக்கோணத்தில் மாயமான கப்பல்கள், விமானங்களுக்கு என்ன ஆனது? #MYTHBUSTER
- மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா. பாண்டியன் காலமானார்
- மலேசிய பள்ளிப் பாடப்புத்தகத்தில் பெரியார் பற்றிய குறிப்புகள் – திடீரென எழுந்த எதிர்ப்புகள்
- செளதி அரசரிடம் பேசிய அமெரிக்க அதிபர் பைடன்: என்ன விவாதிக்கப்பட்டது?
- தங்கம் விலை 35,000 ரூபாய்க்கு கீழ் சரிந்தது - அண்மைய நிலவரம்
- இந்தியா Vs இங்கிலாந்து 3வது டெஸ்ட்: இரண்டே நாளில் போட்டி முடிய காரணம் என்ன?
- "திமுக ஆட்சியில் ஊழல், அதிமுக ஆட்சியில் கருணை" - கோவை கூட்டத்தில் பட்டியலிட்ட பிரதமர் மோதி
- ஷிவ் குமார் தாக்குதல்: சரமாரி எலும்பு முறிவுகளை உறுதிப்படுத்தும் மருத்துவ அறிக்கை - EXCLUSIVE
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












