உசிலம்பட்டி சூப்பர் மார்க்கெட்டில் மன்னிப்பு கடிதம் எழுதி வைத்து விட்டு திருட்டு

உசிலம்பட்டியில் மன்னிப்பு கடிதம் எழுதி வைத்து விட்டு திருட்டு

பட மூலாதாரம், What Laptop Magazine / getty images

படக்குறிப்பு, சித்தரிக்கும் படம்

முக்கிய இந்திய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணையப் பக்கங்களில் வெளியான செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: திருடியதற்கு மன்னிப்பு கடிதம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சுமார் 65,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் 5,000 ரூபாய் பணத்தை திருடிச் சென்ற நபர் ஒருவர் தான் திருடியதற்காக மன்னிப்புக் கடிதம் ஒன்றை அந்த கடையில் விட்டுச் சென்றுள்ளார்.

"என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு பசிக்கிறது. உங்களுக்கு இது ஒருநாள் வருவாய்தான். ஆனால் என் குடும்பத்தின் மூன்று மாத வருவாய்க்கு இது சமம். மீண்டும் ஒரு முறை என்னை மன்னித்துவிடுங்கள்," என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

இந்த திருட்டு உசிலம்பட்டி - மதுரை சாலையில் உள்ள ஒரு கடையில் நிகழ்ந்துள்ளது என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை காலை கடையின் உரிமையாளர் ராம்பிரகாஷ் கடையை திறக்க வந்தபோது கடைக்குள் இருந்த இரண்டு கணிப்பொறிகள், ஒரு தொலைகாட்சி மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை களவு போயிருந்தது தெரியவந்தது.

கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் கடையில் பதிவாகியுள்ள கைரேகைகள் ஆகியவற்றை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்து தமிழ் திசை: சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கிய இந்தியர்கள் பட்டியல்

சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் 2வது பெயர் பட்டியலை மத்திய அரசிடம் சுவிட்சர்லாந்து அளித்துள்ளது என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.

Representational image

பட மூலாதாரம், iStock

இந்தியா - சுவிட்சர்லாந்து நாடுகள் இடையே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், தானியங்கி முறையில் தகவல் பரிவர்த்தனை செய்து கொள்ளும் விதிமுறையின் கீழ் இந்தப் பட்டியல் அளிக்கப்பட் டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் பெடரல் வரி நிர்வாகத்துடன் இந்தியா உள்ளிட்ட 86 நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. சர்வதேச நிதி கணக்கியல் தகவல் பகிர்வு ஒப்பந்தத்தின் அடிப் படையில் அந்நாட்டில் பணத்தை பதுக்கியுள்ளவர்கள் விவரத்தை அந்தந்த நாடுகளுக்கு அளிக்க இந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளது.

தினமணி: நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 9.5 சதவீதம் வீழ்ச்சி

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 9.8 சதவீதமும், மூன்றாவது காலாண்டில் 5.6 சதவீதமும் பின்னடைவைச் சந்திக்கும் என்று கணிக்கப்படுகிறது என்று இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளாா் என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

coronavirus latest news

இறுதி காலாண்டில் (2021-ஆம் ஆண்டு ஜனவரி முதல் மாா்ச் வரை) நாட்டின் பொருளாதாரம் சரிவிலிருந்து மீண்டு வளா்ச்சிப் பாதைக்குத் திரும்பும். அப்போது ஜிடிபி வளா்ச்சி 0.5 சதவீதமாக இருக்கும். ஒட்டுமொத்தமாக நடப்பு நிதியாண்டில் ஜிடிபி 9.5 சதவீதம் வீழ்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

வங்கிகள் பெறும் கடன் உள்ளிட்டவற்றுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்றும் இந்திய ரிசா்வ் வங்கி அறிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: