கொரோனா வைரஸ்: சார்க் அவசரகால நிதி, இந்தியா 1 கோடி டாலர் தரும்: மோதி அறிவிப்பு Coronavirus India Latest News

மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்.

சார்க் நாடுகளின் தலைவர்களுடன் கொரோனா தொற்று அபாயம் குறித்து வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஞாயிற்றுக்கிழமை உரையாடிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, "கோவிட்-19 அவசரகால நிதி என்ற பெயரில் ஒரு நிதியை நாம் உருவாக்கலாம். தன்னார்வமாக நாடுகள் இதற்குப் பங்களிக்கலாம்" என்று யோசனை தெரிவித்தார்.

இந்த நிதிக்கு தொடக்க பங்களிப்பாக இந்தியா 1 கோடி அமெரிக்க டாலர்கள் வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இத்தாலியில் இருந்து 211 மாணவர்கள்

இத்தாலியில் இருந்து 211 இந்திய மாணவர்கள் டெல்லி வந்தனர். இத்தாலியில் இருந்து இந்தியா வந்த அனைவரும் 14 நாட்களுக்கு இந்தியா திபெத் எல்லையில் உள்ள சாவ்லா பகுதியில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

கொரோனா வைரஸ்: மூடப்பட்ட மைசூரு அரண்மனை,இந்தியாவில் அதிகரிக்கும் பாதிப்பு - சில தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புக்காக

இந்தியாவில் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 107 ஆக (இந்தியாவில் வாழும் வெளிநாட்டவர்களையும் சேர்த்து) (மார்ச் 15ஆம் தேதி மதியம் 12 மணிவரை) உயர்ந்துள்ளது என சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Banner image reading 'more about coronavirus'

இரானில் இருந்து 236 இந்தியர்கள் ராஜஸ்தானின் ஜெய்சல்மீருக்கு அழைத்து வரப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் கூறுகிறார். இரானிலிருந்து வந்த அனைவரும் இந்திய ராணுவ சுகாதார மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கேரளாவிலிருந்து துபாய் புறப்பட்ட துபாய் பவுன்ட் எமிரேட்ஸ் விமானத்திலிருந்த இங்கிலாந்து பயணி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அதே விமானத்திலிருந்த 289 பயணிகள் தங்களின் பயணத்தை மேற்கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது.

கொரோனா வைரஸ்: மூடப்பட்ட மைசூரு அரண்மனை,இந்தியாவில் அதிகரிக்கும் பாதிப்பு - சில தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. புனேவில் மட்டும் 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், மகாராஷ்டிரம் முழுவதும் திரையரங்கங்கள், வர்த்தக மையங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் சுகாதாரத் துறையினர் நகரங்கள் முழுவதும் சோடியம் தெளித்து வருகின்றனர்.

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் 31 பேருக்கு கொரோனா : 24 மணி நேர நிலவரம் என்ன ?

பட மூலாதாரம், Getty Images

ஆந்திராவின் திருப்பதி கோயிலில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் மேற்கொள்ளும் வழிமுறையை நிறுத்தி உள்ளனர். மாறாக வெவ்வேறு நேரத்தில் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் 7, 8, 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் மார்ச் 31ம் தேதி வரை நடைபெறாது என அம்மாநில கல்வித் துறை அமைச்சர் சுரேஷ் குமார் அறிவித்துள்ளார்.

Banner
Banner

ஒடிஷா மாநிலத்தில் கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளத்தில் தவறான தகவல் தகவல் பரப்பியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஃபேஸ்புக்கில் கொரோனா பாதிப்பு உள்ள ஒருவர் உள்ளூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தவறான தகவலைப் பரப்பியதாக அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஒடிஷா காவல் துறையினர் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ்: மூடப்பட்ட மைசூரு அரண்மனை,இந்தியாவில் அதிகரிக்கும் பாதிப்பு - சில தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

கோவாவின் கத்தோலிக்க தேவாலயம் மக்களை பிரார்த்தனை நிகழ்வுகளிலும், பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது. மேலும் தேவாலய பாதிரியார்களைக் கையை சுத்தம் செய்த பின்பு புனித நீர் அல்லது தொட்டு ஆசிர்வதித்தல் உள்ளிட்ட சம்பிரதாயங்களை மேற்கொள்ளுமாறு பாதிரியார்களுக்குத் தேவாலய நிர்வாகிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மைசூரு அரண்மனை மார்ச் 22 வரை மூடப்பட்டிருக்கும, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கர்நாடக மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: