இந்தியாவில் கொரோனா வைரஸ் - கோவிட்-19 தொற்றால் அதிகம் உயிரிழப்பவர்கள் யார்?

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்றின் நிலவரம் என்ன என்பதை இந்திய அரசு தினசரி அடிப்படையில் தகவல்களை வெளியிட்டு வருகிறது.
இந்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது வெளியிட்ட சில முக்கிய தகவல்களின் தொகுப்பு:
X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
- இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 14,378 பேரில் இதுவரை 480 பேர் உயிரிழந்துள்ளனர்; 1992 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
- நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் 13.85 சதவீதமாகவும், உயிரிழந்தோர் விகிதம் 3.3 சதவீதமாகவும் உள்ளது.
- நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில், 14.4 சதவீதம் பேர் 0-45 வயதுப் பிரிவையும், 10.3% பேர் 45-60 வயதுப் பிரிவையும், 33.1% பேர் 60-75 வயதுப் பிரிவையும், அதிகபட்சமாக 42.2% பேர் 75 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுப் பிரிவையும் சேர்ந்தவர்கள்.
- கோவிட்-19 தொற்று காரணமாக உயிரிழந்தவர்களில் 83% பேருக்கு ஏற்கனவே வேறு உடல்நலக் கோளாறுகள் இருந்தன.
- நாட்டின் 23 மாநிலங்களில் உள்ள 47 மாவட்டங்களில் கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் வேகமாக உள்ளது.
- அதே வேளையில், 45 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் ஒருவருக்கு கூட நோய்த்தொற்று உறுதிசெய்யப்படவில்லை.
- இந்தியாவில் ஏற்பட்டுள்ள மொத்த நோய்த்தொற்று பாதிப்பில் 4,291 பேர் (29.8%) டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.
- தமிழகத்தில் கோவிட்-19 நோய்த்தொற்று உறுதியானவர்களில் 84% பேர், டெல்லியில் 63% பேர், தெலங்கானாவில் 79%, ஆந்திரப்பிரதேசத்தில் 61% பேர் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 59% பேர் இந்த ஒற்றை நிகழ்வில் பங்கேற்றவர்கள் அல்லது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களாவர்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:








